சாதி தீண்டாமை ஒழிப்பில் கம்யூனிஸ்டுகளின்கால் தூசுக்கு ஆகமாட்டார்கள்தலித்திய அமைப்பினர்…!!!

சாதி தீண்டாமை ஒழிப்பில் கம்யூனிஸ்டுகளின் கால் தூசுக்கு ஆகமாட்டார்கள்
தலித்திய அமைப்பினர்…!!!

தருமபுரி பாலனையும், ஏ.எம் கே- வையும் இணைத்துக் கொள்வோம்…!!!

சீனிவாசராவ்
ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன்
மணலூர் மணியம்மை
வாட்டாடாகுடி இரணியன்
ஜாம்பவானோடை சிவராமன் இவர்கள் யாருமே தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல.கீழத்தஞ்சையில் இவர்களின் ஈகம் என்பது, ஏதோ சமூக அடுக்கில் ஆதிக்கச் சாதியில் பிறந்து விளிம்புநிலையில் உள்ளோரை மீட்க வந்த மீட்பர்களாக அவர்கள் களத்தில் நிற்கவில்லை.

மாறாக,கம்யூனிச சித்தாந்தந்தை ஏற்றும் , கட்சித் திட்டங்களை முன்வைத்தும் களத்தில் நின்று சமூகசமத்துவத்தை முன்னெடுத்தவர்கள்.

எழுத்தாளர் அழகியபெரியவன் குறிப்பிட்டுள்ளது போல” ஒருவர் தலித்தாக பிறந்துவிட்டாலே சாதிய சமூகத்தை உணர்ந்தவர் ஆகிவிடமுடியாது” என்பதுதான் உண்மை.நாம் யாருடைய பக்கம் நிற்கிறோம் என்பதே முக்கியம்.

பிறப்பால் பார்ப்பனரான சீனிவாசராவ் என்ன செய்தார் என்பதும்,பிறப்பால் தலித்தியர்களான மராட்டிய ராம்தாஸ் அத்வாலேவும், பீகார் ராம்விலாஸ் பாஸ்வானும் எங்கே சேவகம் செய்தார்கள் என்பதையும் நோக்க வேண்டியது அவசியம்.

சமூக இயங்கியலின்படி அடிக்கட்டுமானத்தைத் தகர்க்கும்போது மேற்கட்டுமானங்கள் தானாகத் தகரும்.அதுவரை மேற்கட்டுமானங்களை பேசமாட்டீர்களா என்று வழக்கமாக ஒரு கேள்வி எழுப்புவார்கள் தலித்திய அறிவுஜீவிகள். இங்கே எந்த சாதியக் கொடூரத்திற்கு கம்யூனிஸ்டுகள் வக்காலத்து வாங்கியிருக்கிறார்கள்.?

சமகாலத்தில் உத்தப்புரம் தொடங்கி அரக்கோணம் வரை வேறு யாரைவிடவும் கம்யூனிஸ்டுகள்தான் முதலில் நின்றிருக்கிறார்கள்.இவை எதுவும் அறியாதவர் அல்ல ரஞ்சித்.ஆனாலும், தொடர்ந்து இங்கே எல்லாவற்றையும் சாதியாகச் சுருக்குவதன் மூலமும் உழைக்கும் மக்களாக ஒன்றுசேர்வதை ,அரசபயங்கரவாதத்தை எதிர்கொள்வதை சிதைக்கிறார்கள்.

ரவிக்குமார்கள் இதனை தொடர்ந்து அறிவுப்புலத்தில் செய்தார்கள்.இப்போது ரஞ்சித்துகள் வெகுசன உளவியலில் கட்டமைக்க முயல்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் வெண்மணி சம்பவத்தை சாதியக் கொடூரமாக ரவிக்குமார்கள் எழுதுகிறார்கள்.வெண்மணியில் தலித்துகள் மட்டும்தான் பலியானார்கள்.மறுக்கவில்லை.

காரணம்,அன்றே கோபாலகிருஷ்ண நாயுடுக்கள் செய்த இதுபோன்ற சாதிய ஒருங்கிணைவுகள்தான்.உழைக்கும் மக்களாக ஒன்றுசேராமல் தலித்துகளைப்போலவே குறைந்த கூலி பெற்ற இடைநிலை சாதி ஆட்களை தங்களின் சாதி ஆட்களாகவும், தலித்துகளை எதிராகவும் நிறுத்தியே தங்களின் அராஜகத்தை நிகழ்த்தினர்.அதில் ஓரளவு இடைநிலை சாதியாரிடம் வெற்றியும் பெற்றனர்.

இப்படித்தான் உழைக்கும் மக்களாக ஒன்றுசேர்வதை ஏதேனும் ஒரு சக்தி வரலாறு முழுதும் தடுத்து நிறுத்துகிறது.

இதனை ரஞ்சித்துகள் புரிந்துகொள்கிறார்களோ இல்லயோ ரஞ்சித்தை நம் ஆத்மார்த்த தோழனாக நம்பிய நாம்,அதாவது நம்முடைய தோழர்கள் உணரவேண்டும்.

முகநுல் பதிவு: Krishna Moorthy

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.