விருதுநகரை சேர்ந்த 22 வயது தலீத் பெண் ஒருவர், ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதேப்பகுதி மேலரத வீதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகிய ஹரிஹரன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒருநாள், பெத்தனாட்சி நகரில் உள்ள மருந்து குடோனுக்கு அப்பெண்ணை அழைத்து சென்று,அங்கு நயமாக பேசி அப்பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொண்டான். இதை அப்பெண்ணுக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளான் ஹரிஹரன். கொஞ்ச நாட்கள் கழித்தே அந்த வீடியோ விவரம் அப்பெண்ணுக்கு தெரியவந்ததுள்ளது.
தான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும், இல்லாவிட்டால் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டிய ஹரிஹரன், அப்பெண்ணை தனது இச்சைக்கு இஷ்டம்போல் பயன்படுத்தியுள்ளான். ஒருகட்டத்தில் அந்த வீடியோவை தனது நண்பர்களான, ஜீனத் அகமது, பிரவீன், மாரி, அகிலன், கோபி, பரணி-க்கு அனுப்பியுள்ளான்.
வீடியோவை பார்த்த இந்த 6 பேரும் தேவைபட்டபோது ஆளாளுக்கு அந்த பெண்ணை மிரட்டி சீரழித்துள்ளனர். இந்த 7 பேரின் செக்ஸ் டார்ச்சர் தாங்கமுடியாத அந்த அப்பாவிப்பெண், தனக்கு நேர்ந்த கொடுமையிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு 37 வயதான டிரைவர் மாடசாமி என்பவரிடம் விவரத்தை கூறியுள்ளார். மாடசாமி அந்த 7 பேர் கும்பலை மிரட்டி தனது செல்போனுக்கு அந்த வீடியோவை பெற்று, தன் பங்குக்கு அந்த பெண்ணை சீரழித்துள்ளான்.
சமூக ஊடகங்களில் போட்டுவிடுவேன் என மிரட்டியே இந்த 8 பேரும், அந்தப் பெண்ணை வன்புணர்வு செய்துள்ளனர். இதில் ஹரிஹரன், ஜீனத் அகமது, பிரவீன், மாடசாமி தவிர்த்து, மற்ற 4 பேரும் பள்ளி மாணவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கும்பலின் கொடுமை தாளாமல், காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார் அப்பெண். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஒரு தலீத் என்பதாலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்துள்ளதாலும், 8 பேரை கைது செய்து உடனடியாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதில் பேர் பள்ளி மாணவர்கள், என்பதால் அவர்களை அரசு காப்பகத்திலும், மற்ற 4 பேரையும் நீதிமன்ற காவலில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காமகொடூரன்கள் ஹரிஹரனும், ஜீனத் அகமதும் திமுகவின் விருதுநகர் மாவட்ட இளைஞரணியில் பதவி வகிப்பவர்கள் என்பதால் ஒரு தலீத் பெண்ணுக்கு பெரியார் மண்ணில்நேர்ந்த அவலத்துக்கு நீதி கிடைக்குமா? என தலித் அமைப்பினர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த கொடூரர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தருமாறு காவல் துறையினரிடம் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘விருதுநகரில் இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் புகார் வந்தவுடன் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் கண்காணிக்கப்படும்.
பொள்ளாச்சி சம்பவம், சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவங்கள் போல் அல்லாமல் விருதுநகர் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிப்பதற்கு, சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, இந்த வழக்கு தனி நீதிமன்றத்திற்குள் எடுத்து செல்லப்படும். மேலும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைக்கும். அதிகபட்ச தண்டனையும் பெற்று தரப்படும். விருதுநகர் பாலியல் வழக்கில் விரைந்து தண்டனை வாங்கி கொடுப்பதில், தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்கும். இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் கூறினார்.