குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ விமர்சனம்: வி. சபேசன்

வி. சபேசன்  கடந்த வாரம் யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற குணா கவியழகனின் 3 நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வில் நான், ‘விடமேறிய கனவு' நாவலுக்கான விமர்சனத்தை செய்திருந்தேன். அந்த விமர்சனத்தின் எழுத்து வடிவம் இது. சில குறிப்புக்களை வைத்துத்தான் பேசினேன். எழுதி வைத்து வாசிக்கவில்லை. ஏறக்குறைய இதைத்தான் பேசினேன். ‘விடமேறிய கனவு' நாவல் கதையின் நாயகன் தனது கதையை சொல்வதாக தன்னிலை வடிவத்தில் அமைந்திருப்பதை சொல்லி விமர்சனத்தை ஆரம்பித்தேன். ......................................................... தடுப்பு முகாம் அனுபவம்.... முள்ளிவாய்க்காலிற்குப் பின்னர் … Continue reading குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ விமர்சனம்: வி. சபேசன்

சீமானின் ஈழத்துப் பயணக் கதை உண்மையா?

வி. சபேசன் சீமான் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய ஒரு நேர்காணல் சமூக வலைத்தளங்களில் பெருமளவு கிண்டலடிக்கப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதில் சீமான் தான் எப்படி ஈழத்திற்கு போனேன் என்றும், தலைவர் தனக்கு எப்படி துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி அளித்தார் என்றும் சொல்கிறார். யாரும் உயிரோடு இல்லை என்கின்ற அசட்டுத் தைரியத்தில் சீமான் சற்று அதிகமாகவே 'ரீல்' விட்டிருப்பது தற்பொழுது சமூகவலைத்தளங்களில் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கிறது. சீமானுடைய அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சில உண்மைகளை நேர்மையாக ஒத்துக் … Continue reading சீமானின் ஈழத்துப் பயணக் கதை உண்மையா?

ஈழப்பிரச்சினையை வணிகமாக்கும் ஊடகங்கள்: திமுகவையும் அதிமுகவையும் ஒரே கோட்டில் நிறுத்துவது சரியா?

யுவகிருஷ்ணா தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது. இனி ஜெயா அரசு காபந்து அரசுதான். இன்னுமா விகடனாருக்கு பயம்? அண்ணன் ப.திருமாவேலன் அவர்கள் இவ்வார விகடனில் எழுதியிருக்கும் ’இன்னும் எத்தனை நாடகங்கள்?’ கட்டுரை, ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஈழப்பிரச்சினையில் ஒரே தராசில் சரிக்கு சமமாக நிறுத்திவைக்க முயற்சிக்கிறது. மநகூ என்கிற அதிமுகவின் ‘பீ’ டீம் செய்யும் அதே வேலையைதான் விகடனும் செய்கிறது. ஈழப்பிரச்சினையில் கலைஞர் என்ன சொல்கிறாரோ, அதற்கு நேரெதிரான கருத்தை ஜெ. சொல்லுவார் என்று கட்டுரை சொல்கிறது. உண்மைதான். … Continue reading ஈழப்பிரச்சினையை வணிகமாக்கும் ஊடகங்கள்: திமுகவையும் அதிமுகவையும் ஒரே கோட்டில் நிறுத்துவது சரியா?

ஈழம் என்பது தமிழக அரசியலாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டை அடைத்தால் குடித்துக்கொள்கிற சோடா: தமிழ்நதி

தமிழ்நதி துரைப்பாண்டி என்ற அதிகாரியின்மீது எல்லோருடைய கோபமும் திரும்பியிருக்கும். ரவிச்சந்திரனின் மரணத்திற்கு அந்த அதிகாரி மட்டும் காரணமில்லை. ரவிச்சந்திரனை அவ்வாறு செய்யத் தூண்டியது நாட்பட்ட அவமானம். நிலந் திரும்பவியலாத கோபம். ‘எத்தனை நாள் இந்தத் துயரம் நீடிக்கும்?’என்று சீறிப் பாய்ந்த வெப்பியாரம். சில ஆண்டுகளுக்கு முன்னதாக, அகதி முகாமொன்றுக்குச் சென்றபோது, அங்கிருந்த அதிகாரிகள் அகதிகளை சகவுயிரிகளாகப் பார்க்கவில்லை; தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழுள்ள வளர்ப்புப் பிராணிகளைப் பார்க்கும் கண்களால் பார்ப்பதை அவதானித்தேன். நான் சந்திக்கச் சென்றிருந்த பெண், முகாமுக்கு … Continue reading ஈழம் என்பது தமிழக அரசியலாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டை அடைத்தால் குடித்துக்கொள்கிற சோடா: தமிழ்நதி

தமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்: அ. முத்துகிருஷ்ணன்

அ. முத்துகிருஷ்ணன் மதுரை கூத்தியார்குண்டு அருகில் உள்ள உச்சபட்டி அகதிகள் முகாமில் கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்கள் வதை செய்யப்படுகிறார்கள். அரசாங்கம் இவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க கையாளும் வழிகள் அனைத்துமே மனித உரிமை மீறல் தான். முகாமில் இருப்பவர்களை CHECKING செய்கிறோம், ROLL CALL எடுக்கிறோம் என்கிற பெயரில் இங்கே வசிக்கும் 1600க்கும் மேற்பட்டவர்களை நினைத்த நேரத்தில் அங்குள்ள மைதானத்தில் ஒன்று கூடச் சொல்வது இந்த வழக்கங்களில் ஒன்று, அதற்கு ஒரு உறுதியான நாள், நேரம் … Continue reading தமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்: அ. முத்துகிருஷ்ணன்

இலங்கை அகதி மரணம்: ”போஸ்ட்மார்டம் செய்த பிறகுதான் எப்படி இறந்தார் என சொல்லமுடியும்” விஜேந்திர பிதாரி சொல்கிறார்

மதுரையில் உள்ள இலங்கைகள் அகதிகள் முகாமில் வசித்த ரவீந்திரன்(48) தினக்கூலி வேலை செய்துவருகிறார். 26 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து வந்தவர் இவர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அகதிகள் முகாமில் கணக்கெடும் பணியைச் செய்த வருவாய் துறை அதிகாரி ராஜேந்திரன், ரவீந்திரன் சரியான நேரத்திற்கு வரவில்லை என்ற காரணம் கூறி, கடுமையாகத் திட்டி ‘கரண்டு கம்பத்தில் ஏறி சாவு’ என்று திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ரவீந்திரன் அப்படியே தற்கொலை செய்தார். அவர் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறியது தற்கொலை … Continue reading இலங்கை அகதி மரணம்: ”போஸ்ட்மார்டம் செய்த பிறகுதான் எப்படி இறந்தார் என சொல்லமுடியும்” விஜேந்திர பிதாரி சொல்கிறார்

#வீடியோ: “கரண்டு மரத்தில் ஏறி சாவு”: முகாமுக்கு தாமதமாக வந்த இலங்கை அகதிக்கு தமிழக அரசு அதிகாரி தந்த உடனடி மரணதண்டனை!

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை, டொயோட்டா ஷொ ரூம் பின்புறமுள்ள உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி ராஜேந்திரன் என்பவர் , முகாமிற்குள் சோதனையிட்டபோது முகாமில் இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த இலங்கை தமிழர் ரவி என்பவரின் பெயரை அகதி முகாம் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார். மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு சேர்க்க சென்றதால் தாமதமாகிவிட்டதாக ரவி விளக்கமளித்தும் அதை ஏற்க அந்த அதிகாரி மறுத்துள்ளார். இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது … Continue reading #வீடியோ: “கரண்டு மரத்தில் ஏறி சாவு”: முகாமுக்கு தாமதமாக வந்த இலங்கை அகதிக்கு தமிழக அரசு அதிகாரி தந்த உடனடி மரணதண்டனை!

இலங்கையின் செய்தித் தொடர்பாளர் ஆகிப் போன ஐநா மனித உரிமைகள் ஆணையர்!

வன்னி அரசு. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் செயத் ராஅட் அல் ஹுசேனின் நான்கு நாள் இலங்கை சுற்றுலா இன்று முடிவடைந்தது. அவர் பயணத்தின் விளைவாக தமிழர்களுக்கு எதாவது நன்மை நடக்கும் என்று நாம் எதிர்பார்த்த எந்தவொரு நிகழ்வும் நடக்கவில்லை. மாறாக இலங்கை அரசு மேற்பார்வையில் நடத்தப்பட்ட மற்றுமொரு சடங்கு போல இந்த பயணம் அமைந்துள்ளது. தமிழர்களின் மிகமுக்கிய கோரிக்கைகளில், ஐநாவுக்கு எந்த பங்கும் கடமையும் இல்லாதது போல கைகழுவி உள்ளது. தனது பயணத்தின் இறுதியில் … Continue reading இலங்கையின் செய்தித் தொடர்பாளர் ஆகிப் போன ஐநா மனித உரிமைகள் ஆணையர்!

உலகமே தேடிய “பாலிதீன் கவர்” மெஸ்சி:ஐந்து வயது கால்பந்து ரசிகனின் விருப்பம் நிறைவேறுமா?…

கால்பந்து சூப்பர் ஸ்டார் மெஸ்சியின் பத்தாம் நம்பர் ஜெர்சியை,  அணிந்த குழந்தை ஒன்றின் புகைப்படம் சில நாட்களுக்கு முன் டிவிட்டரில் வெளியானது. அது ஜெர்சி அல்ல. வெள்ளை நிறத்தில் நீல வண்ண கோடுகள் இருந்த பிளாஸ்டிக் பை என்றும், அதில் கருப்பு மை கொண்டு MESSI 10 என்று எழுதபட்டிருப்பதும் தெரிந்தபோது, அந்த புகைப்படத்தை உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு பகிர தொடங்கினர். மெஸ்சியின் கவனத்திற்கும் இந்த புகைப்படம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது டீமும் … Continue reading உலகமே தேடிய “பாலிதீன் கவர்” மெஸ்சி:ஐந்து வயது கால்பந்து ரசிகனின் விருப்பம் நிறைவேறுமா?…