விவசாயிகள் தற்கொலை ஆவணப்படம், சோவியத் படம் திரையிடல், கருத்துரைகள்

காவிரி விவசாயிகள் தற்கொலைகள் குறித்து பூவுலகின் நண்பர்கள் நடத்தும் கண்டனக் கூட்டம் இறந்தாய் வாழி காவிரி - விவசாயிகள் தற்கொலை -ஆவணப்படத் தொகுப்பு திரையிடல் https://youtu.be/xx1583m_uAk நாள்-04-02-2017 சனிக்கிழமை மாலை 6.00 மணி, BEFI அரங்கம்- 17, அமீர்ஜான் சாலை, சூளைமேடுசென்னை கருத்துரை பாமயன், இயற்கை வேளாண் அறிஞர் முனைவர் விஜயபாஸ்கர், MIDS பார்த்தசாரதி, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு இதுவரை காவிரிக் கரையிலே 220க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நெல்மணிகள் பால் பிடிக்கும் பருவத்திலே … Continue reading விவசாயிகள் தற்கொலை ஆவணப்படம், சோவியத் படம் திரையிடல், கருத்துரைகள்

நூற்றுக்கணக்கான செல்போன்,பர்ஸ்,ஏடிஎம் கார்டு…!? மதுரை உண்மையறியும் குழு அறிக்கை

சல்லிக்கட்டு போராட்டத்தையொட்டி மதுரை அலங்காநல்லூர் மற்றும் மதுரை நகர் தத்தனேரி பகுதிகளில் நூற்றுக்கணக்கான செல்போன்கள், பணம், பர்ஸ், ஏடிஎம், ஆதார், வாக்காளர் அட்டைகள் எவ்வித சட்டநடைமுறைகளும் பின்பற்றப்படாமல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை உரியவர்களிடம் முறைப்படி ஒப்படைக்கவேண்டும் என வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு வலியுறுத்தியுள்ளது. பேராசிரியர் முரளி மற்றும் பல்வேறு அமைப்புகளின் - அமைப்புகளைச் சாராத வழக்கறிஞர்கள் 18 பேர் அடங்கிய உண்மை அறியும் குழு கடந்த 24ஆம் தேதியன்று அலங்காநல்லூரிலும், 28ஆம் தேதி மதுரை நகரிலும் மக்களிடம் … Continue reading நூற்றுக்கணக்கான செல்போன்,பர்ஸ்,ஏடிஎம் கார்டு…!? மதுரை உண்மையறியும் குழு அறிக்கை

3 போலீஸ் ஆணையர்களை இடைநீக்கவேண்டும்- சிபிஎம்

வன்முறைச் சம்பவங்கள் அனைத்திற்கும் காரணமான போலீஸ் ஆணையர்கள் சென்னை - ஜார்ஜ், கோவை - அமல்ராஜ், மதுரை - சைலேஷ்குமார் ஆகியோரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து, அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிபிஎம் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச்செயலர் ஜி.இராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜல்லிக்கட்டு உரிமைக்காக ஒருவார காலம் தமிழகம் முழுவதும் அமைதியாகப் போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவர் மீதும் தமிழகம் … Continue reading 3 போலீஸ் ஆணையர்களை இடைநீக்கவேண்டும்- சிபிஎம்

அந்த மூன்று சட்டப் பிரிவுகள்?- பெ.மணியரசன் கேள்வி

வனவிலங்குகள் நலச் சட்டத்தின் 11, 22ஆம் பிரிவுகள் மற்றும் அரசியல்சாசனத்தின் 213ஆம் பிரிவு ஆகியவை தொடர்பாக தமிழ்நாட்டு அரசின் புதிய அவசர சட்டத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் : தடைநீக்கி, சல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்துவிட்டார், அவசரச் சட்டம் இதோ வந்துவிட்டது என்று நேற்று (21.01.2017) மாலை தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்ச் செல்வம் … Continue reading அந்த மூன்று சட்டப் பிரிவுகள்?- பெ.மணியரசன் கேள்வி

திமுக தனி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அ.தி.மு.க. அரசு உடனடியாக செய்ய வலியுறுத்தி, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே, நாளை திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து சற்றுமுன் அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக சார்பில் ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் கொண்டுவரக் கோரியும், மத்திய அரசே நேரடியாக அவசரச்சட்டம் கொண்டு வராததைக் கண்டித்தும் இன்று மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் அமைதியான முறையில் வெற்றிகரமாக … Continue reading திமுக தனி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு: வழக்கு ஒரு காரணமா- காங்கிரசே ’காட்டம்’!

