ராஜராஜன் ஆர்.ஜே
வைரமுத்து எனக்கு பிடித்த கவிஞர். அவரது பல பாடல்களை, சில கவிதைகளை மிகவும் ரசித்து இருக்கிறேன். பலமுறை பகிர்ந்தும் எழுதியும் இருக்கிறேன்.
ஆனால், சமீபத்தில் நான் பார்த்த இரண்டு படைப்புகள், அவரது ஆள்மன வக்கிரத்தை வெளிப்படுத்துவதாகவே இருந்தது.
- ஒரு கவிதை. காமத்தை சொட்ட சொட்ட எழுதிய ஒரு கவிதை போல பல வரிகளை எழுதிவிட்டு கடைசிவரியில் ஒரு குழந்தைக்கும் தாய்க்குமான கவிதையாக மாற்றி இருப்பார். அவரது கவித்திறமையோடு அவரது வக்கிரமும் வெளிப்பட்டிருக்கும்.
- மூன்று நாட்களுக்கு முன்னால் வெளியான அவரது பாடல்(ஆல்பம்) ஒன்று. ஒரு பள்ளி மாணவி ஒரு வயதான கவிஞரை உருகி உருகி காதலிப்பது போன்ற பாடல், காட்சியமைப்புகள். ஒரு பக்கம் ராஜகோபாலன்களை கண்டித்துவிட்டு, இதைக் கண்டுக்கொள்ளாமல் கடக்க முடியவில்லை. வயதான ஆணை ஒரு சிறுமி உருகி காதலிக்க வேண்டும். காரணம் அவன் கவித்துவமானவன்.
தற்போது ஒளிபரப்பாகும் இரண்டு தமிழ் சீரியல்கள். ஒன்று விஜய் டிவியில், இன்னொன்று ஜீ தொலைக்காட்சியில்.. இரண்டிலுமே வயதான ஆண்களை இளம்பெண்கள் காதலித்து திருமணம் செய்வது தான் கதை. ஒரு புரட்சிக்காகவேணும் ஒரு வயதான பெண்னை வயது குறைந்த ஹீரோ காதலிப்பாரா என்றால், மாட்டார். அவ்வளவு தான் நம் சமூகம்.
இந்த சமூகத்தி்ல் வைரமுத்துவின் பாடலும் வக்கிரமும் இயல்பாக தெரியலாம். குழந்தை மணங்களின் மனம் இன்னும் மாறாத சமூகம் இது. ஆனால், மாறும் சமூகத்தில் இது ஒரு கிரிமினல் குற்றம். Let’s not encourage pedophiles! Let’s voice against paedophiles!
ராஜராஜன் ஆர்.ஜே, எழுத்தாளர்.