இரா. எட்வின்
பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் திரு. அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதிக்கு போட்டியிடுகிறார்.
தனது வேட்புமனு தாக்கலின்போது அவர் கணக்கில் காட்டியுள்ள சொத்து விவரங்களை இன்றைய தீக்கதிரில் பார்க்க முடிந்தது.
அவர் காட்டியுள்ள கணக்கின்படி அவரது சொத்து மதிப்பு 30,49,00,000 ரூபாய். வாசிக்க சிரமமாய் இருக்கும் என்பதால் எழுத்திலும் தருகிறேன். அவரது சொத்தின் மதிப்பு முப்பது கோடியே நாற்பத்தியொன்பது லட்சம் ரூபாய். இதில் நமக்கொன்றும் பிரச்சினையில்லை.
இவ்வளவுதானா என்ற கேள்விக்குள்ளும் நானிப்போது போகவில்லை. இவ்வளவாகவே இருக்கட்டும். அதில் 17,56,00,000 ரூபாயை ஏறத்தாழ 280 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளார்.
அதாவது காட்டப்பட்ட கணக்கின் 58 சதவிகித சொத்தை 280 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளார். அதுகூட போகட்டும்.
இவற்றில் சல்லி காசைக்கூட பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்யவில்லை என்பதும் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களிலுமே முதலீடு செய்திருக்கிறார் என்பதும் மட்டுமே நாம் கவனத்தில் கொள்ளும் விஷயங்கள்.
1) இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களை நிராகரித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலீடு செய்வதுதான் தேசபக்தியைப் பற்றி சதா போதித்துக்கொண்டே இருக்கும் தேசத்தை ஆளும் கட்சியின் தேசியத் தலைவரது தேசபக்தியா?
2) இவரே கார்ப்பரேட் கம்பெனிகளில் முதலீடு செய்யும்போது அவர்களது தவறுகளை அரசு எப்படி தட்டிக் கேட்கும்?
3) அம்பானி நிறுவனங்களில் மட்டும் 2.15 கோடி அதாவது தனது காட்டப்பட்ட சொத்து மதிப்பில்7.05 சதமும் முதலீடு செய்துள்ள தொகையில் 12.24 சதமும் முதலீடு செய்திருப்பது ரபேலில் இவர்களது சார்பைக் காட்டாதா?
இரா. எட்வின், எழுத்தாளர்.