வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 1

ப. ஜெயசீலன்

நரேன் ராஜகோபாலன்(கருப்பு குதிரை என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்) என்று ஒரு முக நூல் பதிவர் சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது வெறித்தனமான முரட்டுத்தனமான பிஜேபி எதிர்ப்பாளராக, திமுக ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். he is really a character. ஒரு நாள் திடீரென்று நான் ஏன்தான் இவ்வளவு விஷயம் தெரிந்த அறிவாளியாக இருக்கிறேன் என்று எனக்கு சலிப்பாயிருக்கிறது. இப்பொழுது பாருங்கள் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன்.

அதன் மூலம் இந்தியா ஒரு மிக பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு தயாராகி கொண்டிருக்கிறது. oh my god மாதவா எப்படிடா உனக்கு மட்டும் இவ்ளோவ் அறிவு என்னமோ போடா என்னும் தொனியில் ஒரு பதிவிட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அள்ளி அலசி எடுக்கபோவுது என்னும் தொனியில் பேசிக்கொண்டிருந்தவர் தேர்தல் முடிவுக்கு முதல் நாள் ஓத்தா திமுகடா என்று பதிவிட்டு வெறிகொண்டு வெற்றிநடனமாட தயாராகிருந்தார். அடுத்த நான் அதிமுக ஆட்சியை பிடிக்க தலைவர் முகநூலை விட்டெ சிலமாதங்கள் தலைமறைவானார். அது பரவாயில்லை. இயல்பு. ஆனால் திரும்ப வந்தவர் தான் யுகோஸ்லோவியா தேர்தலையே சரியாக கணித்ததாகவும், தனது நண்பர்கள் எல்லோரும் அதற்க்கு சாட்சியென்றும் இந்த முறை சின்ன தவறு நடந்துவிட்டதாகவும் கூறி கூலானார்.

இப்படிப்பட்ட அதிமேதாவி நரேன் திடிரென்று அம்பேத்கர் ஆய்வாளராகி, நரேன் அளவுக்கு ஆழ்ந்த வாசிப்பும் கல்வியும் பெறாத சின்ன புள்ள அம்பேத்கர் செய்த பிழைகளை பட்டியலிட்டார். அதில் அம்பேத்கரின் மீது வைத்த முக்கியமான விமர்சனம்/குற்றசாட்டு அம்பேத்கர் rss அமைப்பால் உள்வாங்கப்படுகிறார். அதற்கான வாய்ப்பை அம்பேத்கரே தனது அரசியல் நிலைப்பாடுகளின் மூலம் வழங்கியிருக்கிறார். மாறாக rss அமைப்பால் பெரியாரை அவர்களுடைய தலைவராக ஒருபோதும் உரிமைகோர முடியாது. hence it is proven அம்பேத்கரை விட பெரியார்தான் கெத்து என்று 10ஆம் வகுப்பு கணக்கில theorem prove செய்யும் சிறுவர்களை போல எழுதியிருந்தார். இவரை போன்ற சில்லறை பசங்கள் வாழ்நாள் எல்லாம் செலவழித்தாலும் அம்பேத்கரின் ஆளுமையின் மீதோ, கருத்தியல் மீதோ சின்ன கீறலை கூட ஏற்படுத்திவிட முடியாது என்னும் நிலையில் சில்லறை பசங்க எதோ உளறுகிறார்கள் என்று ஒதுங்கி செல்வதே சிறந்தது. ஆனாலும் மரங்களை ஓய்வெடுக்க குசுக்கள் விடுவதில்லை.

பாரிசாலன் என்னும் ஒரு மழலை மொழி மாறாத சிறுவன் பெரியாரின் அடிப்படையான வாழ்வியல் முறையையோ, அவரது வாழ்வியல் கோட்பாட்டையோ புரிந்துகொள்ளாமல் பெரியார் நிர்வாண அமைப்பை தனது வெளிநாட்டு பயணத்தில் சென்று சந்தித்தார். அப்பனா அவரு இலுமினாட்டி தான என்று பேசி திரிந்துகொண்டிருக்கிறார். அவரது இன்னொரு பிரதியாகத்தான் நரேன் போன்ற கோமாளிகளையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த கோமாளிகளுக்கு அம்பேத்கரின் அடிப்படையான வாழ்வியல்/அரசியல்/தத்துவ கோட்பாட்டை புரிந்துகொள்வதில் எந்த ஆர்வமோ விருப்பமோயில்லை. அவர்களுக்கு அம்பேத்கரை புரிந்துகொள்வதற்கான விருப்பமிருக்கிறதா என்பதே சந்தேகம்தான். சமீபத்தில் வசு மித்ர என்பவர் “அம்பேத்கரும் புத்தமும்” என்னும் புத்தகத்தை 903 பக்கங்களை வீணடித்து எழுதியுள்ளார். அந்த புத்தகத்தை நான் படிக்கவில்லை. ஆனால் அந்த புத்தகம் குறித்து அவர் அளித்த பேட்டியை பார்த்தேன். ஓக்க மக்க யாருடா இது நரேனுக்கே சவால்விடுகிற மாதிரி என்று அந்த பேட்டியில் தோன்றவைத்தார். அந்த புத்தகத்தை நான் படிக்காத நிலையில் அந்த பேட்டியில் வெளிப்பட்ட அவரது தொனியையும், உளவியலையும் முன்வைத்து…

