செயல்பாட்டாளரும் மருத்துவருமான வீ. புகழேந்தியின் மருத்துவமனையை அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர்.
இதுகுறித்து செயல்பாட்டாளரும் ஒளிப்பட கலைஞருமான ஆர். ஆர். சீனிவாசன் எழுதியுள்ள தனது முகநூல் பதிவு:
இன்று காலையில் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் சதுரங்கப் பட்டினத்தில் இயங்கி வரும் மருத்துவர் வீ புகழேந்தி அவர்களில் மருத்துவமனை அரசு அதிகாரிகளால் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சீல் வைக்கப்பட்டது
கல்பாக்கம் சுற்றியுள்ள ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தினமும் ஓய்வு இல்லாமல் மருத்துவம் பார்த்து வரும் மக்கள் மருத்துவர் புகழேந்தி
மற்ற இடங்களில் கொரோனா இருக்குமோ என்ற பயத்தில் அருகில் உட்கார வைத்துக்கூட சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மத்தியில் தன் உடல்நலன் பாராமல் நம்பி வரும் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் கிளினிக் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் மருத்துவமனையை அதிகாரிகள் சீல் வைத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மிகப்பெரிய அளவில் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை சீல் வைத்தது சட்ட விதிகளின் படி சீல் வைக்கும் முன் எந்த காரணங்களுக்காக சீல் வைக்கப்பட்டது எந்த விளக்கத்துடன் நோட்டிஸ் ஒட்டவோ அல்லது சம்மந்தப்பட்ட மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனும் விதிமுறைகள் முற்றிலுமாக மீறபட்டுள்ளது இது தொடர்பாக மருத்துவர் புகழேந்தி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைத்திடம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரியான DGP அவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்துள்ளார் இந்த தகவல் மாவட்ட ஆட்சியர் திரு ஜான் லுயின்ஸ் அவர்கள் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் இந்த புகாரை கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து மருத்துவமனையை மீண்டும் செயல்பட மக்களுக்கு உதவி செய்தால் சுற்றுப்புற சிகிச்சை பெரும் மக்களின் மனநிலையாக உள்ளது
பின் குறிப்பு: மருத்துவர் வீ புகழேந்தி அவர்கள் தற்போதைய முதல்வர் மாண்புமிகு திரு முக ஸ்டாலின் அவர்களிடம் அவருடைய மருத்துவ சேவைக்காகவும் கொரோனா தடுப்பு பணிக்காகவும் சாதனையாளர் விருதை பெற்றுள்ளார்…