ஹிஜாப்: முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள் | ர. முகமது இல்யாஸ்

ர. முகமது இல்யாஸ்

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்குள் நுழைய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அங்கு நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் சுமார் 21 ஆயிரம் பேர் கலந்து கொள்ளாததை முன்வைத்து முற்போக்காளர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்வோர் முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசுவோர், ஹிஜாப் அணிவதையும் தாலி அணிவதையும் ஒப்பிடுவோர், `முட்டாள் முஸ்லிம்களுடன் நில்லுங்கள்’ என்று கூறுவோர், பச்சை சங்கித்தனம் என்று எழுதுவோர் என பல தரப்பட்ட பதிவுகளையும் படிக்க முடிந்தது.

இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தது சன் நியூஸ் வெளியிட்டிருக்கும் ஃபோட்டோ கார்ட் ஒன்று. பெரும்பாலான முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியாமல் தேர்வுகளை எழுதியதாக டெக்கான் க்ரானிக்கல் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சன் நியூஸ் வெளியிடும் இந்த ஃபோட்டோ கார்ட்கள் தொடர்ச்சியாக பாதி உண்மைகளை மட்டுமே குறிப்பதாகவும், சில நேரங்களில் தவறாக வழிநடத்துவதாக அமைவதைப் பார்த்து வருகிறோம். அப்படியான ஒன்றாகவே இதுவும் இருந்திருக்கிறது. முஸ்லிம்களின் ஒடுக்குமுறையை வைத்து கமெண்ட்களில் பாஜகவைத் திட்டுவதற்கான/ விவாதிப்பதற்கான வாய்ப்பையும், ஷேர் செய்வதையும் மட்டுமே குறிக்கோளாக வைத்து இவை உருவாக்கப்படுகின்றன.

கடந்த 2021ஆம் ஆண்டில், கர்நாடகாவில் பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பாஸ் வழங்கப்படும் எனக் கூறப்பட்டதையடுத்து, தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளிலும், இதே அளவிலான எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வுக்குப் பதிவு செய்து எழுதாமல் இருந்திருக்கின்றனர் என்பதை அதிகாரப்பூர்வத் தகவல்கள் உணர்த்துகின்றன.

கர்நாடகாவில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்குப் பதிவு செய்து, தேர்வில் பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை (ஆண்டு அடிப்படையில்):

2018: 16,336
2019: 16,198
2020: 18,067
2021: 5063
2022: 20,994

(Source: KARNATAKA SECONDARY EDUCATION EXAMINATION BOARD)
இந்தியாவின் பொது வெளிகளில் முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சுற்றிய விவகாரங்கள் குறித்த செய்திகள் வெளிவரும் போதெல்லாம் அவற்றின் மூலம் நாம் வாழும் சமூகத்தில் நிலவி வரும் பாரபட்சங்கள் அதே பொது வெளியில் எட்டிப் பார்க்கின்றன. இந்த முறையும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. பாதிக்கப்படுவோருடன் நிற்பவர்கள் யார், பாதிக்கப்படுவர்களுக்கே அறிவுரை சொல்லி பாதிப்பை enable செய்பவர்கள் யார் என்பதையும் இவை வெளிக்காட்டுகின்றன. இதுவும் ஒரு படிப்பினை.

ர. முகமது இல்யாஸ், பத்திரிகையாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.