வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும் – 3

ப. ஜெயசீலன்

இறுதியாக. வசுமித்ரா கண்களில் அறிவுமிளிர அந்த பேட்டியில் அம்பேத்கர் மார்க்ஸையும் புத்தரையும் ஒப்பிட்டதே மிக பெரிய தவறென்று சொன்னதோடு புத்தர் ஒழுக்கவியலை முன்வைத்த ஒரு அறவாதி என்றும் மார்க்ஸ் ஒரு பொருளாதாரவாதி என்றும் ஒரு உன்னதமான உண்மையை நமக்கு அருளியதோடு அம்பேத்கர் புத்தரையும் நபிகளையும்தான் ஒப்பிட முடியுமே தவிர புத்தரை மார்க்ஸோடு ஒப்பிட முடியாது என்றார். இங்கு ஒரு கற்பனை கதை/ நிஜ உதாரணம் சொல்ல விழைகிறேன்.

இளையராஜா சில வருடங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில் நாய்கள் குரைக்கும் ஒலியில் கூட தனக்கு ஒரு குறிப்பிட்ட ராகத்தின் அமைப்பு தெரிவதாக சொன்னார். உடனே தலைவன் வசுமித்ர 900 பக்கங்களுக்கு ஒரு புத்தகம் எழுதி நாய் 4 கால்கள் கொண்டது. நாய்கள் மூத்திரம் பெய்கையில் ஒருபக்கமாக கால்களை தூக்கி கழிக்கும் சுவாபம் உள்ளவை. நாய்கள் புணரும்பொழுது ஒன்றின் மேல் ஒன்று பின்பக்கமாக ஏறி புணரும் முறையை கையாள்பவை. ஆனால் ராகங்கள் பயிற்றுவிக்கப்பட்ட குரல்களின் வழி எழுப்பப்படும் ஒரு கட்டமைப்புக்குள் அமைந்த ஒலி. ராகங்கள் பாடுவதற்கு சாதகம் செய்து சுக்கு மிளகு பொடி கஷாயம் குடித்து தயாராக வேண்டும். ஒரு ராகம் இன்னொரு ராகத்தோடு பின்னால் ஏறி புணராது. எனவே ராஜா ராகத்தையும் நாய்குரைச்சலையும் ஒப்பிட்டதே தவறு. வேண்டுமானால் நாயையும் பூனையும் ஒப்பிடலாம். ஏனென்றல் பூனையும் நாயை போலத்தான் புணரும் என்று கண்களில் அறிவு மிளிர பேசினால் நீங்கள் அவரிடம் என்ன சொல்வீர்கள்? அல்லது அவரை பற்றி என்ன நினைப்பீர்கள்?

இளையராஜா தனது பதின்பருவத்தில் தொடங்கிய இசைத்தேடலின் பொருட்டு தனது இசைவாழ்வின் தொடக்ககால 20 வருடங்களை இசையை பயில்வதற்கு மட்டுமே எந்த கவனசிதறலுக்கும் ஆளாகாமல் செலவிட்டதின் மூலமும் அர்பணிப்பின் மூலமும் தன்னிகரில்லாத இசை கலைஞனாக தன்னை நிறுவினார். பொதுவாக கலைஞர்களுக்கு சில வருடங்கள் மட்டுமே நீடிக்க கூடிய artistic intensityயை இளையராஜா 20 வருடங்கள் வரை நீடித்து வைத்திருந்தார். அந்த கவித்துவ/கலா மனோநிலையின் வெளிப்பாடாகத்தான் நாய்குரைப்பதில் கூட அவரால் ஒரு ராகத்தின் கட்டமைப்பை காண முடிகிறது. சிறிதளவாவது மூளை உள்ளவன் எவனும் இதை இப்படித்தான் புறிந்துகொள்வான். சரி, மார்க்சிய மேதை வசுமித்ர கதைக்கு வருவோம். வசுமித்ராவுக்கு புத்தரை பற்றியும் மார்க்ஸை பற்றியும் தெரிந்த அதி உன்னதமான உண்மை நிச்சயம் அம்பேத்கருக்கும் தெரிந்திருக்கும். பின்பு ஏன் அவர் இருவரையும் ஒப்பிடுகிறார்?

