வேளாண்சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடுவது ஏன்? இதோ 6 காரணங்கள்!

விவசாயச் சட்டங்களில் இருக்கும் மோசடியையும், விவசாயிகளின் போராட்டங்களில் இருக்கும் நியாயங்களையும் கீழ்கண்ட ஆறு காரணங்கள் சுருக்கமாகவும், அழுத்தமாகவும் சொல்கின்றன.

1. இந்தச் சட்டங்களை உருவாக்கும்போது எந்த விதமான ஆலோசனைகளையும் விவசாயிகளோடு நடத்தவில்லை. சட்டங்களை நிறைவேற்றும் போது பாராளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடத்தப்படவில்லை.

2. மாநில அரசின் அதிகார வரம்புக்குள் இருக்கும் பல விதிகள் மத்திய அரசால் குறுக்கு வழியில், கூட்டாட்சி முறைக்கு எதிராக இந்த விவசாயச் சட்டங்களில் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.

3. உறுதிப்படுத்தப்பட்ட வருமானம் என்னும் ஒரு இணக்கமான பாதுகாப்பு முறை விவசாயிகளுக்கு இல்லாத போது, விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கினால் விவசாயிகள் பெருமுதலாளிகளின் வலையில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதுதான் இன்றைய உலகளாவிய அனுபவமாக இருக்கிறது. விவசாயிகள் பேரம் பேசுகிற நிலைமையை இழந்து போவார்கள்.

4.தற்போதைய மண்டிகள் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை தக்க வைத்து வருகின்றனர். இதற்கு மாற்றாக கார்ப்பரேட்களுக்கான சந்தையும் திறந்து விடப்படுகிறது. அந்தச் சந்தைக்கான கட்டணமோ, வரியோ விதிக்கப்படவில்லை. இதனால் மெல்ல் மெல்ல தற்போதைய மண்டிகள் நலிவடைந்து காணாமல் போகும். முழுக்க முழுக்க சந்தை கார்ப்பரேட்களின் வசமாகும்.

5. தற்போதைய மண்டிகள் வசூலிக்கும் கட்டணத்தொகையானது, கிராமப்புற உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கும், சாலைகளை இணைப்பதற்கும், தானியங்களை சேமித்து வைக்கும் கிடங்குகளை பராமரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மண்டிகளே காணாமல் போகும்போது, அனைத்திற்கும் கார்ப்பரேட்களிடம் போய் கையேந்தும் நிலைமை விவசாயிகளுக்கு ஏற்படும்.

6. பாதிக்கப்படும் விவசாயிகள் நீதித்துறை மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த விவசாயச் சட்டங்களில் எந்த விதிகளும் இல்லை. சிவில் கோர்ட்டுளைக் கூட தன் வரம்பில் தலையிட முடியாதவாறு தள்ளி வைக்கின்றன இந்த சட்டங்கள்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழில்: மாதவராஜ்



மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.