முதலில் நரேனின் அம்பேத்கர் குறித்தான பார்வையை சற்று விளக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் வசு மித்ராவின் பேட்டியிலும் அதே விமர்சனத்தை கவனிக்க முடிந்தது. அம்பேதகர் முன்வைத்த கோட்பாடுகளும், அரசியல் கருத்தாக்கங்களும், கொள்கை நிலைகளும்/முன்னெடுப்புகளும் அவரது ஆழ்ந்த, பரந்துபட்ட சமூக பொருளாதார அரசியல் மற்றும் வரலாறு சார்ந்த அறிவையையும், புரிதலையும் பின்னணியாக கொண்டவை. அம்பேத்கரின் எந்த நூலை வாசித்தாலும் அவர் அவரது கருத்துக்களை எவ்வளவு கவனமாகவும், வலுவாகவும், ஆதாரபூர்வமாகவும் வலுவான தரவுகளோடு நிறுவ முயல்கிறார் என்று எளிதாக உணர முடியும்.

தன்னுடைய கருத்துக்களை சாதி வெறி பன்றிகள் உலவும் இந்திய சமூகம் தனது தலித் அடையாளத்தின் பொருட்டு எளிதாக புறம்தள்ளிவிடும் என்று அவருக்கிருந்த உளவியல் அச்சத்தை அவருடைய எழுத்துக்களை வாசிக்கும் எவரும் எளிதாக உணரமுடியும். எனவே அவர் தனது கருத்துக்களை, கோட்பாடுகளை, சித்தாந்தங்களை மிக வலுவான ஆதாரங்களின், ஆய்வுகளின், தர்க்கங்களின் துணையுயுடனும், அவரது நூலை வாசிப்பவரின் மனதில் எழும் கேள்விகளுக்கும், தன்னை புறம்தள்ளிவிடக்கூடிய சில்லறை பசங்களின் உளவியலையும் உள்வாங்கி அவர்கள் என்ன மாதிரியான குதர்க்கமான கேள்விகளை எழுப்புவார்கள் என்று கணித்து அந்த கேள்விகளுக்கும் அவரே தனது நூல்களில் கேள்விகளையும் எழுப்பி பதிலையும் சொல்லியிருப்பதை அவரது எந்த நூலை வாசித்தாலும் வெளிப்படையாக காண முடியும். இவையெல்லாவற்றையும் தாண்டி ஒரு மிக சிறந்த கல்வியாளரான/ஆய்வாளரான அவர் தனது எழுத்துக்களில் தன்னை வாசிப்பவர்கள் திறந்த உள்ளத்தோடு தான் சொல்லும் கருத்துக்களை உள்வாங்குங்கள் என்று கிட்டத்தட்ட ஒரு கோரிக்கையை போல கேட்பதையும் உணரமுடியும்.

அம்பேத்கர் தனது புரட்சிகரமான அரசியலையும், கருத்துக்களையும் எளிதாக புறம்தள்ளிவிடமுடியாத வகையில், அவரது கேள்விகளை எளிதாக கடந்துசெல்லமுடியாத வகையில், இந்திய சூழலில் இந்திய சமூகத்தின் மீது அவர் ஏற்படுத்திய ஜநாயகபூர்வமான நவீன மறுமலர்ச்சியை எவரும் மறுத்துவிடமுடியாத அளவில் நிறுவியவர். RSS மட்டுமல்ல இந்து கடவுள்களான ராமனும், விஷ்ணுவும் கூட அம்பேத்கரை கடந்து சென்று விட முடியாது. இந்து கடவுள்களே அம்பேத்கரின் முன்பு மண்டியிடத்தான் வேண்டும் எண்ணும்பொழுது RSS எம்மாத்திரம். அவர்களால் வீழ்த்திவிட முடியாத ஒரு அசாத்தியமான கோட்பாட்டு தளத்தில் தன்னை நிறுவிக்கொண்டவர்தான் அம்பேத்கர். சில்லறை பயலான சுப்ரமணியசாமியே நேரு பண்டிட் இல்லை. அம்பேத்கர்தான் உண்மையான பண்டிட். அறிவார்ந்தவர்களே பார்ப்பனர்கள் என்னும்வகையில் அம்பேத்கர் ஒரு பார்ப்பனர் என்று அம்பேத்கரை உரிமைகோரி பேசிய youtube காணொளி உள்ளது.

