பிரதமர் வாழ்த்து கூறலாம்; முஸ்லீம் பெண் வாழ்த்து சொல்லக்கூடாதா? பாகிஸ்தான் குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பெண் கைது!

பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு அமைதியும் சமூக நல்லிணக்கமும் நிலவட்டும் என வாழ்த்துக்கூறி வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் முதோல் நகரைச் சேர்ந்த குத்மா ஷேக் என்ற அந்தப் பெண், கடந்த 23-ம்தேதி பாகிஸ்தான் குடியரசு தினத்தையொட்டி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசை வைத்திருக்கிறார். அதில், அனைத்து நாடுகளிலும் அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இறைவன் அருள்புரிவானாக என்று பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அருண் குமார் பஜந்திரி என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153 ஏ மத அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே வெறுப்பை தூண்டுதல், 505 (2) இரு பிரிவினரிடையே பகையை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து கர்நாடக காவல்துறை, ‘குத்மா ஷேக்கின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பாகிஸ்தான் குடியரசு தினவிழாவை கொண்டாடுவது போல் உள்ளது எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அது வன்முறைக்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார். அதை எதிர்த்து இன்னொரு தரப்பினர் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பதால் கைது செய்து அதை தடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது. மார்ச் 24-ஆம் தேதி கைதான அந்தப் பெண், 25-ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் தேசிய தினத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார், பாகிஸ்தான் மக்களுடன் இந்தியா நல்லுறவை விரும்புவதாக அவர் கூறியிருந்தார். 2015-ம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அந்நாட்டின் குடியரசு தின வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், அனைத்து நாடுகளிலும் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாழ்த்திய பெண்ணை கர்நாடக காவல்துறை கைது செய்திருப்பதை பலர் விமர்சித்துள்ளனர். பிரதமர் வாழ்த்தும்போது, ஒரு இளம் பெண் வாழ்த்துவதில் என்ன தவறு இருக்கிறது எனவும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.