காஷ்மீரிகள் படுகொலையா? குஜராத் படுகொலையா? இதையும் பாருங்க!

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில், குஜராத் இனப்படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பர்சானியா என்ற திரைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து, விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய இந்தத் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்க்க, காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மத்தியப் பிரதேச பாஜக அரசு அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம், ஹரியாணா, உத்தரகாண்ட், கோவா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் இந்த திரைப்படத்துக்கு கேளிக்கை வரி இல்லை என அறிவித்தன. கோவா மாநிலத்தின் தற்காலிக முதலமைச்சர் பிரமோத் சாவந்த், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை ஆதரித்துள்ளதோடு, கோவாவில் அதிக எண்ணிக்கையிலான காட்சிகள் திரையிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

காஷ்மீர் பண்டிட்டுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகக் கூறி, நாடு முழுதும் உள்ள பாஜகவினர் இத்திரைப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் பிரச்சாரம் செய்வதற்கென்றே எடுக்கப்பட்ட படம் என பலர் விமர்சிக்கும் நிலையில், உண்மையாக படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பர்சானியா என்ற திரைப்படத்தைப் பாருங்கள் என சமூக வலைதளங்களில் பலர் பரிந்துரைத்து வருகின்றனர்.

2002 குஜராத் இனப்படுகொலையில் காணாமல் போன மகனை தேடும் ஒரு பார்சி குடும்பத்தின் பயணத்தை பேசுகிறது பர்சானியா திரைப்படம். நசிருதீன் ஷா, சரிகா ஆகியோரின் நடிப்பில் ராகுல் தோலாகியாவின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம், 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி கோவாவில் நடந்த 36வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பஜ்ரங் தளத்தின் மிரட்டலை அடுத்து பர்சானியா திரைப்படத்தை திரையிட குஜராத் திரையரங்க உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். பெரும்பான்மை மதவெறி வன்முறையை அறிய இந்தப் படத்தை பாருங்கள் என சமூக ஊடகங்களில் பலர் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.