தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை அனுமதித்த 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இது சர்ச்சையான நிலையில், முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகத்தை ஆளும் பாஜக அரசு மதம் தொடர்பான உடைகளை அணிந்து வரக்கூடாது என தடை விதித்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களுக்கு அரசியலமைப்பு வழங்கிய உரிமையை அரசு பறிப்பதாகக் கூறி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஹிஜாப் விவகாரத்தில் அரசின் முடிவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த சூழலில் மார்ச் 28-ம்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்றும், இதில் பங்கேற்பவர்கள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும் அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு முஸ்லிம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். அவர்களை தேர்வு கண்காணிப்பாளர்கள் திருப்பி அனுப்பினர். இதனால் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவிகள் தேர்வை புறக்கணித்துள்ளனர்.

சில பள்ளிகளில் ஹிஜாப்புடன் மாணவிகள் தேர்வெழுதியதாக தகவல் வெளியான‌து. இதுகுறித்து விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தர விட்டது. இதன்பேரின் நடத்தப்பட்ட‌ விசாரணையில் கதக் மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளில் மாணவி கள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இதற்கு காரணமான 2 தேர்வு பார்வையாளர்கள் மற்றும் 7 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட துணை முதன்மை கல்வி அதிகாரி பசவலிங்கப்பா தெரிவித்துள்ளார். முன்னதாக பெங்களூருவில் தேர்வறையில் ஹிஜாப் அணிந்திருந்ததாக நூர் பாத்திமா என்ற ஆசிரியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வறைக்குள் அனுமதித்த விவகாரத்தில் 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கதக் மாவட்டத்தில் இரு பள்ளிகளைச் சேர்ந்த 7 ஆசிரியர்கள் மாற்றம் இரண்டு தேர்வு கண்காணிப்பாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.