உச்சநீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது அறிவிக்கை வெளியிடலாம், ஆனால் அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது என்று கூறுவது அப்பட்டமான ஏமாற்று வேலையாகும் என தமிழக காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இது பற்றி அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: அவசரச்சட்டம் மத்திய பா.ஜ.க. அரசு அமைந்து இதுவரை 22 அவசரச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடைசியாக உச்சநீதிமன்றம் தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வின் மூலம் (நீட்) மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க … Continue reading ஜல்லிக்கட்டு: வழக்கு ஒரு காரணமா- காங்கிரசே ’காட்டம்’!

’நீட்’தேர்வை எதிர்த்த ஆர்ப்பாட்டம்: தள்ளி வைத்தது திமுக

நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து வரும் 20 அன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தி.மு.க. சார்பில் தலைமை அறிவித்துள்ளது. இது குறித்த அக்கட்சியின் இன்றைய அறிவிப்பில், “ மத்திய பா.ஜ.க. அரசின் "நீட்"  நுழைவுத் தேர்வு மற்றும் "புதிய கல்விக் கொள்கை"யை கண்டித்து தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 20.1.2017 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் "ஜல்லிக்கட்டு" நடத்தக்கோரி மாணவர்கள் இளைஞர்கள் தமிழகம் முழுவதிலும் … Continue reading ’நீட்’தேர்வை எதிர்த்த ஆர்ப்பாட்டம்: தள்ளி வைத்தது திமுக

முதலமைச்சருடன் சிபிஎம் குழு சந்திப்பு

தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்தக்கோரி நடைபெறும் போராட்டத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிடக் கோரி சிபிஐ-எம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான க.பீமாராவ் ஆகியோர் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை கோட்டையில் இன்று நேரில் வலியுறுத்தினர். சிபிஐ-எம் கட்சியின் மாநிலச்செயலர் ஜி.இராமகிருஷ்ணனின் கடிதத்தை முதலமைச்சரிடம் அவர்கள் வழங்கினர். அதைப் பெற்றுக்கொண்ட பன்னீர்செல்வம், போராட்டம் நடத்துபவர்களின் பிரதிநிதிகளோடு, தான் பேசத்தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இராமகிருஷ்ணனின் கடித விவரம்: தமிழக மக்கள் அனைவரின் உணர்வாகவும், கலாச்சார … Continue reading முதலமைச்சருடன் சிபிஎம் குழு சந்திப்பு

போராட்ட இளைஞர்களை இழிவுபடுத்துவதா?

அலங்காநல்லூரில் போராடிய இளைஞர்களுக்கு உள்ளூர் மக்கள் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றை வழங்க முன்வந்த போது, அவற்றை  தடுத்து திருப்பி அனுப்பியது, உணவு தர முன்வந்த உள்ளூர் பெண்களையும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களையும் தொடர்புபடுத்தி கொச்சையான வார்த்தைகளை உதிர்த்தது போன்ற இழிசெயல்களில் ஈடுபட்டதை பாமக நிறுவனர் இராமதாசு கண்டித்துள்ளார். அறிக்கையொன்றில் இதைத் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளின் மாணவர்களும் இன்று வகுப்புகளை புறக்கணித்து , போராட்டங்களை நடத்திக் … Continue reading போராட்ட இளைஞர்களை இழிவுபடுத்துவதா?

கீழடித் தொன்மையைக் காக்க மதுரையில் 22-ல் போராட்டம்- தமுஎகசஅழைப்பு

தமிழரின் தொன்மைச் சான்றுகள் கிடைத்துள்ள கீழடித் தடத்தைப் பாதுகாக்கக்கோரி மதுரையில் வரும் 22ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்குமாறு அவ்வமைப்பு அழைத்துள்ளது. இதில் தமிழ்ப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் திருமலை, இசையறிஞர் நா.மம்மது மற்றும் பலர் பங்கேற்கின்றனர். இது தொடர்பான தமுஎகசவின் மதுரை மாவட்ட அமைப்பின் அழைப்பு: பல நூறு வருடங்களாய்த் தமிழர்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாகரிக வரலாற்றைப் பறைசாற்றும் மதுரை அருகே உள்ள … Continue reading கீழடித் தொன்மையைக் காக்க மதுரையில் 22-ல் போராட்டம்- தமுஎகசஅழைப்பு

அரியலூர் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை- தீவிரமாகும் போராட்டம்

