ஜெயலலிதா உடல்நிலை பற்றி எதுவும் தெரியாது! கைவிரித்த ஓ. பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற எந்த விபரமும் தெரியாது என விசாரணை ஆணையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்திடம் கூறியுள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த சந்தேகங்களை ஜெயலலிதா சார்ந்த கட்சியினர் எழுப்பியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளிப்படையாக ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வருகின்றனர். அந்த … Continue reading ஜெயலலிதா உடல்நிலை பற்றி எதுவும் தெரியாது! கைவிரித்த ஓ. பன்னீர்செல்வம்

2024 தேர்தல்: காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? பிரசாந்த் கிஷோர் யோசனை

ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம், பாஜக, திரினாமுல் காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் காங்கிரஸ் எப்படிப்பட்ட … Continue reading 2024 தேர்தல்: காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? பிரசாந்த் கிஷோர் யோசனை

சினிமாவில் நடிக்க உதயநிதி ரூ. 30 ஆயிரம்தான் சம்பளம் வாங்கினாரா?

நரேன் ராஜகோபாலன்முட்டாளாக போகும் தமிழக வாக்காளனுக்கு, ஒன்றும் செய்ய முடியாத, கையறு நிலையில் இருக்கும் ஒரு தமிழ்நாட்டு குடிமகன் எழுதுவது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திமுக வேட்பாளரும், இளைஞரணி தலைவருமான திரு. எஸ். உதயநிதி வேட்பு மனு தாக்கலின் போது சமர்பித்த affidavit விவரங்களை நேற்று பதிந்து இருந்தேன். சிரிக்கிறதுக்கான மேட்டர் இல்லை அது, ரொம்ப சீரியசான மேட்டர். உதயநிதி சமர்ப்பித்ததில் அவருடைய வருவாய் ரூ. 1,50,17,700 (2017-18) ரூ. 4,00,090 (2018-19) ரூ. 4,89,520 (2019-20) என்று சொல்லப்பட்டு … Continue reading சினிமாவில் நடிக்க உதயநிதி ரூ. 30 ஆயிரம்தான் சம்பளம் வாங்கினாரா?

ரஜினிக்கும், கமலுக்கும் எங்கிருந்து பணம் வருகிறது? பத்திரிகையாளர் மணி | வீடியோ

ரஜினிக்கும், கமலுக்கும் எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்து பத்திரிகையாளர் மணி ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணல்.. நன்றி: நியூஸ் ஃபோகஸ் தமிழ் https://www.facebook.com/100051618376288/videos/217358849994726/

பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்

குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு.  ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் … Continue reading பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்

திருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன?

தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இயக்க அரசியலை முன்னெடுத்து நேரடியாக களத்தில் நிற்கும் ஒரு நபரே தவிர ஒரு தலைமறைவு இயக்கத்தையோ, ஒரு ஆயுதக் குழுவை நடத்தி வரும் போராளி இல்லை

பெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை

மனுஷ்ய புத்திரன் பொம்மை அரசனின் படைகளுக்கு வீரம் இப்போது அதிகரித்துவிட்டது கடமை இப்போது அதிகரித்துவிட்டது அவர்கள் இப்போது சோளக்காட்டு காவல் பொம்மைகளையும் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள் எனது ஒரு துண்டு நிலத்தை தரமாட்டேன் என்று சொன்ன மூதாட்டியை இருபது காவலர்கள் புடைசூழ இழுத்துச் செல்லும் புகைப்படங்கள் இன்று காணகிடைக்கின்றன எங்கள் காற்றை நஞ்சாக்காதே என்று சொன்ன ஒரு சிறுவனின் முதுகை சில நாட்களுக்கு முன்னர்தான் அவர்கள் உரித்திருந்தார்கள். அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது அச்சம் அவர்களை நிதானமிழக்க … Continue reading பெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை

“கொள்கை வேறுபட்டிருக்கலாம்; ஆனால் சகித்துக்கொள்ளமாட்டேன்”: லெனின் சிலை தகர்ப்பு குறித்து மமதா

திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்காத நிலையில் பாஜகவினர் மாநிலம் முழுவதும் வன்முறையை அரங்கேற்றி வருகின்றன. இடதுசாரி அரசியல்வாதிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். தெற்கு திரிபுராவில் உள்ள பெலோனா நகரத்தின் கல்லூரி சதுக்கத்தில் அமைந்திருந்த புரட்சியாளர் லெனின் சிலையை பாஜகவினர் ஜெசிபி இயந்திரம் துணையுடன் அகற்றினர். லெனின் சிலை மண்ணில் வீழ்ந்தபோது 'பாரத் மா கி ஜெய்' என அவர்கள் முழங்கினர். இது வீடியோவாக வெளியாகி … Continue reading “கொள்கை வேறுபட்டிருக்கலாம்; ஆனால் சகித்துக்கொள்ளமாட்டேன்”: லெனின் சிலை தகர்ப்பு குறித்து மமதா

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது. ஐந்து சுற்று எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தினகரன் 24,550 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார். மதுசூதனன் 10687 வாக்குகளும் மருதுகணேஷ் 5519 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் கலைகோட்டுதயம் 962 வாக்குகளும் பாஜகவின் கரு. நாகராஜன் 318 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

டிடிவியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றி: ஆனால் திமுக?

கவிதா சொர்ணவல்லி டிடிவி ஜெயிப்பார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆர்கேநகர் நிலவரங்களை தொடந்து கவனிக்க... வேண்டாம் வேடிக்கை பார்த்திருந்தால் கூட இது தெரிந்திருக்கும். அவருக்கு அங்கு எதிரிகளே இல்லை. அதுதான் உண்மை. இந்த இடைதேர்தல் என்பது, வென்றேயாக வேண்டியது என்ற கட்டாயம் தினகரனுக்கு மட்டுமே இருந்தது.அவர் அதில் முழு முனைப்புடன் இறங்கினார். அவருக்காக, அவருடைய ஆட்கள் அங்கே உயிரைக் கொடுத்து பணியாற்றினார்கள். ஈபிஎஸ்-ஒபிஎஸ் அணி மீது மக்களுக்கிருந்த அதிருப்திகளை வாக்குகளாக்குவதில் கோட்டை விட்டது திமுக. அவ்வளவு ஏன் … Continue reading டிடிவியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றி: ஆனால் திமுக?

சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புகிறது: சிபிஎம்

2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பல புதிய கேள்விகளையே எழுப்பியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. 2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சி, “ 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் காரணமாக ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்பதை சி.ஏ.ஜி அறிக்கை தெளிவாக்கியிருந்தது. உச்ச நீதிமன்றமும், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தவறிழைத்த சில தொலைத்தொடர்பு நிறுவனங்களை குற்றஞ்சாட்டியதுடன் அவர்களுடைய லைசன்சையும் ரத்துச் செய்திருந்தது. சிபிஐ இவ்வழக்கில் போதுமான வாதங்களை … Continue reading சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புகிறது: சிபிஎம்

அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது: 2 ஜி வழக்கு தீர்ப்பு குறித்து மு. க. ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி “அநீதி வீழும் அறம் வெல்லும்” என்று சொன்னதைப் போல, இன்றைக்கு “அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது” என திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஏழு ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி ஓ.பி. சைனி தன்னுடைய தீர்ப்பில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தகவல் தொடர்பு துறை … Continue reading அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது: 2 ஜி வழக்கு தீர்ப்பு குறித்து மு. க. ஸ்டாலின்

ஆர்.கே.நகரும் முதலாளித்துவத் தேர்தல் முறையின் கணக்கு வழக்கும்

ஸ்ரீரசா 1977-ல் அதிமுக வேட்பாளர் ஐசரி வேலன் 28,416 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் 1991-ல் இங்கு 66,710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.கே.சேகர் பாபு 2001-ல் 74,888 வாக்குகளும், 2006-ல் 84,462 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றார். தற்போது திமுக துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் எஸ்.பி.சற்குணபாண்டி யன் 1989-ல் 54,216 வாக்குகளும், 1996-ல் 75,125 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2011 … Continue reading ஆர்.கே.நகரும் முதலாளித்துவத் தேர்தல் முறையின் கணக்கு வழக்கும்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலைவிட ஏ.ஆர்.முருகதாஸ் ஆபத்தானவர்!

