தலை துண்டிக்கப்பட்ட கடவுள்களின் புதல்வன் “கர்ணன்” | பகுதி – 2

ப.ஜெயசீலன் 

“revenge is the purest human emotion”

தலித் சினிமாக்களில் தவிர்க்கமுடியாத ஒரு கூறாக “counter narrative” இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். தங்களை பற்றிய உண்மைக்கு புறம்பான பொது சித்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் அல்லது மறுக்கும் அல்லது சிதைக்கும் முனைப்பை தலித்திய கலை, இலக்கிய, சினிமாவில் நீங்கள் காணலாம். தலித்துகள் பற்றிய மிக விஸ்தாரமான, நுணுக்கமான, தேர்ந்த கதையாடல்கள் பார்ப்பனிய சனாதனத்தை உள்வாங்கி பார்பனியர்களால், சாதி ஹிந்துக்களால் ஏன் தலித்துகளாலேயே  உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த கதையாடல்கள் எல்லாமும் தலித்துகளின் militancyயை துளிர் விடாமல் செய்யும் தன்மையை கொண்டவை. முந்தைய பதிவில் சொன்னது போல் ஒருவனை தோற்க்கடிக்க சண்டையிட தேவையில்லை. அவன் தோற்கடிக்கப்பட்டதான, தோற்கடிப்பட்டதற்கான நியாயத்தை  புனைவு கதையாய் அவனை 100 முறை கேட்க செய்தாலே அவன் தான் தோற்கடிக்கபட்டவன் என்பதையும் தோற்கடிக்கபட வேண்டியவன் தான்  என்பதையும் நம்ப தொடங்கிவிடுவான். இது ஒரு மிக எளிமையான psychology .

நம்மை காயப்படுத்தியவனை திரும்ப காயப்படுத்தவேண்டும் என்று நினைப்பது ஒரு மிக எளிமையான, அடிப்படையான survival instinct சார்ந்த emotion. நாம் ஒருவனை காயப்படுத்தினால் அவன் நம்மை திரும்ப காயப்படுத்த முயல்வான் என்று நமக்கு தோன்றுவதும்/அஞ்சுவதும்  ஒரு இயல்பான, அடிப்படையான survival instinct சார்ந்த ஒரு emotion. இந்திய சூழலில் தன்னை கொடூரமாக ஒடுக்கும் சாதி ஹிந்துக்களை, பார்ப்பனர்களை தலித்துகள் திரும்ப தாக்கும் முனைப்பில்லாமல் இருப்பது against their natural survival instinct. தாங்கள் ஒடுக்கும் தலித்துகள் நிச்சயமாக தங்களின் மீது ஒரு கொடிய தாக்குதலை நிகழ்த்துவார்கள் என்று பார்ப்பனர்களுக்கும், சாதி ஹிந்துக்களுக்கும் தோன்றாமல் இருப்பதும் against their natural survival instinct. இரு தரப்புமே அடிப்படையான survival instinct இல்லாமல் இருப்பது அவர்கள் ஒரு  psychological conditioningக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடே. இது போன்ற ஒரு இயல்புக்கு மாறான மனோநிலையை இத்தனை நீண்ட காலம் சமூகத்தில் கட்டமைக்க, நிறுவ  கலை இலக்கிய காரணிகள் முக்கிய பங்காற்றி இருக்க வேண்டும்.

ஃபான்றி படக் காட்சி


இந்த சூழலின் பின்னணியில் தான் காலா, Fandry, Newton, கபாலி, மாவீரன் கிட்டு, கர்ணன் போன்ற சமகால சினிமாக்களை நாம் அணுகவேண்டும். இந்த எல்லா சினிமாக்களும் அடிப்படையில் தாங்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதை விடவும் இதுவரை தங்களை பற்றி சொன்னவைகளில் உள்ள போதாமைகளை மறுப்பதையையும், தங்கள் மீதான கற்பிதங்களுக்கு எதிரான ஒரு சித்திரத்தை நிறுவுவதையையும் பிரதானமான நோக்கமாக கொண்டது. சுருக்கமாக சொன்னால் இந்த திரைப்படங்கள் எதிர் வாதம் புரிபவை. இன்னும் சொன்னால் தலித்துகளின் மீதான சனாதனவாதிகளின், சாதி ஹிந்துக்களின் வாதத்திற்கு எதிரான எதிர்வாதம். இந்த எதிர்வாதம் என்பது திரைப்படத்தின் கதை, திரைக்கதை, காட்சி அமைப்பு, இசை, ஆடை என்று எல்லா தளங்களிலும் விரிகிறது. 
இதன் நீட்சியாகத்தான் காலா, கர்ணன் போன்ற திரைப்படங்கள் மீது வைக்கப்படும் “கதாநாயக பிம்ப” விமர்சனத்தை அணுக வேண்டும். காலா, கர்ணன் போன்ற படங்களை விமர்சிப்பவர்கள் இந்த படங்களில் தொனிக்கும் நாயகத்தன்மை குறித்தும், நாயகனின் சாகசத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பி இது தலித்திய சினிமாவோ அல்லது மக்கள் சினிமாவோ இல்லை என்கிற வாதத்தை முன் வைக்கிறார்கள். இந்த வாதத்தை பலர் முன்வைத்தாலும் அண்ணன் திருமாவளவன் மக்களை அமைப்பாய் திரட்டுவதின் மூலம்தான் சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்றும் திரைப்படங்களில் நாயகனின் சாகசத்தின் மூலம் மாற்றம் நிகழ்வதாய் காட்டுவதின் மூலம் மக்கள் அமைப்பாய் திரள்வதில் ஆர்வமற்றவர்கள் ஆகிறார்கள் என்கிற தொனியில் பேசி உள்ளதையும், Tamilstudio தோழர் அருண் திரைப்படங்களில் தூக்கி நிறுத்தப்படும் நாயகத்தன்மை குறித்தும் அந்த சினிமாக்கள் ஏன் மக்களுக்கான சினிமாக்கள் இல்லை என்பதை பற்றியும்  தொடர்ந்து பேசி/எழுதி வருவதையும் நான் முக்கியமான விமர்சனமாக கருதுகிறேன். நான் இந்த கருத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறேன். 