தலித், எது செய்தாலும் யாரும் கேட்க நாதி கிடையாது. நாம் இந்து முன்னணி, போலீசார் நம்மை எதிர்த்து எதுவும் செய்யமாட்டார்கள், பணத்தை விட்டெறிந்தால் யாரையும் விலைக்கு வாங்க முடியும். நாம பார்க்காத கோர்ட்டா, கேசா என்கிற காட்டுமிராண்டித்தனம்தான் நந்தினி படுகொலைக்கு காரணம் என்று மக்கள் அதிகாரம் அமைப்பு விசனப்பட்டுள்ளது. அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜு இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்த 16 வயது … Continue reading அரியலூர் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை- தீவிரமாகும் போராட்டம்

#புத்தகம்2017: பொய் – வேடங்களில் மன்னன்…இப்பொழுது தலைநகர் டெல்லியில்

பிரதமர் மோடியின் பல்வேறு காலகட்ட நிலைப்பாடுகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கும் ’BLUFF - MASTER ...NOW IN DELHI' எனும் ஆங்கில புத்தகம் கடந்த வாரம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதே புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. எழும்பூர் இக்சா அரங்கில் கடந்த 4ஆம் தேதி நடந்த நிகழ்வில், ஆங்கிலப் புத்தகத்தை பேராசிரியர் அ.மார்க்ஸ் வெளியிட, சென்னை பல்கலைக்கழக அரசியலறிவியல் துறை பேராசிரியர் இராமு மணிவண்ணன் பெற்றுக்கொண்டார். தமிழாக்கமான ‘பொய் - வேடங்களில் மன்னன்...இப்பொழுது தலைநகர் டெல்லியில்’ எனத் … Continue reading #புத்தகம்2017: பொய் – வேடங்களில் மன்னன்…இப்பொழுது தலைநகர் டெல்லியில்

பொங்கல் விடுமுறை- 11ஆம்தேதி திமுக ஆர்ப்பாட்டம்

பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறையிலிருந்து நீக்கியிருப்பது இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கையின் உச்சகட்ட வெளிப்பாடு எனக் கூறியுள்ள திமுக, அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 11-ம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. முன்னதாக, இது தொடர்பாக ஸ்டாலின் அறிக்கையில், “ தமிழர் திருநாளான பொங்கல் விழாவையொட்டி பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கட்டாய விடுமுறையை இப்போது … Continue reading பொங்கல் விடுமுறை- 11ஆம்தேதி திமுக ஆர்ப்பாட்டம்

தைப்பொங்கல் நீக்கம் – வைகோ கண்டனம்

மத்திய அரசின் கட்டாய விடுமுறை நாள்கள் பட்டியலில் தை முதல் நாளை நீக்கிவிட்டு, விருப்பம் உள்ள பகுதிகளில் விடுமுறை நாளாக அறிவித்திருப்பது மன்னிக்க முடியாத அநீதி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்த அவரின் இன்றைய அறிக்கை: இந்தியா என்கின்ற நாடு, பல்வேறு தேசிய இனங்களின் கூட்டு அமைப்பு ஆகும். பல மொழிகள், பல சமயங்கள், பல்வேறு நாகரிகங்கள் கலாச்சாரங்களின் ஒன்றிணைப்பாக இந்திய நாடு திகழ்கின்றது. இதில் எந்தத் துறையில் ஒரு ஆக்கிரமிப்பு நிகழ்ந்தாலும், … Continue reading தைப்பொங்கல் நீக்கம் – வைகோ கண்டனம்

பொங்கலைப் பொதுவிடுமுறையாக்க சிபிஎம் கடிதம்

பொங்கல் தினத்தை விருப்பவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்ததை பொதுவிடுமுறையாக மீண்டும் மாற்றுமாறு மத்திய அரசுக்கு சிபிஎம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். சிபிஎம் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான ரங்கராஜன், இது குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திரசிங்குக்கு அனுப்பிய கடித விவரம்: தமிழகத்திற்கு மிக முக்கியமான பண்டிகை,பொங்கல். மத்திய அரசின் 2017ம் ஆண்டிற்கான விடுமுறைகள் தினப் பட்டியலில் ஜனவரி 14 பொங்கல் தினம் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லை. … Continue reading பொங்கலைப் பொதுவிடுமுறையாக்க சிபிஎம் கடிதம்

’டிச.5 இரவு 11.30-க்கு ஜெ. மரணம்’