ஏ.ஆர்.முருகதாஸ் அதிகார வர்க்கத்தின் (Bureaucracy) படுமோசமான பாசிசத் தன்மை வாய்ந்த ஏதோ ஒருபிரிவுக்கு பிரச்சாரப் படங்கள் எடுக்கிறார்.

டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ.பன்னீர் செல்வம் அணி இணைந்ததை அடுத்து, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார். அவர்களில் எம்.எல்.ஏ … Continue reading டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’

மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு. கிருஷ்ணசாமி தன் மகளுக்கு மருத்துவ சீட்டை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடன் கேட்டு பெற்றதாக, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவு வைரலானது.  இதுகுறித்து கிருஷ்ணசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, ‘அந்தப் பொம்பளையை நான் பார்த்ததே இல்லை’ என பேசினார். இந்நிலையில் மரு. கிருஷ்ணசாமி சட்டசபையில் என்ன பேசினார், தன் மகளுக்கு மருத்துவ சீட் பெற்ற விடயத்தை சட்டசபையில் சொன்ன அதிமுக எம்.எல்.ஏ. யார் என வெளிபடுத்தியுள்ளார் வீடியோ பதிவர் … Continue reading மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

17 வயது தலித் பெண்ணின் மருத்துவ கனவு தூக்கில் தொங்கவிடப்பட்டது…

மத்திய அரசின் அரக்கத்தனம், மாநில அரசின் கையாலாகாத்தனம் - இவை இரண்டும் மட்டுமா அனிதாவின் மரணத்திற்குக் காரணம்?
நமக்குப் போதிய சுரணை எப்போது வரப் போகிறது?

கிருஷ்ணன், விநாயகர் வழிபாடுகளை வெறும் எள்ளல்,வசைகளால் அணுகுவது சரியா?

ரபீக் ராஜா புராணங்களில், தற்போதைய "அறிவியல் தன்மை" இருக்கமுடியாது. ஆனால், புராணம் வழி கட்டப்பட்ட, "சூதும் தந்திரமும்" உழைக்கும் மக்களைச் சுரண்ட, சமூக ஒப்புதலைப் பெற்றுத்தருவது நீடிக்கிறது. பதினெட்டுப் புராணங்களும் வரலாற்றின், வல்லாதிக்கத்துக்கும், எளிய மக்களின் மீதான கொடுமைகளுக்கும் இடையேயான போராட்டங்களைப் பூடகமாகச் சொல்பவையே. "பெண்வழிச் சமூகக் கட்டமைப்பை, ஆண்வழிச்சமூக ஆதிக்கமாக மாற்றுவது, வர்ண வளர்ச்சியின் புற எதிர்ப்பைத் தன்வயமாக்குவது, வைதீக எதிர்ப்பைத் தந்திரமாக வளைப்பது, பன்மையை ஒற்றையாக்கி மேலாதிக்கத்தை நிறுவுவது, வெவ்வேறு நிலப்பகுப்பு இருந்தபோதும், சமயம் … Continue reading கிருஷ்ணன், விநாயகர் வழிபாடுகளை வெறும் எள்ளல்,வசைகளால் அணுகுவது சரியா?

”அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகையா?”

“அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகையா?” என கேள்வி எழுப்பியுள்ளார் எழுத்தாளரும் திமுக நட்சத்திர பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன். தனது முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருமானவரி செலுத்துபவர் ஒருவர் இருக்கும் குடும்பங்கள், ஃப்ரிட்ஜ் வைத்திருக்கும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுகெல்லாம் இனி ரேஷன் கிடையாது என தமிழக அரசின் கெஸட்டில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் உணவு அமைச்சர் காமராஜ் தற்போதைய பொது வினியோக திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது, மத்திய … Continue reading ”அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகையா?”

“பன்றி” யார்? : பகுதி -3 

தேசிய/மாநில விருது பெற்ற இயக்குனர் ரோஹித், முத்து கிருஷ்ணனின் மரணத்தை முன்னிட்டு தலித் அமைப்புகளை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறார்...

