சினிமாவில் நடிக்க உதயநிதி ரூ. 30 ஆயிரம்தான் சம்பளம் வாங்கினாரா?

நரேன் ராஜகோபாலன்

முட்டாளாக போகும் தமிழக வாக்காளனுக்கு, ஒன்றும் செய்ய முடியாத, கையறு நிலையில் இருக்கும் ஒரு தமிழ்நாட்டு குடிமகன் எழுதுவது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திமுக வேட்பாளரும், இளைஞரணி தலைவருமான திரு. எஸ். உதயநிதி வேட்பு மனு தாக்கலின் போது சமர்பித்த affidavit விவரங்களை நேற்று பதிந்து இருந்தேன். சிரிக்கிறதுக்கான மேட்டர் இல்லை அது, ரொம்ப சீரியசான மேட்டர்.
உதயநிதி சமர்ப்பித்ததில் அவருடைய வருவாய்
ரூ. 1,50,17,700 (2017-18)
ரூ. 4,00,090 (2018-19)
ரூ. 4,89,520 (2019-20)
என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
இப்போது சில கேள்விகள்

1 ) அரசியலுக்கு வருவதற்கு முன்பு (pre 2018) உதயநிதி சொன்னது சொந்தப்பணத்தில் தன்னை ஹீரோவாக்கி கொள்ள நடிக்கவில்லை, அப்படி என்றால் இன்றைக்கு வரைக்கும் நான் சொந்த காசில் தான் ஹீரோவாக நடித்திருக்க வேண்டும், தான் இப்போது வெளி நிறுவனங்களின் படங்களில் நாயகனாக நடிக்கிறேன் என்பதே. சொந்த பணம் என்று அவர் சொன்னது “ரெட் ஜெயண்ட் மூவிஸை” என்று வைத்து கொண்டால், ரெட் ஜெயண்ட் மூவிஸிற்கான source of income எங்கிருந்து வந்தது ? இல்லை அதுவும் மதுரை அன்புச்செழியன், செளகார்பேட்டை சேட்டுகள் போன்ற ஃபைனான்சியர்களுக்கு வட்டி கட்டி வாங்கிய பணமா ?

2 ) வெளிப்படங்களில் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தன்னை நாயகனாக்கி நடிக்க வைத்தார்கள் என்பது தான் உதயநிதியின் பார்வை. 2017 -18 காலகட்டங்களில் அவர் 5 படங்கள் நடித்தார் (அத்தனையும் அட்டர் ப்ளாப் என்பது தனிக்கதை.) அதன் பின்பும் போன வருடம் வந்த “சைக்கோ” வரைக்கும் பெரும்பாலும் வெளிப்படங்கள் தான். வெளிப்படங்களில் நடிக்கும் போது உதயநிதி சம்பளமாக வெறும் ரூ. 33,000+ தான் மாதத்திற்கு பெற்று கொண்டாரா ? இல்லை, தமிழ் சினிமாவை உய்விக்க வேண்டி, இலவசமாக நடித்து கொடுத்தாரா ?

3 ) ரெட் ஜெயிண்ட் மூவிஸாவது ஒரு நிறுவனம். அதன் இலாப, நட்டங்கள், வரவு, செலவுகள் என்பவை நிறுவனத்தினை சாரும். ஆனால் ஒரு நடிகர் என்பவரின் வருவாய் என்பது தனிப்பட்ட வருவாய் தான். அதை எந்த நிறுவனத்தின் கணக்கிலும் எழுத முடியாது. தமிழ் சினிமாவில் இரண்டு சீன்களில் வந்தாலும், டயலாக் இருந்து பேசி நடிக்கும் துணை நடிகர்களின் சம்பளமே குறைந்தபட்சம் 30,000ரூ. இதை கோடம்பாக்கத்தில் யாரை கேட்டாலும் சொல்வார்கள். ஆனால் கதாநாயகனாக தொடர்ச்சியாக நடித்த ஒருவரின் கடந்த இரண்டு வருட வருவாய் என்பது துணை நடிகர்களின் சம்பளத்தினை விட குறைவாக இருக்குமா ?

