தான் இந்து அல்ல என்பதால், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்ததாக, முஸ்லிமாக பிறந்த பரதநாட்டிய நடனக் கலைஞரான மான்சியா வி.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சூரில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்யம் கோயில் பத்து நாள் திருவிழாவிற்கு தயாராகி வருகிறது. இதில் சுமார் 800 கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இக்கோயில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
ஏப்ரல் 21 அன்று கோயில் வளாகத்தில் ஒரு நிகழ்ச்சியில் மான்சியா நிகழ்ச்சி நடத்தவிருந்தார், ஆனால் அவரது மதம் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என அலுவலக அதிகாரி ஒருவர் அவருக்குத் தெரிவித்திருக்கிறார்.
நடனக் கலைஞர் தனது நடனத்திற்கு முஸ்லீம் சமூகத்தின் சக உறுப்பினர்களிடமிருந்து புறக்கணிப்பு மற்றும் சமூக அழுத்தத்தை எதிர்கொள்வது குறித்து கடந்த காலத்தில் பேசியிருந்தார்.
தற்போது பரதநாட்டியத்தில் பிஎச்டி ஆய்வாளராக இருக்கும் மான்சியா, தனக்கு எந்த மதமும் இல்லை என்று ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் இசைக்கலைஞர் ஷியாம் கல்யாண் என்ற இந்துவை மணந்திருக்கிறார்.
அவரது பேஸ்புக் பதிவில், “நான் இந்து அல்லாததால் கோயிலில் நிகழ்ச்சி நடத்த முடியாது என்று கோயில் அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார். நீங்கள் ஒரு நல்ல நடனக் கலைஞரா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ளாமல், மதத்தின் அடிப்படையில் அனைத்து நிலைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், திருமணத்திற்குப் பிறகு நான் இந்துவாக மாறினேனா என்ற கேள்வியையும் எதிர்கொண்டேன். எனக்கு எந்த மதமும் இல்லை, நான் எங்கு செல்ல வேண்டும்’’ என வேதனையோடு கூறியிருந்தார்.
நடனக் கலைஞர், தான் இந்து அல்லாத காரணத்தால் தான் நிகழ்ச்சி நடத்தவிடாமல் தடுக்கப்பட்டது இது முதல் முறையல்ல என்றும் கூறியுள்ளார். திருச்சூரில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் தான் இந்து அல்லாதவர் என்பதால் நிகழ்ச்சி நடத்த விடாமல் தடுத்ததாக அவர் கூறியுள்ளார்.