தலித்துகள் இயக்கும் தலித்திய சினிமாக்களில் நாயகத்தனமையை தூக்கி பிடிக்க கூடாது என்பதே ஒரு சாதிய மனோநிலைதான். சில ஆண்டுகளுக்கு முன்பு Harvard universityல் PhD பயிலும் Suraj Yengde பங்குபெற்ற India today tv நிகழ்ச்சியில் சுராஜ் அரசியலில் தலித்துகள் எப்படி வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பேசி கொண்டிருக்கும் போது நெறியாளர் அரசியலில் வாய்ப்பு பெற்ற மாயாவதி எத்தனை ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளார் என்பதையும், மாயாவதி எப்படி தனக்குத்தானே சிலை வடித்துக்கொண்டார் என்பதையும் சிரித்தவாறு சுராஜை இடைமறித்து சொன்னார். இதன் பொருள் தலித்தாகிய மாயாவதியை பரந்த மனதோடு ஒரு அரசியல்வாதியாக நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனால் மாயாவதியும் பிற சாதி ஹிந்துக்களை போலத்தான் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தனக்குத்தானே சிலை வடித்துக்கொண்டுள்ளார். பிறகு ஏன் நீங்கள் தலித்துக்ளுக்கு அரசியலில் இடம் இல்லையென்று புலம்புகிறீர்கள்? . ஒரு சாதி ஹிந்து அரசியலுக்கு வரும்போது அப்பழுக்கற்ற புனிதராய்  இருக்க வேண்டும் என்று பொது சமூகம் எதிர் பார்ப்பதை விடவும் ஒரு தலித் அரசியலுக்கு வரும்போது அதிகமாக எதிர்பார்க்கிறது. மாயாவதியும் நமது சமூகத்தில் இருந்து வந்தவர்தானே? எல்லா சாதியை சேர்ந்த அரசியல்வாதிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் போது அதே அரசியல் களத்தில் புழங்கும் மாயாவதி மட்டும் அதற்க்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று ஒரு சாதி ஹிந்துவின் மனம் எதிர்பார்ப்பதும், மாயாவதியின் ஊழல் ஒரு சாதி ஹிந்துவின் மனதில் கடும் கொதிப்பையும் உருவாக்கிறது.

வெகு சாதாரணமாக ஒரு சாதி ஹிந்துவுக்கு கிடைக்கும் சமூக வாய்ப்பை தலித்துகள் கோரினால் சாதி ஹிந்துக்கள் அந்த தலித்திடம் சிறப்பு தகுதியை எதிர்பார்ப்பார்கள்.  வெகு சாதாரணமாக எஜமான், நாட்டாமை, தேவர்மகன் போன்ற பொறுக்கித்தனமான நாயகத்தன்மையை கட்டமைக்கும் சினிமாக்கள் வரும். ஆனால் தலித்துகள் திரைப்படம் எடுக்க வரும்போது அவர்கள் எடுத்த திரைப்படத்தை நோக்கி இல்ல ஜி hero worship பண்ற மாதிரி இருக்கு மஜித் மஜிதி மாதிரிலாம் இல்ல ரொம்ப சுமார் என்பார்கள். நாயகன், தேவர்மகன், சின்ன கவுண்டர், நாட்டாமை என்று படம் எடுக்கிறார்கள் என்று புலம்புகிறீர்கள். ஆனால் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் பதேர் பாஞ்சாலி, அக்ரகாரத்தில் கழுதை போன்ற படங்களை எடுக்காமல் ஏன் காலா, கர்ணன் எடுக்கிறீர்கள்? என்று கேட்பார்கள்.