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மறியல் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நடத்திய மறியல் போராட்டத்தில் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். நீட் நுழைவுத் தேர்வை கைவிட்டு, தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளித்திடல் வேண்டும். அனைத்து பகுதி மக்களையும், தொழில்களையும் பெரிதும் பாதித்துள்ள ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்திட வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாக ரத்து … Continue reading இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மறியல் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது

கமலின் கருத்துகள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை : கனிமொழி

நடிகர் கமல்ஹாசனை திமுக இயக்குவதாக கூறுவதில் உண்மை இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“திமுக என்பது மாபெரும் இயக்கம். அதில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு வேறு யாருடைய உதவியும் தேவையில்லை. கமலை இயக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. கமல் போன்ற பிறரின் உதவி திமுகவிற்கு தேவையில்லை. கமல்ஹாசன் அவருடைய கருத்துக்களை சொல்லி வருகிறார். அது பற்றி நான் ஒன்றும் சொல்வதிற்கில்லை” … Continue reading கமலின் கருத்துகள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை : கனிமொழி

கமல்ஹாசனுக்கு அரசியல் புதிதல்ல!

உண்மைத் தமிழன் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அண்ணன் கமல்ஹாசன் அரசியல்வாதிகளை திட்டாமல் இருந்ததில்லை. "அவருக்கு இவர் பரவாயில்லை.. இவருக்கு அவர் பரவாயில்லை என்பது போலத்தான் இன்றைய தமிழக அரசியல் இருக்கிறது..." என்று பத்தாண்டுகளுக்கு முன்பே சொன்னவர் கமல்ஹாசன். ஜெயலலிதாவின் கொடூரமான முதல் ஆட்சிக் காலத்தில் ரஜினிக்கும் முன்பாகவே அதிமுக ஆட்சியைக் கண்டித்தவர் அண்ணன் கமல்ஹாசன்தான். அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் கருத்துரிமை தடுக்கப்படுவதாகச் சொல்லி கமல்ஹாசன், கனிமொழி, ஹிந்து என்.ராம் போன்றோர் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பின் … Continue reading கமல்ஹாசனுக்கு அரசியல் புதிதல்ல!

“நாட்டுக்கு தேவை வேலை வாய்ப்புகள்” வெற்று ஆரவாரங்கள் அல்ல !

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 2 லட்சம் அய்டி ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

கருப்புப் பணத்தை சம்பளமாக வாங்கியதில்லை என ரஜினி அறிவிப்பாரா? சுப. உதயகுமாரன் கேள்வி

ரஜினிகாந்த் ஆண்டவனிடம் தொலைபேசி வழியாகவோ. மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ பேசிவிட்டு கட்சித் துவங்கட்டும். ஆனால் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்னர் கீழ்க்காணும் விடயங்களை அவர் கட்டாயம் செய்தாக வேண்டும்

பத்ம வியூகத்தில் பிரம்மாஸ்திரம்!

ஒரு ஆயா ட்ரான்ஸ்பரைக்கூட அப்ரூவல் இல்லாமல், பண்ண முடியாது என்கிற போது தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்துவதெல்லாம் பெரிய விஷயமா என்ன?

நான் ஒரு போதும் மோடியின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை: எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ்

“நான் ஒரு போதும் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை; அந்த நேரத்தில் பிரதமராக முன்னிறுத்தப்பட்டவர்களில் மோடி சிறந்தவராக தெரிந்தார்” என பேசியுள்ளார் எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ். ஆகுதி பதிப்பகம் எழுத்தாளர் ஜோ. டி. குரூஸுடன் கலந்துரையாடல் நிகழ்வொன்றை டிஸ்கவரி புக் பேலஸில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் பேசிய ஜோ. டி. குரூஸ், கடந்த மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்ததன் காரணத்தை விளக்கினார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியுடன் ஒரே மேடையில் … Continue reading நான் ஒரு போதும் மோடியின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை: எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ்

புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை காண்போம்: மு.க.ஸ்டாலின்

இந்தியை கொல்லைப் புறமாக திணிக்க நினைத்தால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை காண்போம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பேராபத்து உருவாக்கும் விதத்தில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழகத்தில் உள்ள வேலூர், கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் மைல் கற்களில் ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு இந்தியில் எழுதி வருவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய நெடுஞ்சாலை 75, … Continue reading புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை காண்போம்: மு.க.ஸ்டாலின்

‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துங்கள்: ஸ்டாலின்

‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துமாறு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தியுள்ளார்.  புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் அளித்துள்ள அறிக்கையில், “மக்களின் பொதுநலனைப் பெரிதும் பாதித்திடும் அளவுக்குத் தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை நீக்கும் விதத்தில் புதிய முதலமைச்சராக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நியமித்து விரைவில் தனது அமைச்சரவைச் சகாக்களுடன் பதவி ஏற்கும்படி மாண்புமிகு தமிழக ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார். 2016-ல் … Continue reading ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துங்கள்: ஸ்டாலின்

”தற்போது பொதுத்தேர்தல் தான் தீர்வு!”

