டாக்டர் ரவீந்திரநாத்
மலட்டுத் தன்மையை நீக்க ” சாசு” விரட்டுதல்… மாட்டுச்சாணியை பயன்படுத்தி,”வசிய மருந்து” தயாரித்தல்… வசிய மருந்து உண்ட பின்பும், குழந்தை பேறு கிட்டவில்லை எனில், சாமியாடியுடன் உறவு கொண்டு பிள்ளை பெறுதல்.. அதன் மூலம் “” மலடி”” என்ற அவர் பெயரிலிருந்து தப்பித்தல்…
கணவன் மலடாய் இருந்தும் அதை இந்த ” சாசு விரட்டுதல்” மூலம் மறைத்து, ஆணுக்கு மலட்டுத்தன்மை இல்லை என்ற ஆணாதிக்கத்தை நிலைநாட்டல் என்ற சிகிச்சை முறை எல்லாம் நம் பாரம்பரியத்திலும் இருந்துள்ளது.
இதை ஆதாரங்களுடன் பதிவு செந்துள்ளார் ,பேராசிரியர் கே.ஏ.ஜோதிராணி அவர்கள் ( இவர் காலம் சென்ற நாட்டுப்புறவியல் துறை பேராசிரியர் முனைவர் கே.ஏ.குணசேகரனின் சகோதரி ஆவார்)
பேராசிரியர் கே.ஏ. ஜோதிராணி அவர்களின் ஆய்வுக் கட்டுரையை ,காலம் சென்ற மார்க்சிய அறிஞர் வழக்கறிஞர் வெ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தனது “சோழர்கால உற்பத்தி முறை முதலிய கட்டுரைகள்”” என்ற நூலில் வெளியிட்டுள்ளார்.
” சாசு ” விரட்டுதல், நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாக இருந்துள்ளது. அதாவது அக்கால ” விந்து கொடை ( sperm donation ) முறையில் மகப்பேறு பெறும் முறையாகும்.
இன்றைய நவீன ” கருத்தரிப்பு ” முறைகள், இது போன்ற ” சாசு” விரட்டுதல் சிகிச்சை முறை அவசியமற்றது என்றாக்கி விட்டது.
அதாவது, செயற்கை கருத்தரிப்பு அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி,சாசு விரட்டுதலை நிராகரித்துவிட்டது.
நிலைமறுப்பின் நிலைமறுப்பு ( negation of negation ) என்ற இயங்கியல் விதி ( dialectical law) இதில் செயல் பட்டுள்ளதை அறியமுடியும்.
பழையதை நிராகரித்து புதியது தோன்றிவிட்டது. இந்தப் புதிய வளர்ச்சிப் போக்கை, செயற்கை கருத்தரிப்பு அறிவியல் வேண்டாம் என நிராகரித்துவிட்டு, நமது
பாரம்பரிய “சாசு” விரட்டுதல்தான் வேண்டும் என்பதை ஏற்க முடியுமா?
“பழையன கழிதலும் ,புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்ற முற்போக்கு தமிழ் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்போம்.
Dr.G.R.Ravindranath முகநூல் பதிவு.