பாரதப் பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்!

கை. அறிவழகன்

அறிவழகன் கைவல்யம்

1) ஐயா, புல்வாமாவில் நம்ம 44 CRPF வீரர்கள் பிற்பகல் 3.10 மணிக்கு செத்துப்போனப்ப, நீங்க ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்கலாம், 3.40 மணிக்கு உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் ஒரு சலனமும் இல்லாம தொடர்ந்து ஷூட்டிங்ல கண்ணும் கருத்துமா இருந்தீங்கன்னு ஒரு பாழாப் போன இந்திய தேச விரோதி உங்க மேலே அபாண்டமான பழி சொல்றாங்கய்யா? மாலை 5 மணி வரைக்கும் ஷூட்டிங்ல இருந்துட்டு அப்புறமா வீட்டுக்குப் போறப்பக் கூட தேர்தல் பிரச்சாரம் பண்ணிக்கிட்டே போனீங்கன்னு கட்டைல போறவன் சொல்றப்ப வயிறு பத்திகிட்டு எரியுதுங்கய்யா? எடுத்துப் போடுங்கய்யா ஆதாரங்கள, அந்தப் பாழாய் போன தேச விரோதிகள்கிட்ட சொல்லணும், என் பிரதமரு சொக்கத்த தங்கம்டான்னு.

2) ஐயா, பால்கோட் தீவிரவாதிகள் முகாம் மீது நம்ம படைகள் தாக்குதல் நடத்தி அழிச்சிருச்சுன்னு சொன்னீங்க, இந்திய ஊடகங்களில் கூட ஒரு தீவிரவாதி செத்த படமோ, முகாம்கள் அழிஞ்சு போன தடயமோ இல்ல. பல உலக ஊடகங்கள் நீங்க பொட்டல் காட்டுலயும், மரத்துலயும் குண்டு போட்டுட்டு வழக்கமான 56 இன்ச் வீர வசனங்களை பேச ஆரம்பிச்சுட்டீங்கன்னு சொல்லும்போது ரொம்பக் கேவலமா இருக்குங்க ஐயா, கொஞ்சம் ஆதாரங்களை வெளிய எடுத்து விட்டு என்னைய அவமானத்துல இருந்து காப்பாத்துங்க ஐயா…..(நம்ம தேச பக்த ஊடகங்கள், இல்ல போர் முழக்க சங்கி நண்பர்கள் கிட்ட இருந்து ஆதாரங்களை வாங்கலாம்னு பாத்தா, தேசியத் தொலைக்காட்சிலேயே (குடியரசு தொலைக்காட்சி – Republic TV) 2017 ஆவது வருஷ வீடியோக்களை வச்சுக் குப்பை கொற்றாங்கே ஐயா).

3) இன்னொரு நாதாரிப் பய வாய்கூசாம, நாக்குல பல்லப் போட்டு, புல்வாமா தாக்குதலுக்கு அடுத்த நாள் கூட எந்த அரசு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யாம “வந்தே பாரத்” ரயிலு விடுற விழாவுல உங்க பிரதமரு கலந்துக்கிட்டாரு, அப்பறம் ஜான்சில போயி வோட்டுக் கேட்டுட்டு சாவகாசமா வீட்டுக்குப் போயி கோட்டு சூட்டெல்லாம் மாத்திக்கிட்டு இறந்த வீரர்களின் குடும்பங்கள் எல்லாம் பிணங்களைப் பார்க்க காத்துக் கிடக்கிறார்கள் என்று தொடர்ந்து தகவல் சொன்னபின்பு அங்கே சென்று முதலைக் கண்ணீர் வடித்தீர்கள்னு தேச விரோதிகள் சொல்றதக் கேக்குறப்ப வயிறெல்லாம் எரியுதுங்கய்யா. உங்க மேலே இப்பிடி அபாண்டமான பழி போடறாங்கே ஐயா.

4) ஐயா, விங் கமாண்டர் அபிநந்தன், காணாமல் போனதையோ, நம்ம வானூர்தி பாகிஸ்தான் ராணுவத்தால் சுடப்பட்டதைக் குறித்தோ நீங்களோ, பாதுகாப்புச் செயலரோ, வெளியுறவுத் துறை செயலரோ வாயே தெறக்கலயாம், பாகிஸ்தான் சொல்லலைன்னா நீங்க கமுக்கமா கதையை மாத்தி இருப்பீங்கன்னு வேறே சொல்றான், போனது எத்தனை வீரர்கள், திரும்பி வந்தது எத்தனை பேர்? ஒன்னியும் தெரியாம மீடியாவை வச்சு ஒரு போலி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி அதுக்கு மார்க்கெட்டிங் பண்றீங்கன்னு சொல்ற கட்டைல போற பயலுகளுக்கு தூக்கிப் போடுங்கய்யா ஆதாரத்தை….

5) பொதுவான தேசிய மரபுகளின் படி, எல்லைகளில் போரோ, பதட்டமோ நிகழும் சூழல்களில் அனைத்துக் கட்சியினரையும் அழைத்து நாடாளுமன்றத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கான முயற்சியில் ஈடுபடும் மரபை எல்லாம் தாண்டி, வீரர்களுக்கான அஞ்சலிக் கூட்டத்தில் கூட காங்கிரஸ், ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி ன்னு தேர்தல் பிரச்சாரம் பண்ற ஒரு ஈத்தரைப் பிரதமர் நீங்கன்னு அந்த தேசவிரோத நாய் சொன்னப்ப மனசு ஒடஞ்சு போச்சுங்கய்யா…..அஞ்சலிக் கூட்டத்துல போயி அரசியல் பேசுற அளவுக்கு மோசமான ஆளா ஐயா நீங்க?

