90% இந்திய ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாக்கின்றன: பத்திரிகையாளர் பி சாய்நாத்

தொண்ணூறு விழுக்காடு இந்திய ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாப்பதாக பத்திரிகையாளர் பி சாய்நாத் குற்றம்சாட்டியுள்ளார். ஏப்ரல் 1 ஆம் தேதி கர்நாடகாவின் குவெம்பு பல்கலைக்கழகத்தில் டாக்டர் சாந்திநாத் தேசாய் நினைவு அறக்கட்டளை விரிவுரையை ஆற்றியபோது, பத்திரிகையாளர் பி சாய்நாத், இன்றைய ஊடகங்களை பிரதிநிதித்துவமற்ற, ஒதுக்கிவைக்கும் மற்றும் குறுகிய பாத்திரத்தை வகிப்பதாக கூறினார்.
‘இந்தியாவில் இதழியல்: 200 ஆண்டுகளில் நாம் எங்கிருக்கிறோம்?’ என்ற தலைப்பில் பி. சாய்நாத் விரிவுரையாற்றினார்.

அப்போது அவர், “சுதந்திரப் போராட்டத்தின் போது சிறிய இந்திய ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றின. ஆனால் இன்றைய வலுவான ஊடகங்கள் ஒரு குறுகிய பாத்திரத்தை வகிக்கின்றன’ என்று கூறினார். மேலும் பேசிய அவர், “குறைந்தது தொண்ணூறு ஊடகங்கள் அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பாதுகாக்கவே உள்ளன’’ என்றார்.

பாலகங்காதர திலகர் தனது தைரியமான இதழியல் பணிக்காக கைது செய்யப்பட்டதைக் குறிப்பிட்டார். பி.ஆர். அம்பேத்கர், மகாத்மா காந்தி, பகத் சிங் மற்றும் ராஜா ராம் மோகன் ராய் போன்றவர்களின் படைப்புகளின் தாக்கத்தையும் சாய்நாத் குறிப்பிட்டார்.

“தலித் குடியரசு தலைவர்கள், நீதிபதிகள், தலைமை நீதிபதி மற்றும் ஒரு துணைப் பிரதமரையும் இந்தியா உருவாக்கியுள்ளது. ஆனால் இன்றைய இந்திய செய்தி அறைகளில் தலித்துகள், ஆதிவாசிகளைக் கண்டறிவது கடினமாக இருக்கும்’’ என்றார். “காட்சி ஊடகத்தில் இருண்ட நிறமுள்ளவர்கள் யாரும் இல்லை’’ எனவும் விமர்சித்தார்.

எமர்ஜென்சி காலத்தில் ஊடகங்கள் “வளைக்கச் சொன்னால் ஊர்ந்தன, ஆனால், இப்போது அதைக் கேட்க வேண்டிய அவசியமில்லை’’ என்றார். இருப்பினும், இந்திய பிராந்திய மொழிகளில் சிறிய ஊடக தளங்கள் சிறப்பாக செயல்படுவதாக சாய்நாத் பாராட்டினார். ஊடகங்கள் மீது பெருநிறுவனங்கள் செல்வாக்கு செலுத்துவதும் பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகளை செய்ததற்காக கைது செய்யப்படும் அதிகரித்து வருவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

ஊடகங்களில் தொழிலாளர் செய்திகளுக்கென்றே பிரத்யேக நிருபர் இல்லாததைப் போன்றே, வேளாண் துறைக்கும் பிரத்யேக நிருபர் இல்லை எனவும் இதை எழுபத்தைந்து விழுக்காடு மக்கள் பொருட்படுத்தவில்லை எனவும் அவர் வருந்தினார்.

கடந்த ஆண்டு ஆந்திர மாநில அரசாங்கம் பி. சாய்நாத்துக்கு பத்திரிகை துறையில் பணியாற்றியதற்காக வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்தது. இதை சாய்நாத் பெற மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.