பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை மற்றும் பூட்டானை ஆக்கிரமித்து ‘அகண்ட பாரதம்’ வேண்டும் என்பது இந்துத்துவவாதிகளின் நீண்ட நாள் வேலைத்திட்டம். அதனால் ரஷ்ய அதிபர் புதின் சோவியத் யூனியனை மறு உருவாக்கம் செய்ய களமிறங்கியிருப்பதற்கு இந்து சேனா என்ற வலதுசாரி அமைப்பு ஆதரித்து போஸ்டர் ஒட்டியுள்ளது!
இதுகுறித்து டெல்லியின் மண்டி இல்லத்தில் அமைந்துள்ள ரஷ்ய கவிஞர் ரஷ்கின் பாண்ட் சிலைக்குக் கீழே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க இருக்கும் புதினுடன் இந்தியா இருக்கிறது. ஜெய் அகண்ட ரஷ்யா, ஜெய் பாரத்’ என எழுதப்பட்டுள்ளது.
