மாலதி மைத்ரி
அரசு அரசியல் இலக்கியம் கலை ஊடகம் உள்ளிட்ட எல்லா பொதுத்துறைகளில் இயங்கும் ஆண்களில் பொது ஒழுக்க கிரிபிலிட்டி கொண்டே ஒருவர் மதிக்கப்பட வேண்டும் அவன் நோபல் பரிசு வாங்க தகுதியானவன் ஆஸ்கர்வாங்க தகுதியானவன் எனவே அவனின் பாலியல் குற்றங்களை பொருட்படுத்த தேவையில்லை என்னும் ஆண்கள் உங்க பிரபலத்துக்கு நேரடியாய் போய் பாலியல் சேவை செய்யுங்கள் உங்களைத் தடுக்கவில்லை.
கட்சி, நிறுவன பொருப்பாளர்கள் செக்ஸூவல் அபியூசர்களை அதிகாரத்தால் அரவணைத்து பெண்களிடம் பாலியல் அத்துமீற அங்கீகாரமளித்து விடாதீர்கள்.
எம்ஜிஆரை மக்கள் தலைவரா ஏற்கலையா பாலு மகிந்தராவை, பாப்லோ நெருடாவை படைப்பாளியா கொண்டாடலையாயென வரலாற்று கரைப்படிந்த முந்நாள் செக்ஸூவல் அபியூஸ் குற்றவாளிகளை துணைக்கழைத்து படைப்பையும் படைப்பாளியையும் தனியா பிரித்து பார்க்க முட்டுக்கொடுத்து இந்நாள் செக்ஸூவல் அபியூசரை நியாயபடுத்தும் சந்தர்ப்பவாத பெண்ணியம் பேசுவது பெண்ணினத்துக்கு இழைக்கும் துரோகமும் அநீதியுமாகும்.
ஒருகாலத்தில் குழந்தைத் திருமணம், சதி, விதவைகள் மொட்டை, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவை வரலாற்றில் நடைமுறையில் இருந்ததெல்லாம் இன்று கிரிமினல் குற்றங்கள்.
ஆண்களின் பாலியல் துன்புறுத்தல் வீக்னஸை கண்டும் காணாமல் நகர வலியுறுத்துவோர் இருவர் பர்ஸ்ட் ஹாண்ட் அபியூசர் அண்டு அதிகாரத்திலிருக்கும் அபியூஸ் சிஸ்டத்தை பாதுகாத்து நலனடைய விழையும் அடிமைகள்.
மாலதி மைத்ரி, எழுத்தாளர்.