முதலமைச்சர் ஜெயலலிதா டிச.5 அன்று இரவு 11.30 மணிக்கு இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாலையில் அவர் இறந்துவிட்டதாக சில தொலைக்காட்சிகள், இணையதளங்களில் தகவல் வெளியானபோதிலும், அப்பல்லோ நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதையடுத்த 6 மணி நேரத்தில் ஜெயலலிதாவின் உயிரிழப்பு உறுதிசெய்யப்பட்டது. முன்னதாக, 11.10 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் பிரதாப்ரெட்டியும் தொடர்ந்து சசிகலாவும் அவரின் உறவினர்களும் மருத்துவமனையிலிருந்து வெளியேறினர். எய்ம்ஸ் மருத்துவர்களும் அங்கிருந்து சென்றனர். அதன் … Continue reading ’டிச.5 இரவு 11.30-க்கு ஜெ. மரணம்’

50 நாட்களில் தட்டுப்பாடு தீராது: சங்கம் தரும் புள்ளிவிவரம்

நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே பணம் அச்சிடப்படும் பணி தொடங்கப்பட்டிருந்தாலும் தேவையான அளவு 500 ரூபாய்த் தாள்களை அச்சடித்து முடிக்க 2017 ஏப்ரல் இறுதியாகும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இவ்வமைப்பின் தமிழ்நாட்டுப் பொதுச்செயலர் சி.பி.கிருஷ்ணன் இது பற்றி வெளியிட்ட அறிக்கையிலிருந்து... ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரதிய ரிசர்வ் பாங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், கர்நாடக மாநிலத்தில் மைசூரிலும், மேற்குவங்க மாநிலத்தில் சல்போனியிலும் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இரண்டு … Continue reading 50 நாட்களில் தட்டுப்பாடு தீராது: சங்கம் தரும் புள்ளிவிவரம்

ரூபாய்த் தாள் நெருக்கடி: மக்களைத் திரட்ட இடதுசாரிகள் முடிவு

பிரதமர் மோடியின் தடாலடி அறிவிப்பால், நாடு முழுவதும் நீடித்துவரும் ரூபாய்த்தாள் பிரச்னையைத் தீர்க்கக்கோரி, இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து வரும் 24ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு மக்களைத் திரட்டி போராட்டம், பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளன. இந்திய கம்யூ. கட்சி, இந்திய கம்யூ. கட்சி(மா), இ.க.க.(மா-லெ- விடுதலை), புரட்சிகர சோசலிசக் கட்சி, பார்வர்டு பிளாக், எஸ்.யு.சி.ஐ.(சி) ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில், இன்று புதுதில்லியில் இது குறித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இ.க.க.(மா) மாநிலச் செயலர் ஜி.இராமகிருஷ்ணன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

தேர்தலை ஏன் ரத்துசெய்ய வேண்டும்: பா.ம.க.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்கு போட்டிப்போட்டுக் கொண்டு பணம் வழங்கியிருப்பதால் அந்த தொகுதிகளுக்கு நாளை நடைபெறவிருக்கும் தேர்தலை ரத்துசெய்யவேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம்ஜைதியிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேரில் வலியுறுத்தியுள்ளார். இன்று காலை 10.40 மணிக்கு தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல்ஆணைய அலுவலகத்தில் நஜீம்ஜைதியை அன்புமணி சந்தித்துப் பேசினார். அப்போது கோரிக்கை மனுவை வழங்கினார். அன்புமணி அளித்த மனுவின் நகலை சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைத் … Continue reading தேர்தலை ஏன் ரத்துசெய்ய வேண்டும்: பா.ம.க.

அபத்தக்கூச்சல், தான்தோன்றித்தனம், நாடகமாடுகிறார் மோடி- சீமான் கடும் தாக்கு

ரூபாய்த்தாள் விவகாரத்தில் பிரதமர் மோடி தான்தோன்றித்தனமாக நடந்துகொள்கிறார்; அபத்தக்கூச்சல் இடுகிறார்; கண்ணீர்சிந்தி நாடகமாடுகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமான அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை: கறுப்புப்பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற பிரதமர் மோடியின் கொள்கையில் நமக்கு எந்த முரண்பாடும் இல்லை ஆனால் அதைச் செயல்படுத்த அவர் எடுத்த நடவடிக்கையில் துளியும் உடன்பாடில்லை. அவரின் அவசரகதியான முடிவால் நாட்டு மக்கள் அத்திவாசியத் தேவைகளுக்குக்கூடப் பணமில்லாது அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் இதன்மூலம் … Continue reading அபத்தக்கூச்சல், தான்தோன்றித்தனம், நாடகமாடுகிறார் மோடி- சீமான் கடும் தாக்கு