4 ) வெளிப்படங்களில் தன்னை ஹீரோவாக போடுகிறார்கள் என்று உதயநிதி சொன்னதே தானொரு தொழில்முறை நடிகன், தன்னை நம்பி பணம் முதலீடு செய்கிறார்கள், அந்த முதலீடு இலாபம் ஈட்ட கூடியது என்று தயாரிப்பாளர்கள் நம்பி தான் செய்கிறார்கள் என்பது தான். ஒரு தொழில்முறை நடிகனின் வருவாய் என்பது இவ்வளவு தானா ? (அ) கணக்கில் இவ்வளவு பெற்று கொண்டு மீத வருவாயினை உதயநிதி கருப்புப் பணமாக பெற்று கொண்டாரா ?
Representation of People’s Act, 1951 (RPA) என்பது தேர்தலில் பங்கு பெறும் வேட்பாளர்களின் நடத்தை சார்ந்தது. அதில் Section 33, Rule 4A of the Conduct of the Election Rules தெளிவாக சொல்வது

“all candidates contesting national/state assembly elections to furnish an affidavit comprising basic information such as their assets, liabilities, educational qualifications and criminal antecedents (if any). Failure to furnish information or filing false information in the affidavit is a penal offence under Section 125A of the RPA which prescribes a penalty of maximum six months or fine or both”
அதே சட்டத்தின் Section 8A சொல்வது “any candidate found guilty of corrupt practice from contesting the election.” Non-disclosure of information has been interpreted as a “corrupt practice” amounting to disqualification.
Section 123 of the RPA defines “Corrupt Practices” to include “bribery”, “undue influence”, appealing to vote or not on grounds of caste, religion etc.
சரியான தகவல்களை தராமல் போவதும் (failure to furnish information) தவறான தகவல்களை தருவதும் (filing false information), தரப்பட வேண்டிய தகவல்களை தராமல் மறைப்பதும் (Non disclosure of information) தேர்தல் விதிமுறைகளின் படி குற்றம். குற்றவியல் தண்டனை சட்டங்கள் அதை தனியாக கையாள்வது ஒரு பக்கம் இருந்தாலும், இம்மாதிரியான தகவல்களை அடிப்படையாக கொண்டு அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்ய முடியும். அதற்கான அதிகாரம் தேர்தல் அலுவலருக்கு உண்டு.

ஒரு ஊரறிந்த நடிகர், தன்னுடைய வருவாய் இவ்வளவு தான் என்று பகிரங்கமாக பொய் சொல்லி, மக்களுக்கு விபூதி அடிக்க பார்க்கிறார். (அப்பன் கையில வேல் எடுத்தா, புள்ள விபூதி அடிக்கிறது நியாயம் தானே!) அதையே தன்னுடைய வருமான வரி படிவத்திலும் செய்கிறார். சட்ட ரீதியாகவும், பொது வெளியின் நியாயப்படியும் அயோக்கியத்தனம். இன்னும் கூடுதலாக சொல்லப் போனால், ஊரறிந்த ப்ராடுத்தனம். இது ஒரு சீரியசான பிரச்சனை, ஆனால் இன்றைக்கு இருக்கக் கூடிய ‘கும்பல்ல கோவிந்தா’ மனநிலையில் யாருமே இதை சீரியசாக பேச மாட்டார்கள்.
எதிரணி வேட்பாளரோ, ஊடகங்களோ, தேர்தல் ஆணையமோ ஒரு கேள்வியும் கேட்காது. அப்படியே யாராவது வழக்கு தொடர்ந்தாலும் (மோடியின் மீது இதை போல சொந்த நிலத்தை காட்டாமல் மறைத்த ஒரு வழக்கு இருக்கிறது.) அடுத்த 3 – 4 தேர்தல்கள் முடிந்து, உதயநிதியே VRS வாங்கலாம் என்று நினைக்கும் போது தான் தீர்ப்பே வரும்.

ஆனால் வாக்களிக்கும் நீங்கள் தான் முட்டாப் புன்னகைகள். தன்னுடைய சுயவருவாயில் கூட, நா கூசாமல் பொய் சொல்லும் ஒரு வாரிசை தான் விடிவெள்ளி என்று சொல்லி, “தமிழகத்தை மீட்போம்” என்று அறைகூவல் விடுகிறார்கள். உண்மையில் தமிழகத்தை இவர்களின் பிடியிலிருந்தும், இன்றைக்கு ஆண்டு கொண்டு இருக்கும் அராஜக அதிமுகவின் பிடியில் இருந்தும் தான் மீட்க வேண்டும். ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர்கள் அல்ல.
ஒருத்தன் டெல்லில இருந்துட்டு கழுத்தை நெறிப்பான். நீங்க வயித்துல அடிப்பீங்க. ஆனா நாங்க எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு நீங்க தான் உலகத்துலயே ஒண்ணாம் நம்பர் யோக்கியன்னு நம்பி, வாக்களிச்சுட்டு திரும்பவும் வெந்ததை தின்னு, விதி வந்தா சாவோம்னு காத்துட்டு இருக்கணும். உங்களுக்கு வாக்களிச்சா, ‘ஜனநாயகம், மக்கள் புரட்சி’ வென்றது, வாக்களிக்காம எதிர்த்து போட்டுட்டா ‘பணநாயகம்’ வென்றது.