ஜெயலலிதா குற்றமற்றவர் அல்ல என்பதையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு உணர்த்துகிறது எனவே தற்போதைக்கு பொதுத்தேர்தல் தான் ஒரே தீர்வு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தின் "இரு நீதியரசர் இருக்கை" அளித்துள்ளத் தீர்ப்பு, தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் ஊழல்சக்திகளுக்குப் பாடம்புகட்டும் வகையில் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. இதனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. எனினும், இந்தத் தீர்ப்பு மிகவும் காலங்கடந்து அளிக்கப் படுவதால், … Continue reading ”தற்போது பொதுத்தேர்தல் தான் தீர்வு!”

”ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம்”

தமிழக ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சட்டப்பேரவை தேர்தலில் , அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்று , ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்தது.இந்நிலையில், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட செப்டம்பர் 22 முதல் ,அ.இ.அ.தி.மு.க வில் மௌனமாக நடந்துவந்த அதிகாரப்போட்டி தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆளும் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் யார் என்பதனை தீர்மானிக்க வேண்டியது … Continue reading ”ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம்”

’மாஃபியா’ பாண்டியராஜன் என்றவர்கள் ‘மாண்புமிகு’ பாண்டியராஜன் என்கிறார்கள்!

அதிமுக, இரண்டு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அத்தனை எம். எல். ஏக்களின் தொடர்பு எண்களை சமூக ஊடகங்களில் பரவவிட்டனர். மக்கள் தங்களுடைய தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவளிக்கும்படி தொடர்ந்து தொலைபேசியில் பேசினர். இதுகுறித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எங்களுடைய சுதந்திரம் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதாக கருத்திட்டிருந்தார். இதற்கு ட்விட்டரில் கடுமையான எதிர்ப்பினை … Continue reading ’மாஃபியா’ பாண்டியராஜன் என்றவர்கள் ‘மாண்புமிகு’ பாண்டியராஜன் என்கிறார்கள்!

அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கவேண்டும்!

தமிழக அரசியலில் தற்போது நிலவிவரும் அசாதரண சூழ்நிலையில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆதரவுபெற்ற நிலையான ஆட்சியை அமைப்பதற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை இன்னும் சில நாட்களில் உச்சநீதிமன்றத்தில் துவங்கவுள்ளது. அதில் தமிழகத்தின் … Continue reading அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கவேண்டும்!

” ஜெயலலிதாவை ஏன் கொலை செய்தீர்கள்?”

மனுஷ்யபுத்திரன் இன்று காலை புதிய தலைமுறையில் ஆவடி குமார் அடிப்படையான எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் திமுகவை அவதூறு செய்வதிலேயே குறியாக இருந்தார். சட்ட சபையில் துரைமுருகன் ஓபிஎஸ் ஸை நோக்கி ' 5 ஆண்டுகளும் நீங்களே ஆளுங்கள்' என்று சொன்னது எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை பொறுமையாக விளக்கினேன். ஓ பி எஸ் ' நாங்கள் செய்த நல்லது எதையும் திமுக பாராட்ட மறுக்கிறது" என்று சட்ட சபையில் குறைபட்டுக்கொண்ட போது " துரைமுருகன்" நல்லது … Continue reading ” ஜெயலலிதாவை ஏன் கொலை செய்தீர்கள்?”

முதலமைச்சரை மிரட்டியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: மு. க.ஸ்டாலின்

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினா கடிதத்தில் கையெழுத்து வாங்கியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு. க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்” என்று அதிமுகவின் “அதிரடி” வரவான பொதுச் செயலாளர் திருமதி சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது அவர் ஏற்கனவே “நான் பினாமி அல்ல” என்று “சொத்துக் குவிப்பு வழக்கில்” வைத்த உதவாக்கரை வாதம் போன்று இருக்கிறது. … Continue reading முதலமைச்சரை மிரட்டியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: மு. க.ஸ்டாலின்

தலைவர் ‘மோடி’ல் மக்கள்!

