ஒருவர்கூட உதவிக்கு வரவில்லை | இறந்த மனைவியை சைக்கிளில் எடுத்து சென்ற முதியவர்: உ.பி. அவலம்!

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டம் மதியாரு கோத்வாலி பகுதியில் உள்ள அம்பேர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலக்தாரி சிங், இவருடைய 50 வயது மனைவி பல நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் உமாநாத் சிங் மாவட்ட மருத்துவமனையில் கிசிக்கைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த திங்களன்று அவருடைய மனைவியின் உடல்நிலை மோசமடைந்தது. சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததால் ஆம்புலன்ஸில் ஏற்றி அப்பெண்ணின் உடலை அவருடைய கிராமத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பிவைத்தது.

இதனிடையே திலக்தாரி சிங்கின் மனைவியின் மரணத்திற்கு துக்கம் கேட்காமலும், அவருடைய உடலை அடக்கம் செய்யக் கூட கிராமத்தினர் யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் கொரோனாவால் அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அவருடைய உடலை அடக்கம் செய்யவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் கிராம மக்கள்.

இதன் காரணமாக விரக்தியடைந்த முதியவர் திலக்தாரி சிங், தனது மனைவியின் உடலை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அடக்கம் செய்வதற்காக பல மணி நேரம் அலைந்து திரிந்துள்ளார். ஒரு கட்டத்தில் மேலும் சைக்கிளை நகர்த்த முடியாமல் சாலையிலேயே அவர் சைக்கிளுடன் தனது மனைவியின் சடலத்தை போட்டுவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்தார்.

இதனையடுத்து இது குறித்து அறிந்த உள்ளூர் காவல்துறையினர் திலக்தாரி சிங்கின் மனைவியின் உடலை அவர்களே அடக்கம் செய்ய உதவியுள்ளனர்.

திலக்தாரி சிங்கின் துயரம் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும்நிலையில், மாநில அரசாங்கத்தின் மோசமான நிர்வாகமே இத்தகைய அவலத்துக்குக் காரணம் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.