ராஜசங்கீதன்
– இந்துக்களின் நலன் இல்லாத பாராளுமன்றம் தேவையில்லை என ‘இந்து இத்யாதி சேனா’ போன்றதொரு அமைப்பின் யாருக்குமே தெரியாத தலைவர் பேசி இருப்பார்.
– எங்கோ ஒரு விஷ்வ இந்து பரிஷத நபர் பாராளுமன்ற மினியேச்சரை வெடிக்கச் செய்யும் காணொளி சமூக தளங்களில் பரப்பப்படும்.
– அந்த காணொளியை கண்டிப்போரின் முகநூல் கணக்குகளை கம்யூனிட்டி ஸ்டாண்டர்டுக்கு எதிராக இருப்பதாக சொல்லி முடக்குவான் மார்க்.
– நைஜீரியா முதலிய நாடுகளின் மக்கள் இந்திய பாராளுமன்றம் இந்துக்களுக்கே என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வார்கள்.
– ராஜ்யசபா டிவியில் தோன்றி சப் டைட்டிலே இல்லாமல் மோடி பேசுவார். தலையில் சிவப்புத் துணி கட்டியிருப்பார். உதட்டோரத்தில் ரத்தம் பூசப்பட்டிருக்கும். ‘இத்தானை இத்தானால் இவான் முடிக்கு என்றாய்ண்டே அவானை அவான் கண் விடால்’ என முடிப்பார்.
– சாமியார்கள் தலைமையில் பாராளுமன்றத்துக்கு முன்னால் கூட்டம் திரட்டப்படும்.
– பாராளுமன்றத்தை கைப்பற்ற ஸி ஜிங்பிங் எப்படி முயலுகிறார் என்றும் அதற்கு இந்திய இடதுசாரிகள் எப்படி உதவுகின்றனர் என்றும் இந்திய பாராளுமன்றம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் ஊடகங்கள் விவாதங்கள் நடத்தும்.
– பாராளுமன்றத்துக்கு முன்னால் சாமியார்கள் பூஜை நடத்த மோடி தலைமையில் யாகம் நடத்தப்படும். பிறகு சித்பவன பார்ப்பனர்களின் வாழ்த்துகளோடு சாமியார்களின் தலைமையிலான கூட்டம் பாராளுமன்றத்துக்குள் புகும்.
– பின்னாடியே ராணுவமும் காவலர்களும் கோஷம் போட்டுக் கொண்டு பின் தொடர்வார்கள்.
– இறுதியில் பாராளுமன்றம் கைப்பற்றப்பட்டு தேசியக் கொடி அகற்றப்பட்டு காவிக் கொடி ஏற்றப்படும்.
– இந்திய ஜனநாயக சக்திகள் நீதிமன்றத்துக்கு சென்று பாராளுமன்ற கைப்பற்றலுக்கு எதிராக வழக்கு போடும்.
– வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் மாட்டு மூத்திரம் கொண்டு பாராளுமன்றம் சுத்தமாக்கப்பட்டு பார்ப்பனர்களையும் சாமியார்களையும் மட்டும் கொண்ட உயர்மட்டக் குழு பதவியேறும். நாட்டின் மொத்தமும் ஜனபதங்களாக பிரிக்கப்பட்டு மாநிலங்கள் இல்லையென அறிவிக்கப்படும்.
– ‘பாராளுமன்றத்தை ஜனநாயக சக்திகள் வைத்துக் கொள்ளட்டும், நாட்டை சாமியார்கள் வைத்துக் கொள்ளட்டும்’ என நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்.
கேபிடல் சம்பவம் உங்களுக்கு பாபர் மசூதியை ஞாபகப்படுத்தியிருக்கலாம். இங்குள்ளவர்களுக்கு ஹிட்லர் ஞாபகத்தில் இருக்கிறான். ஹிட்லருக்கு உதவிய IBM போன்ற நிறுவனங்கள் ஞாபகத்தில் இருக்கின்றன.
அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரச்சினை இல்லாதவரை அமெரிக்க கேப்பிடல், இந்திய பாராளுமன்றம் மட்டுமென இல்லாமல், மொத்த மனித குலமே தகர்ந்தாலும் அவை வேடிக்கை மட்டுமே பார்க்கும். அவற்றுக்கு ஆதாயமெனில், தகர்ப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கூட செய்து கொடுக்கும்.
அமெரிக்காவின் உழைக்கும் வர்க்கம் சித்தாந்த தெளிவுடன் கேபிடலுக்குள் புகுந்திருந்தால் அமெரிக்க போலீஸ் இத்தனை கருணையுடன் வெளியே கொண்டு வந்து விட்டிருக்காது. இந்திய பாராளுமன்றத்தை உழைக்கும் வர்க்கம் கைப்பற்றும்போது சாமியார்கள் கைப்பற்றுவதை காட்டிலும் வலிமையான எதிர்ப்பை இந்திய அரசு காட்டும்.
அரசை இயக்கும் முதலாளிகளுக்கு தெரியும் உண்மையான புரட்சிகர சக்தி, சித்தாந்த பலம் பொருந்திய உழைக்கும் மக்கள்தான் என்று!
ராஜசங்கீதன், ஊடகவியலாளர்.