நாங்க எல்லாரும் நீங்க என்ன சொன்னாலும் அப்படியே கேட்டுட்டு, உங்களுக்கு வாக்களிச்சு ‘திராவிட பாரம்பரியத்தை’ காக்கணும், இல்லைன்னா நாங்க விலை போயிட்டோம்னு சொல்லுவீங்க. இதை குறிப்பா நான் எழுதறதாலயே “ஆரியர்கள் நம்மை தாக்க நினைக்கிறார்கள், அதற்கு மயங்கி விடாமல் திராவிட பெரும்படை திரள வேண்டும்”-னு பக்கம் பக்கமாக உங்களுடைய லும்பன் கும்பலை வச்சு வசை பாட ஆரம்பிப்பீங்க.
ஏற்கனவே திமுக உள்ளுக்குள் உளுத்து போய், கேன்சர் வந்து வீழ்ந்து கொண்டு இருக்கிறது என்பது தான் என்னுடைய தொடர் வாதமே. அதன் முக்கியமான வைரஸ் உதயநிதி.

அரசியலில் முதல் அடி எடுத்து வைக்கும் முன்பே, இத்தனை அயோக்கியத்தனங்களும், ப்ராடுத்தனங்களும் செய்யும் ஒருவர் (ஒரு வேளை இன்றைய திமுக/அதிமுகவின் குறைந்தபட்ச தகுதியே அது தானோ?) நாளை தமிழ்நாட்டின் “நிழல் முதல்வராக” வலம் வந்தால் என்னவெல்லாம் சாத்தியம் என்பதை வாக்களிக்க போகும் தமிழக மக்களின் மனசாட்சியிடம் கேட்கிறேன்.
வாழ்த்துக்கள் வெற்றி வேட்பாளரே. நல்லா இருங்க, ரொம்ப நல்லா வருவீங்க தம்பி!

Foot Note 1: அதிமுகவிற்கான மாற்று இன்றைய திமுக அல்ல, அதிமுகவை விட சிஸ்தமேடிக்காக தமிழகத்தையும், தமிழர்களையும் தொடர்ச்சியான பதட்டத்திலும், கையேந்தலிலும் வைப்பது தான் நோக்கமே. ஆர்.எஸ்.எஸ் வெளியே இருந்து மதரீதியாக பயங்காட்டி நம்மை ஒடுக்கி வைக்கும். திமுக “அவர்களை உள்ளே விடக் கூடாது, அதனால் எங்களை ஆதரியுங்கள்” என்று சொல்லி ஒடுக்கும்.

Foot Note 2: இந்த இரண்டு கழகங்களும் தான் மக்களை லூசுக் கூந்தலாக்குகிறார்கள் என்றால், இவர்களுக்கு மாற்று என்று சொல்லி கொண்டு வந்திருக்கும் எளிய தமிழ் பிள்ளையான, இசுசு காரில் சுற்றி கொண்டிருக்கும் திரு. செந்தமிழன் சீமான், தன்னுடைய affidavitல் 2019 -20ல் தன்னுடைய ஆண்டு வருமானம் ரூ. 1,000 மட்டுமே என்று பதிந்து இருக்கிறார். ஆயிரம் ரூபாய் தான் ஆண்டு வருமானம் என்றால், அது இசுசு காரை வாட்டர் வாஷ் செய்ய கூட பத்தாது. மொத்த குடும்பத்தையும் காலையிலிருந்து இரவு வரை கட்சி தான் சோறு போட்டு காக்கிறது போல. ஆனால் இவ்வளவு எளிமையாக வாழ தேவையில்லை.

நரேன் ராஜகோபாலன், அரசியல் விமர்சகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.