6) யய்யா, பாகிஸ்தான் பிரதமர் நடிச்சாரோ, இல்லை, நெசமா பேசுனாரோ தெரியாது, ஆனாலும், போரை நாங்கள் வெறுக்கிறோம்னு ஒரு மரியாதைக்குரிய பேச்சுப் பேசி இந்தியர்கள் மனசுலயே இடம் பிடிச்சிருக்காரே, அது மாதிரி ஒங்க 56 இஞ்சி பிரதமர் ஒரு நாளாவது அமைதியைக் குறித்துப் பேசி இருக்காரா? எப்பப் பாத்தாலும், அடிச்சுத் தூக்கிருவேன், குத்திருவேன், கிழிச்சுருவேன்னு ஒரு ரவுடி மாதிரி மதக் கலவரங்களுக்கு அடிப் போடுறாரே ஏன்னு கேக்குறாங்கய்யா அந்த அயோக்கிய பய…..

7) ஐயா, இவ்வளவு அக்கப்போரும் அந்த நாசமாப் போன காஷ்மீரால தானே அதுக்கு திறந்த மனசோட பேச்சு வார்த்தை நடத்தி மூலச் சிக்கலைத் தீர்த்து வைக்கிற பெரிய மனசோ, ஒரு துளி நல்லெண்ணமோ இந்த 5 வருஷத்துல எப்பவாச்சும் உங்க பிரதமருக்கு இருந்துச்சாடான்னு அந்தப் பய கேக்குறப்ப உண்மையிலேயே ரொம்ப அவமானமாப் போச்சுங்கய்யா…..

8) ஐயா, ஜெனீவா ஒப்பந்தம் சொல்கிற போர்க்கால விதிகள் பத்தியெல்லாம் இப்போ அபி நந்தன் பாகிஸ்தானில் பிடிபட்ட பிறகு பேசுற உங்க பிரதமரு, நேத்து வரைக்கும் அபி நந்தன்னு ஒரு ஆளே இந்தியாவில் இல்லைங்கிற மாதிரி கமுக்கமா இருந்தாரே, இந்திய ராணுவம் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து வீடியோ வருகிறவரை அபி நந்தன் குறித்தோ சுட்டு வீழ்த்தப்பட்ட மிக் வானூர்தியைக் குறித்தோ தொடர்ந்து பொய் சொல்லி வந்ததே ஏன்னு கேக்குறான்யா?

9) ஐயா, பல மாநிலங்களில் பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ் பெரியய்யா மார்களும் கூடிச் சேர்ந்து ஒவ்வொரு செத்த போர் வீரன் மீதும் ஆணையிட்டு எங்களுக்கு வோட்டுப் போடுங்கன்னு கேவலமா கேக்குறாங்களே அதைத் தட்டிக் கேட்க உங்க 56 இஞ்சி பிரதமருக்கு திராணி இல்லையான்னு கேக்குறான்யா, எடியூரப்பா ஒரு படி மேலே போய் “வான் வழித் தாக்குதலால் எங்களுக்கு 22 சீட் கிடைக்கும்னு சொல்றாரே”, இதெல்லாம் பொணத்து மேலே அரசியல் பண்ற பொறம்போக்குத்தனம் இல்லையான்னு அவன் கேக்கும் போது நாக்கப் புடுங்கிட்டு சாகலாம்னு தோணிச்சுங்கய்யா, ஆனா, அப்புறமா யோசிச்சுப் பாத்தப்ப நீங்கதானே அப்படிச் செய்யணும் முடிவ மாத்திகிட்டேங்கய்யா…..

10) ஐயா, சிக்கலான நேரத்தில், போர்ப் பதட்டம் நிரம்பிய எல்லையின் அந்தப் பக்கம் இருந்து ஒரு தேசத்தின் பிரதமர் உங்களோடு பேச முயற்சி செய்கிற போது நீங்கள் எந்த முதிர்ச்சியும் இல்லாத ஒரு கூமுட்டை போல வாயை மூடிக் கொண்டு தேர்தல் பரப்புரைகளில் “இந்துக்களே ஒன்று கூடுங்கள்” என்று மதக் கலவரத்துக்கு நெருப்பு மூட்டினீர்கள் என்றும், பாகிஸ்தான் இப்போது உங்கள் கடைசி துருப்புச் சீட்டு என்றும், மக்களை பல்வேறு சிக்கல்களில் இருந்து திசை திருப்ப நீங்கள் தேசபக்தி ஆயுதத்தை எடுத்திருக்கிறீர்கள் என்றும் அவன் சொல்லி முடித்த போது, இங்கே சில பேர் பிரதமர்னா, அவருடா….என்று இம்ரான்கானைப் பார்த்து பெருமிதம் அடையுறாங்கய்யா…..ரொம்பக் கேவலமா இருக்குங்கய்யா……

பண மதிப்பீட்டிழப்பால் வேலை இழந்து,
தொழில்கள் நசிந்த ஒரு நகரத்தில் இருந்து
அப்பாவி இந்தியன்

கை. அறிவழகன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.