தொல். திருமாவளவன்


இதற்கான விடை அண்ணன் திருமாவளவன் அடிக்கடி சொல்லும் “மைய நீரோட்டத்தில்” இருக்கிறது. தலித்திய சினிமா என்று தலித்துகளின் சினிமா அந்நியப்பட்டு போக வேண்டும், சினிமா விழாக்களில் பார்ப்பனர்களே பார்த்து கண் கலங்கி அழுது சூப்பர் அப்பு என்று பாராட்டி விருது தரும் தன்மையோடு இருக்க வேண்டும். mainstream படங்கள் என்பது நாட்டாமை போல ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும்  ஒரு சாதிய மனோநிலை. மைய நீரோட்டத்தில் கலக்க எப்படி தேர்தல் அரசியல் என்னும் சமரசங்கள் அடங்கிய பாதை அண்ணன் திருமாவளவனுக்கு ஒரு யுக்தியாக இருக்கிறதோ அதே போல தலித்திய சினிமாக்களை mainstream ஆக்க தலித்திய சினிமாக்களிலும் சில யுக்திகள் தேவைப்படுகின்றன. vck ஜெயித்தால் நமது கூட்டணி ஜெயித்து தளபதி முதல்வர் ஆவர் என்று சாதி ஹிந்துக்களை convince செய்து ஓட்டு வாங்குவதே எவ்வளவு பெரிய சாகசமாக இருக்கிறது? இந்நிலையில் ஆயிரமாண்டுகளாக சாதி புரையோடி போயிருக்கும் சாதிய சமூகத்தில் தலித் ஒருவன் சாதியை பயிலும் சாதி ஹிந்துக்களை ஓட விட்டு அடிப்பதை சாதி ஹிந்துக்களையே திரையரங்குக்கு வந்து காசு கொடுத்து பார்க்க வைப்பது எவ்வளவு பெரிய சாகசம்? 

நான் முன்பே சொன்னதை போல விரும்பியோ விரும்பாமலோ தலித்துகளின் படைப்புகள் “counter narrative” எனும் கலக/எதிர் குரலை அடிப்படையாக கொண்டவை. சம்பூகனை வெட்டிய ராமனை பார்ப்பனியம் உயர்த்தி பிடிக்கும் போது இயல்பாக ராமனை வீழ்த்தும் ஒரு நாயக பிம்பம் காலாவாக வடிவம் கொள்கிறது. காலாவின் பிம்பம் என்பது உண்மையில் காலாவினுடையது அல்ல. காலவினுடைய அடையாளம் என்பது ஹரி தாதாவிற்கு காலாவை பற்றி உள்ள பிம்பத்திற்கும், ஹரி தாதாவின் பிம்பத்திற்கும் உள்ள எதிர் வடிவமே காலாவினுடையது. காலா is nothing but a counter narrative of hari dada’s version. இதை நீங்கள் புரிந்து கொண்டால் நீங்கள் ரஞ்சித் படங்களிலும், மாரியின் கர்ணனிலும் வெளிப்பட்ட நாயகத்தன்மை குறித்தும், சாகச நாயகன் தன்மை குறித்தும் புதிய கோணத்தில் அணுகுவீர்கள்.


இவை தாண்டி திரைப்பட வடிவத்தில் “நாயகத்தன்மை” அல்லது “சாகச நாயகன்” என்பது அடிப்படையில் பார்வையாளனை மைய்ய கதாபாத்திரத்தின் மேல் பிடிப்பு கொள்ள செய்யும் ஒரு திரைக்கதை யுக்தி. திரைப்படங்களில் நாயகத்தன்மை குறித்து பேச, பார்வையாளனுக்கு அது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பேச இன்னும் நிறைய இருக்கிறது என்றாலும் தட்டச்சு தெரியாமல் தட்டச்சு செய்யும் சவாலை கருத்தில் கொண்டு 
அடுத்த கட்டுரையில்,  கர்ணன் திரைப்படம் குறித்தான விமர்சனத்தோடு முடியும் 

ப. ஜெயசீலன், சினிமா-சமூகம் குறித்து த டைம்ஸ் தமிழில் எழுதிவருகிறார்.

 

 

One thought on “தலை துண்டிக்கப்பட்ட கடவுள்களின் புதல்வன் “கர்ணன்” | பகுதி – 2

  1. முடிந்த வரை ஆங்கில வார்த்தைகளை தமிழ் படுத்தி எழுத முயற்சிக்கவும். ஆங்கில வார்த்தைகளை இடையிடையே பயன்படுத்துவதன் மூலம்தான் கட்டுரைக்கு ஒரு மதிப்பிற்கும் என்ற உளவியல் உள்ளதாக பார்க்கிறேன். என்னை போன்று ஆங்கிலம் தெரியாதவர்கள் புரிந்து கொள்வது சிக்கல்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.