அம்பேத்கர் அடிப்படையில் சமூக பொருளாதாரவியல் கல்வி பின்புலத்தை கொண்டவர். அவரின் இரண்டு phd ஆய்வுகளுமே பொருளாதாரத்தோடு தொடர்புடையவை. பொருளாதாரத்தோடு அவருக்கு சமூகவியல், வரலாற்றியல், தத்துவயியல், அரசியல் சார்ந்த தேடலும், ஆளுமையும், கல்வியுமிருந்தது. அம்பேத்கரின் எழுத்துக்களை, ஆளுமையை என்னை போல கொஞ்சமாய் அறிந்தவர்கள் கூட சொல்லமுடியும் மார்க்ஸை அம்பேத்கர் நிச்சயம் புறம்தள்ளியிருக்க மாட்டார். உலக பாட்டாளிவர்க்கத்தின் விடுதலையை பேசும், வழிகளை ஆராயும் ஒரு கருத்தியலை அம்பேத்கர் ஊன்றி படித்திருக்கமாட்டார் என்று சொல்வதை விட நம்புவதை விட ஒரு முட்டாள்தனம் எதுவும் கிடையாது.

இங்கிருக்கும் மார்க்சியர்கள் மார்க்ஸை படிப்பதற்கும் அம்பேத்கர் மார்க்ஸை படித்ததற்கும் வித்தியாசமிருந்திருக்கும். அம்பேத்கரே தன்னளவில் ஒரு கோட்பாட்டளர் என்னும் நிலையில் and being a academic scholar and researcher அவர் மார்க்ஸ் சொல்வதை கேட்பவனாக இல்லாமல் மார்க்ஸோடு உரையாடுபவராக இருந்திருப்பார். நீங்க சொல்றது எனக்கு புரியுது…ஆனா இல்ல ஜி எங்க ஊர்ல இருக்கிற சில்லறை சாதி ஹிந்து பசங்களை உங்களுக்கு தெரியாது..உங்களையே 10% பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு நீங்க சொன்ன “வர்க்கம்” கான்செப்ட் தான் காரணம் என்று convince செய்து விடுவார்கள்..அவனுங்கள வேற மாதிரி deal பண்ணுனும் என்று விவாதித்திருப்பார். In summary Ambedkar would have admired marx reading/speaking through his writing but not as a listener but someone with equal caliber and capacity.

அம்பேத்கருக்கு இருந்த ஆழமான பொருளாதார அறிவும், கல்வி பின்புலமும், மார்க்ஸிய கோட்பாட்டின் மீதிருந்த விசாலமான ஆழமான புரிதலுமே அவருக்கு புத்தத்தில் மார்சியத்தையும் மார்க்சியத்தில் புத்தத்தையும் ஆராயும் ஆற்றலையும், மேதைமையையும் அளிக்கிறது. அம்பேத்கரை போல மலைக்க வைக்கும் கல்வி பின்புலத்தில் இருந்து வருபவரால் மார்க்சிய வர்க்க கோட்பாட்டை 903 பக்கங்கள் வியாக்கியானம் செய்து எழுதுபவர்களின் குசுவோடு கூட ஒப்பிட்டு ஆராயமுடியும். புத்தரா கார்ல் மார்க்ஸா என்ற புத்தகத்தின் தொடக்கத்திலேயே

“A comparison between Karl Marx and Buddha may be regarded as a joke. There need be no surprise in this. Marx and Buddha are divided by 2381 years. Buddha was born in 563 BC and Karl Marx in 1818 AD Karl Marx is supposed to be the architect of a new ideology-polity a new Economic system. The Buddha on the other hand is believed to be no more than the founder of a religion, which has no relation to politics or economics.”என்றுதான் தொடங்குகிறார்.

இதைத்தான் நான் போன கட்டுரையிலேயே சொன்னேன் நம் ஊரின் சாதி ஹிந்து மங்கூஸ் மண்டயன்களை அம்பேத்கர் ஆய்ந்தறிந்திருந்தார் என்று. அவர் தொடக்கத்திலேயே சொல்லி தொடங்கியதைத்தான் மார்க்ஸ்ய மேதை வசுமித்ரா தனது பேட்டியில் நமக்கு அறிய உண்மையாக நாயையும் ராகத்தையும் ஒப்பிடுவது தவறு என்கிறார்.

