சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு

சந்திரமோகன்

சந்திர மோகன்

அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பாக,  சேலத்தில் “சாதியும் சமூக மாற்றமும் ” எனும் தலைப்பில் இலங்கை யாழ்ப்பாண பேராசிரியர். ந.ரவீந்திரன் உரை நிகழ்த்தினார்.

சிங்களர்- தமிழர் இன முரண்பாடு, இலங்கையில் சிறுபான்மை தமிழர் மகாசபை, வர்க்கம் எதிர் சாதி, வருணங்கள், பிராமண மதம், தமிழர் நிலப்பரப்பில் தோன்றிய திணை அரசுகள், மார்க்சியம், ரஷ்யப் புரட்சியில் “ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுங்கள்” என்ற அணுகுமுறை எனப் பல்வேறு விசயங்கள் பற்றி விரிவாக பேசினார்.

“சிங்களர்கள் கண்டி நாயக்கர்கள் என்று சொல்லப்படுவதால், தெலுங்கர்கள்/ வடுகர்கள் என சீமான் சொல்கிறாரே, சரியா?” என்ற ஒரு கேள்விக்கு, அது பொய், த.நா.ல் உள்ள அவர்களது அரசியலுக்காக இப்படி பேசுகிறார்கள் ” என்றதுடன், நாம் அறியாத பல்வேறு செய்திகளை தெரிவித்தார்.

பேராசிரியர். ந. ரவீந்திரன்

சிங்களர்கள் யார்?

1) இலங்கையில் உள்ள சிங்கள சமூகத்தின் 54% மக்கள் கோவிகாமார் என்கிற வெள்ளாள சாதியினர் ஆவார். இவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவின் வங்காளம், ஒடிசா, ஆந்திரா மற்றும் தமிழ் நாடு, கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து குடியேறிய கலவையான மக்கள் கூட்டமாகும். பண்டார நாயகா எல்லாம் தமிழர் பின்னணி மிக்கவர்கள்.

2) சிங்களவர்களில் 30% மக்களாக இருக்கிற கரவா (அதாவது கரையார் எனப்படும் மீனவர்கள்) 500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து குடியேறிய தமிழ் மீனவர்கள் ஆவர். (ஜன விமுக்தி பெரமணா என்ற இடதுசாரி அமைப்பு மூலமாக 70 களில் ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய இந்த சமூகத்தை சார்ந்த 2 இலட்சம் இளைஞர்கள் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.)

3) இதுவல்லாமல் 300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிலிருந்து குடியேறிய கரையார், சாலியர் ஆகியோரும் சிங்கள சமூகத்தில் உள்ளனர்.

4) மூன்று தலைமுறைக்கு முன்னால் தமிழராக இருந்து சிங்களவராக மாறியவரும் உள்ளனர்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்வி மற்றும் இலங்கையில் உள்ள சாதியப் பிரச்சினை பற்றிய கேள்விக்கு விரிவான விளக்கம் அளித்தார். கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் பின்வருமாறு :-

ஈழத் தேசியம் வெள்ளாளர் தேசியமே!

உலகத்தில் உள்ள உன்னதமான 5 தேசிய இனங்களில், சிங்களர் ஒன்றாகும். அம் மக்களிடம் உயர்ந்த பட்ச சனநாயக உணர்வு உண்டு. உலகில் உள்ள கேடுகெட்ட 2 தேசிய இனங்களில் இஸ்ரேல் யூதர்களும், யாழ்ப்பாண தமிழர்களும் வருவர். சகோதரர்களை கொன்று குவித்த வரலாறு அது!

2) யாழ்ப்பாணத்தில் 60 களில் தலித்துகள் போராடிய போது, தமிழ் தேசியம் பேசியவர்கள் அப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை. கம்யூனிஸ்டுகள் ஆதரித்தார்கள். சிங்கள புத்த பிக்குகள்கூட ஆதரித்தார்கள். என்ன தமிழ் தேசியம்? வெள்ளாள தமிழ் தேசீயம்!

3) தமிழீழப் போராட்டத்தில் (கரையார் சமூகம் சார்ந்த பிரபாகரன் தலைமை தாங்கியிருந்த போதும் கூட) வெள்ளாளர் சாதி ஆதிக்க மனோபாவம் தான் தோல்விக்கு காரணமாகும். அனைவரையும் அரவணைத்து செல்லும் மனப்பான்மை இல்லை. சகோதர யுத்தம் நடத்தி பல்வேறு அமைப்புகளை, ஆயிரக்கணக்கானவர்களை ஒழித்துக் கட்டினார், பிரபாகரன். தமிழ் முஸ்லிம்களை வெளியேற்றினார்; மலையகத் தமிழர்களையும் கூட வெளியேற்ற பார்த்தார். கிழக்கு மாகாண கருணாவை எதிரியாக பாவித்தார். LTTE க்குள் ஊடுவலும் இருந்தது.

பிரபாகரன் தான் மட்டுமே தமிழீழம் என்று நினைத்தார். 2009 யுத்தத்தின் இறுதி நாட்களில் அமெரிக்கா காப்பாற்றி விடும் என நினைத்தார்.

4) தமிழீழம் என்பதற்கு இலங்கையில் வாய்ப்பே இல்லை.

பேராசிரியர் ரவீந்திரன் கூறும் செய்திகள் தமிழினவாதிகளுக்கும், இங்கு தனித் தமிழ்நாடு என அரசியல் செய்பவர்களுக்கும் கசப்பான உண்மைகளே !

ஈழப் போராட்டம் பற்றிய மீள் பார்வை முதலில் வரவேண்டும். பிறகு, தனித் தமிழ்நாடு வேண்டுமா, இல்லையா என்ற அரசியல் பற்றி பேசலாம்.

சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.

3 thoughts on “சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு

 1. இவனெல்லாம் ஒரு பேராசிரியராம்.. புலியிடம் அடிவாங்கிய துரோகியாகத்தான் இருப்பான். இந்தப் பட்டத்தையும் சிங்களவனுக்குக் காக்கா பிடித்துத்தான் வாங்கியிருப்பான்.

  Like

  1. பிரபாகரனைப்போல் ஒரு முட்டாளும் கோழையும் ஈழப்போராட்டத்தில் வேறு யாரும் இருக்கவில்லை. எந்த சித்தாந்தங்களுமில்லாமல் கொலைகளில் மட்டுமே நம்பிக்கை வைத்த முழு முட்டாள் அவன். ரஜீவ் காந்தியின் கொலையின் விளைவுகளை எதிர்வுகூற தெரியாத அளவுக்கு அடிமுட்டாள். தான் அழிந்ததுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த போராட்டத்தையும் குறைந்தது 25 வருடங்களுக்கு பின்போடவைத்த துரோகியாகவே அவனை பார்க்கமுடியும். 100,000ற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்களின் அழிவிற்கும் காரணமாகி தானும் அழிந்த முட்டாள் எப்படி ஒரு இனவிடுதலைப்போராட்டத்தின் தலைவனாக முடியும்? தான் என்ற அகங்காரத்தால் தானும் அழிந்து இனத்தையும் அழித்த படு முட்டாள், இனத்தின் உண்மையான துரோகி பிரபாகரன் தான்.

   Like

 2. இவா் கூறியது உண்மை
  இலங்கையில் சாதி தீண்டாமை தமிழகத்தை விட உச்சத்தில் இருக்கிறது

  புலிகளின் மாவீரர் துயில் இல்லம் வடக்கில் அமைக்கப்படட்தைப் போல கிழக்கில் அமைக்கப்படாதது ஏன்?

  சாதி தான் காரணமா?

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.