மக்கள் நலக்கூட்டணியோடு விஜய்காந்த், வாசன் உள்ளிட்டவர்களும் இணைக்கப்பட்டதற்கு பிறகு சில விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுப்பப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணி மாற்றுக் கூட்டணி என்று சொல்லிவிட்டு தேர்தல் ஓட்டுக்கான கூட்டணியாக மாற்றப்பட்டுவிட்டதே உங்கள் மாற்றுக்கொள்கை இதுதானா என்பதுதான் பலரது விமர்சனங்களுக்கான மையப்புள்ளி. இதனை நாம் நேரடியான அர்த்தத்தில் எடுக்க முடியாது என்பது என் வாதம். எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் பின்னோக்கி பத்து மாத காலத்திற்கு இழுத்து சென்று அங்கிருந்து வாதம் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். 2015 ஜுலையில் மக்கள் நலக்கூட்டியக்கம் தொடங்கப்பட்டு … Continue reading மக்கள் நலக்கூட்டணி பிற கட்சி/கூட்டணிகளில் இருந்து எப்படி மாறுபடுகிறது?
ஆசிரியர்: முனைவர் விஜய் அசோகன்
திமுகவும் அதிமுகவும் இணைந்த கைகள்; எப்படி?
தமிழகத்தில் கடந்த இருபது வருடங்களாக ஒரு பொது விதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில், திமுக ஆட்சியில் இருக்கும்பொழுதும் நிறைவுறும் தருவாயிலும் திமுகவை விமர்சிக்க வேண்டும், அதிமுக ஆட்சியில் இருக்கும்பொழுதும் நிறைவுறும் தருவாயிலும் அதிமுகவை விமர்சிக்க வேண்டும். இந்த கோட்பாட்டின் அடிப்படையில்தான் ஆட்சி மாற்றம் நிகழும். ஆனால், பொது மக்களிடமும் அரசியல் விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரிடமும் பொது உடன்பாடோ பொது ஆதரவோ இல்லையெனினும் முதல் முறையாக திமுகவும் அதிமுகவும் ஒன்றாக விமர்சிக்கப்படும் சூழல் 2016 தேர்தல் … Continue reading திமுகவும் அதிமுகவும் இணைந்த கைகள்; எப்படி?
கட்டணம் மட்டும்தான் கல்வி துறையில் உள்ள பிரச்சினையா? பள்ளிகள் சாதியை வளர்க்கும் கூடங்களாக மாறுவதையும் கவனத்தில் கொள்வோம்!
அன்புள்ள தோழர் நியாஸ் அவர்களுக்கு! தங்களின் சமீபத்திய விகடன் கட்டுரை “மக்களே... எல்.கே.ஜி., என்ஜினீயரிங் எது காஸ்ட்லி? - இதுவும் நடக்கும் தமிழகத்தில்!” படித்தேன். உண்மைகளை பேசும் ஒரு சில ஊடகவியலாளர்களில், அதுவும் குறிப்பாக கல்வி குறித்து யாரும் பேசத் தயங்கும் பகுதிகளை கூட எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் எழுதுபவர்களில், நான் பார்த்து வியந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதுவும் 2014 ஆம் ஆண்டு தர்மபுரியில் தொடர்ச்சியாக மூன்று பள்ளிக்கூட மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை எவ்வித … Continue reading கட்டணம் மட்டும்தான் கல்வி துறையில் உள்ள பிரச்சினையா? பள்ளிகள் சாதியை வளர்க்கும் கூடங்களாக மாறுவதையும் கவனத்தில் கொள்வோம்!