திருவள்ளுவருக்கு காவி உடையணிவித்து சமூக ஊடகங்களில் பாஜகவினர் பரப்பினர். இது கண்டனத்தை கிளப்பிய நிலையில், ‘திருவள்ளுவர் நாத்திகரா?’ என்கிற சர்ச்சை கிளம்பியது.
பாஜகவின் எச். ராஜா, நாராயணன் போன்றோர் அவரை ஆத்திகர் எனக் கொண்டாடிய நிலையில், தமிழக அமைச்சர் மஃபா பாண்டியராஜன், ‘திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பேயில்லை என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் சில காலம் இருந்த பாண்டியராஜன், அதிமுகவில் பாஜகவின் பி டீமாக செயல்படுவதாக விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
’நாத்திகர்’ என தமிழ் மரபில் குறிப்பிடப்படுவதற்கு பொருள், பார்ப்பன எதிர்ப்பு மரபில் வந்தவர் என்பதே என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
”திருவள்ளுவரை நாத்திகர் என்று எவருமே கூறாதபோது இவருக்கு ஏன் ஆத்திரம்? வேத மறுப்பு என்பது வேத காலத்திலேயே தோன்றியதாகும். எடுத்துக்காட்டு: சாருவாகம். தசரதனுடைய அவையில் இருந்த ஜாபாலியைப் பற்றி வால்மீகி ராமாயணம் கூறுகிறது. வேத மறுப்பாளர்களையும் அவை சொரிந்து (விலங்குகளைப் பலியிட்டு) நடத்தப்பட்ட வேள்விகளை எதிர்ப்பவர்களைக் கொன்று குவிக்க இராமனைத் தன்னுடன் காட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று தசரதனிடம் விசுவாமித்திரன் கேட்டதாகவும் இராமாயணத்தில் உள்ளது. எதிர்த்தோருக்கு அசுர முத்திரை.
அப்படியாயின், அவிசொரிந்து ஆயிரம் வேட்டலை எதிர்த்த வள்ளுவர் வேதநெறிப்பட்டவரா? வேதநெறி எதிர்ப்பாளரா? அவர்கள் பார்வையில் வள்ளுவரும் அசுரரே! போகட்டும்! வள்ளுவர் கூறியதாகக் கூறப்படும் வாலறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், அறவாழி அந்தணன் (பிதாமணன் அல்லன்) என்னும் இலக்கணத்துக்குட்பட்ட இந்து மதக் கடவுள் ஒன்றையாவது (ஒருவரையாவது) சங்கிகளாலும் சங்கிகளின் அடிதாங்கிகளாலும் காட்டமுடியுமா?” என முத்துசெல்வம் என்பவர் முகநூலில் பாண்டியராஜனின் கருத்துக்கு பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மனநல மருத்துவர் ஷாலினி தனது முகநூலில்
“திருவள்ளுவர் நாத்திகராக இருக்க முடியாதாம்… ஹலோ நாத்தீகம்னா என்னனு தெரிஞ்சிகிட்டு பேசுங்க.
நாத்திகம் என்றால் வேத மறுப்பு, தட் மீன்ஸ், பிறப்பால் உயர்வு தாழ்வு, ஜாதி, privilege, entitlement, Supremacy மாதிரியான அம்சங்களை ஏற்காதவர் என்று அர்த்தம். நான்கு வர்ண அடுக்கு நிலையை நிராகரித்தவர் என்று அர்த்தம்.
எட்டாம் நூற்றாண்டின் classification படி ஆதிக்க மதங்கள்: சைவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம், வைணவம். இவை எல்லாமே சதுர் வர்ணமெனும் racist கோட்பாட்டை ஏற்றவை.
அதே கிளாஸிபிகேஷன் படி நாத்தீக மதங்கள்: லோகாயதா, ஆசீவகம், பௌத்தம், ஜெய்னம். இவை எல்லாவற்றுக்குமான பொது அம்சம்: வேதம் விட்ட கப்ஸாவை நம்பாமல் சொந்த அறிவை பயன்படுத்தியவர்கள். இதில் ஜயினர்கள் பிறவி, மறுப்பிறவி, மாதிரியான கருத்துக்களை வைத்திருந்ததால் அவர்கள் கொஞ்சம் வைதீகத்தோடு ஒத்துப்போனார்கள்.
ஆனால் ஆசீவர்கள் ஒரு போதும் ஒத்து போகவேயில்லை. ஆதி தமிழரது மதம் ஆசீவகம். திருவள்ளுவர் ஆசீவக மதத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும். ஆசீவகர்களை சமணர் என்று அழைப்பர். இவர்கள் தத்துவம், வானியல், மருத்துவம் ஆகியவற்றில் ஜித்தர்கள். ஜித்து=சித்து. திருநாவுக்கரசருக்கு சூளை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்தவர் ஆசீவக துறவியர். இந்த துறவியரை தான் பிறகு சைவர்கள் கழுவில் ஏற்றி கொன்றார்கள். இவர்கள் தீவிர வேத எதிர்ப்பாளர்கள், அதனால் நார்த்தீகர்கள்!!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் vs சதுர்வர்ணம் மயா சிருஷ்ட்டம்.
நீங்கள் எந்த பக்கம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.