தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் மேளதாள வாத்தியங்களுடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்தப்பின்போது நீட் தேர்வு விலக்கு, மேகதாது அணை விவகாரம், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிப்பு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார். அப்போது, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது, பொருநை ஆய்வு நூலின் ஆங்கில பதிப்பையும் இருபத்தி நான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட கீழடி ஆய்வு நூலின் இந்தி மொழி பெயர்ப்பையும் journey of civilization Indus to Vaigai ஆகிய நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வழங்கினார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா ஏப்ரல் 2ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அழைப்பிதழையும் பிரதமரிடம் வழங்கினார். முன்னதாக, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியையும், நாடளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து அழைப்பு விடுத்தார்.