வசவுகளைக் கழுவி பரிகாரம் செய்க: பாஜகவுக்கு மு.க. அறிவுரை

ஏழையெளிய மக்கள் பாதிக்கப்படுவதற்கும் தக்க உடனடி நிவாரணம் தேடி, தங்கள் மீது பொழியப்பட்டுள்ள வசவுகளைக் கழுவிப் பரிகாரம் காண, மத்திய பா.ஜ.க. அரசினர் முன்வரவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை விவரம்: இந்தியப் பிரதமர், நரேந்திரமோடி, பின் விளைவுகளைப் பற்றி விரிவான முறையில் கலந்தாலோசிக்காமல் எடுத்த திடீர் நடவடிக்கை காரணமாக, அதாவது 500 ரூபாய் நோட்டுகளும், 1000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்த காரணத்தால், இந்திய … Continue reading வசவுகளைக் கழுவி பரிகாரம் செய்க: பாஜகவுக்கு மு.க. அறிவுரை

மாற்று ஏற்பாடுவரை பழைய ரூபாய்த்தாளே தொடர வேண்டும்: சிபிஎம் போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 3 நாள் சிறப்பு மாநாடு நெல்லையில் நவம்பர் 12 முதல் நடந்துவருகிறது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலச்செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இரண்டாம் நாளான 13 நவ. அன்று மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி … Continue reading மாற்று ஏற்பாடுவரை பழைய ரூபாய்த்தாளே தொடர வேண்டும்: சிபிஎம் போராட்டம்

ரூபாய்த் தாள் – 6 பிரச்னைகள், 7 கோரிக்கைகள்!

ரூபாய்த்தாள் பிரச்னையில் தொல்லைக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு உதவி செய்ய அரசு எந்த முன்முயற்சியும் செய்யாமலிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என்று இந்திய பொதுவுடைமை கட்சி(மா)-ன் மாநிலச் செயலாளர் இராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அக்கட்சியின் மாநிலச்செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கடந்த 8-11-2016 அன்று இரவு பிரதமர் மோடி அவர்கள் ரூ.,500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை ஒட்டி சாதாரண மக்கள், வியாபாரிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகக்கடுமையான சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். “அரசின் இந்த … Continue reading ரூபாய்த் தாள் – 6 பிரச்னைகள், 7 கோரிக்கைகள்!

’மீத்தேன் திட்டத்தை நிறுத்துவதாக இல்லை’

தமிழ்நாட்டிலிருந்து நிலக்கரிப் படிம மீத்தேன் எடுப்புத் திட்டத்தையோ, ஷேல் எண்ணெய் எடுக்கும் திட்டத்தையோ நிறுத்துவதாக தெளிவான அறிவிப்பு எதையும் அவர் வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலர் கி. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரின் அறிக்கை: காவிரிப் படுகையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளிக்கப்பட்ட மீத்தேன் திட்ட இசைவு திரும்பப் பெறப்படுவதாக இந்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் தில்லியில் (10.11.2016) அறிவித்திருக்கிறார். இது மீத்தேன் திட்டத்தை தமிழ்நாட்டில் அறவே நிறுத்தும் அறிவிப்பு … Continue reading ’மீத்தேன் திட்டத்தை நிறுத்துவதாக இல்லை’

குளிர்காய நினைப்பது யார்- மு.க.ஸ்டாலின் கேள்வி

மாநிலத்தில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடியில் எங்கிருந்தோ குளிர் காய நினைப்பது யார்? பல வருடங்களாக அதிமுக அரசு எதிர்த்துவந்த பிரச்சினைகளில் திடீரென்று ஒப்புதல் அளிக்கவேண்டிய பின்னணி குறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு தமிழக அரசின் நிர்வாகத்தை யார் நடத்துகிறார்கள் என்ற மிகப் … Continue reading குளிர்காய நினைப்பது யார்- மு.க.ஸ்டாலின் கேள்வி

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு: கொண்டாட்டம் தொடங்கியது!

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டமானது தலைநகர் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. உலகத்திலேயே ஆயுதப்புரட்சியின் மூலம் முறையான சோசலிச அரசை இரசியாவில் நிறுவி, நூறாண்டுகள் ஆவதையொட்டி நாளை உலகம் முழுவதும் கம்யூனிச கட்சிகள், இடதுசாரி அமைப்புகளின் சார்பில் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் இன்று ஞாயிறு மாலையில் பறையிசை, டிரம்சு ஆகிய இசைக்கருவிகளின் மீட்டலுடன் புரட்சிகரப் பாடல்களும் முழங்க நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் சிவப்பைக் கொண்டாடுவோம் எனும் இந்நிகழ்ச்சி … Continue reading நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு: கொண்டாட்டம் தொடங்கியது!