அந்த பேட்டியில் அவர் எல்லா கோமாளித்தனங்களையும் வெளிப்படுத்தி பேசிவிட்டு 903 பக்கங்களை படித்துவிட்டு விவாதிக்க வாங்க என்கிறார். ஒக்கமக்க ஒருவன் வெறும் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் என்று கூட 9000 பக்கங்களுக்கு புத்தகம் எழுதலாம். அவனிடம் யோ நீ என்ன சங்கியா ஏன்யா இப்படி ஸ்ரீராம ஜெயத்தை போய் 9000 பக்கங்கள் வீணடித்து எழுதியிருக்க என்று கேட்டால் அவன் திரும்ப கேட்டானாம் 9000 பக்கத்தையும் படிச்சுட்டியா என்று. அம்பேத்கர் ஏன் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து கைதாகவில்லை என்று கோமாளித்தனமான குபீர் என்று சிரிப்புவர கூடிய கேள்வியை கேட்கும் ஒருவரால் 903 பக்கத்துக்கு அம்பேத்கரை ஆராய்ந்து புத்தகம் போட முடிகிறது அதற்க்கு கம்யூனிஸ்டுகள் வந்து புத்தகம் வெளியிடுகிறார்கள் எண்ணும்பொழுது யேசுகிறிஸ்து கூட உயிர்த்தெழுந்து வர வாய்ப்பிருக்கிறது ஆனால் கீரிக்கும் பாம்புக்கும் சண்டையிடுவதாய் வசுமித்ர சூழ் இந்திய மார்க்சிஸ்டுக்கள் சொல்லும் வர்க்கம் போராட்டம் வர வாய்ப்பில்லை. இதை படிப்பவர்களை நான் கேட்டுக்கொள்வது வசுமித்ராவின் பேட்டியை பாருங்கள். அதை பார்த்த பிறகும் அந்த புத்தகத்தை வாங்க தோன்றினால் பிறகு வாங்குங்கள். பின்னாளில் பூரி போடும்போது மாவு தேய்த்து போட்டுவைக்க உதவக்கூடும்.

இன்னொன்றையும் சொல்லவேண்டும். பேட்டி எடுத்த மண்டையன் ஒரு கேள்வி கேட்கிறான் என்னவென்றால் ” தலித்துகள் இந்த புத்தகத்தை எப்படி பார்க்க வேண்டும்” என்று. அதாவது புத்தகத்தை எழுதிவிட்டு அந்த புத்தகத்தை குறிப்பாக தலித்துகள் எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என்று எழுதியவரிடமே கேட்டு அதையும் தலித்துகளுக்கு சொல்லிகொடுக்க துணியும் மார்க்சிய போர்வையில் புழங்கும் இந்த அற்ப பதர்களின் கொழுப்புக்கு என்ன காரணம்? இவர்களை எப்படி நாம் தோழர் என்று சொல்ல முடியும்?

இறுதியாக அம்பேத்கர் ஒரு மிக நுட்பான கோட்பாட்டு தலைவர். அவரது அரசியலும், செய்திகளும், கருத்துக்களும் அசாத்தியமான சாதுர்யமும் நுட்பமும் தளங்களும் கொண்டவை. உதாரணத்திற்கு சாதியை அழித்தொழித்தல் நூலில் நீ அகண்ட பாரதம் வேண்டும் என்றால் உனது ஹிந்து மதம் செழிக்க வேண்டும் என்றால் அதற்கும் சாதி ஒழிந்தால் தான் உண்டு என்று RSSக்கும் பாடம் எடுக்கிறார், வர்க்க போராட்டத்தை நீ நிகழ்த்த விரும்பினால் அதற்கும் சாதி அழிந்தால்தான் தோழர் வாய்ப்பு என்று கம்யூனிஸ்டுகளுக்கும் பாடம் எடுக்கிறார்.

இப்படியான சிக்கலான அம்பேத்கரை சில்லறை பசங்களால் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது. அம்பேத்கர் நிச்சயம் விவாதிக்க படவேண்டும் விமர்சிக்கப்பட வேண்டும். அம்பேத்கரியம் இன்னும் கூர்தீட்டப்படவேண்டும் செழுமைப்படுத்தப்படவேண்டும். ஆனால் அதை செய்ய விழைபவர்கள் அம்பேத்கரை வெறும் தகவலாக, வெறும் செய்தியாக, வெறும் புத்தகங்களாக அறிந்தவர்களாக இருக்கக்கூடாது/முடியாது. அம்பேத்கரை அறிந்துகொள்ள மானுட மாண்பின் மீதும் மானுட சமத்துவத்தின் மீது சமரமில்லாத மூர்க்கமான பற்றுள்ளவராக இருக்கவேண்டும். அம்பேத்கர் அப்படிப்பட்டவர்களுடன் உரையாட இன்னமும் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்.

கற்பி, ஒன்று சேர், கலகம் செய்.

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.