கண்ணன் ராமசாமி சமீபத்திய அசாதாரணமான சூழல்களை கவனிக்கும் போது ஒரு விடயம் நன்றாக புரிகிறது. சசிகலாவை முதல்வர் பதவிக்கு வரச் செய்வதற்கான வரலாற்று கையெழுத்து ஜெயலலிதாவின் மறைவு நாள் அன்றைக்கே போடப்பட்டு விட்டது. வரலாற்றில் இனி ஜெயலலிதாவின் வாரிசு யார் என்று தேடப்போகும் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த காணொளி காட்டித் தருவது சசிகலா என்னும் தலைவரைத் தான்! இந்த கருத்தின் பின்புலத்தில் தான் ஏன் தீபா அங்கு அனுமதிக்கப்படவில்லை என்கிற உண்மை ஒளிந்திருக்கிறது. எதிர்கால மடையர்கள் "சசிகலா … Continue reading தலைவர் ‘மோடி’ல் மக்கள்!

சசிகலா முதல்வராவதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்களா?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வானதால் சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. சசிகலா, தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளது குறித்து சமூக ஊடகங்களில் கருத்தாளர்கள் தெரிவித்த சில கருத்துகள்... LR Jaggu: கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஜெயலலிதா தமிழக முதல்வரானபோது தமிழக அரசியலின் தரம் தாழ்ந்துவிட்டதாக திமுகவினரும் அவர்களின் ஆதரவாளர்களும் … Continue reading சசிகலா முதல்வராவதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்களா?

தைப்பொங்கல் நீக்கம் – வைகோ கண்டனம்

மத்திய அரசின் கட்டாய விடுமுறை நாள்கள் பட்டியலில் தை முதல் நாளை நீக்கிவிட்டு, விருப்பம் உள்ள பகுதிகளில் விடுமுறை நாளாக அறிவித்திருப்பது மன்னிக்க முடியாத அநீதி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்த அவரின் இன்றைய அறிக்கை: இந்தியா என்கின்ற நாடு, பல்வேறு தேசிய இனங்களின் கூட்டு அமைப்பு ஆகும். பல மொழிகள், பல சமயங்கள், பல்வேறு நாகரிகங்கள் கலாச்சாரங்களின் ஒன்றிணைப்பாக இந்திய நாடு திகழ்கின்றது. இதில் எந்தத் துறையில் ஒரு ஆக்கிரமிப்பு நிகழ்ந்தாலும், … Continue reading தைப்பொங்கல் நீக்கம் – வைகோ கண்டனம்

பொங்கலைப் பொதுவிடுமுறையாக்க சிபிஎம் கடிதம்

பொங்கல் தினத்தை விருப்பவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்ததை பொதுவிடுமுறையாக மீண்டும் மாற்றுமாறு மத்திய அரசுக்கு சிபிஎம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். சிபிஎம் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான ரங்கராஜன், இது குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திரசிங்குக்கு அனுப்பிய கடித விவரம்: தமிழகத்திற்கு மிக முக்கியமான பண்டிகை,பொங்கல். மத்திய அரசின் 2017ம் ஆண்டிற்கான விடுமுறைகள் தினப் பட்டியலில் ஜனவரி 14 பொங்கல் தினம் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லை. … Continue reading பொங்கலைப் பொதுவிடுமுறையாக்க சிபிஎம் கடிதம்

“அம்மாவும், கழகமுமே உலகம் என்று வாழ்ந்தவள் நான்!”: சசிகலாவின் முதல் அரசியல் உரை…

அதிமுக பொதுச் செயலாளராக இன்று பொறுப்பேற்ற சசிகலா முதன் முறையாக அதிமுக தலைமை செயலகத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். ‘‘தலைமைக் கழக நிர்வாகிகளே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டக் கழகச் செயலாளர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளே, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களே, அ.தி.மு.க. உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே! உலகமே … Continue reading “அம்மாவும், கழகமுமே உலகம் என்று வாழ்ந்தவள் நான்!”: சசிகலாவின் முதல் அரசியல் உரை…