RSS அம்பேத்கரை உரிமைகொண்டாடுவதை எதோ அம்பேத்கரின் தோல்வியாக பேசும் மயிராண்டிகளை கேட்கிறேன் நிஜத்தில் RSS மட்டுமல்ல இந்திய சூழலில் எந்த மயிராண்டியுமே அம்பேத்கரின் ideological influence இல்லாமலோ அல்லது அம்பேத்கரின் கலகக்குரலை புறம்தள்ளியோ முன்னகர்ந்து விட முடியுமா? RSS can challenge Periyar only because they can. but they wont dare to do it with Ambedkar. not because they don’t want to but simply because they cant. பெரியார் intellectual, academic, scholar, researcher, diplomat, போன்ற வகைமைக்குள் வராதவர்.

பெரியார் thinker, philosopher, social reformer, revolutionary, radical என்ற வகைமைக்குள்தான் வருவார். அம்பேத்கர் தன்னை கேள்விகளுக்கு அப்பாற்பட்ட intellectual, academic, scholar, researcher, diplomat, thinker, philosopher, revolutionary, social reformer ஆக தன்னை நிறுவியவர். பெரியாரின் அரசியல் என்பது unfortunately ஒரு வகையில் divisive politics. தமிழக சூழலில் பெரும்பான்மையாக உள்ள திராவிடர்கள் vs பார்ப்பனர்கள். in nut shell Periyar marched the majority against a ruling class minority. அம்பேத்கர் marched the minority dalits against the majority caste Hindus bounded or slaved by brahmins/brahminical ideology.

அம்பேத்கர் ஒரே நேரத்தில் பார்பனீயத்தையும், பார்ப்பனிய அடிமைகளான சாதி ஹிந்துக்களையும் ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதி,பழங்குடியினர், பெண்கள் மற்றும் எல்லா ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக நின்று எதிர்த்தார்.பெரியார் பார்ப்பனியத்தின் ஆயுதமாக பார்ப்பனிய ஹிந்து மதத்தை/கடவுளை பார்த்தார். அம்பேத்கர் பார்ப்பனியத்தின் ஆயுதமாக சாதிய அமைப்பை/வர்ணதர்மத்தை பார்த்தார். இந்த இருவருக்குமான இதுபோன்ற நுண்ணிய வேறுபாடுகள் RSS போன்ற அடிப்படைவாத அமைப்புக்கு பெரியாரை புறம்தள்ளி, அவதூறு பேசி முன்னகர வாய்ப்பை அளிக்கிறது. ஆனால் அம்பேத்கரை அவர்களால் உதாசீனப்படுத்திவிட முடியாது. வீழ்த்தமுடியாதவர்களை தங்களில் ஒருவனாக உரிமைகோரும், உரிமைகொண்டாடும், உருமாற்றும் பார்ப்பனிய யுக்தியின் மற்றுமொரு உதாரணமே வீழ்த்தவே முடியாத தளத்தில் தன்னை நிறுவிக்கொண்டுள்ள அம்பேத்கரை RSS உரிமைகொண்டாடுவது.

நான் ஹிந்துவாக சாகமாட்டேன் என்று சொல்லி அதை செய்துவிட்டும் போன அம்பேத்கரை, ஹிந்துமதத்தை தலைகீழாக கயிற்றில் கட்டிவைத்து வாழ்நாளெல்லாம் தனது எழுத்துக்களாலும், விமர்சனங்களாலும், அரசியல் சாசனத்தாலும் செருப்பால் அடித்த அம்பேத்கரை RSS உரிமைகொண்டாடுவதை சுட்டிக்காட்டி அதை அம்பேத்கரின் போதாமையாக நிறுவ முயலும் மயிராண்டிகளிடம் எனக்கு வடிவேலுவின் சூனாபான வரியை மேற்கோள் காட்ட தோன்றுகிறது

RSS மட்டுமல்ல எந்த மயிராண்டியாக இருந்தாலும் முடிந்தால் அம்பேத்கருக்கு எதிராக “பயப்படாத..பயப்படாதடா..சொல்லு நீதான் தைரியமான ஆளேச்சே”.

தொடரும்

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.

3 thoughts on “வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 1

  1. அம்பேத்கார் ஒட்டுமொத்த தலித் மக்களின் தலைவராக இருப்பதால் அவரின் முற்போக்கு சிந்தனைகளை மறைத்து, தலித் ஓட்டிற்காக மழுமட்டைகளாக சங்கப்பரிவார் அம்பேத்கரை புகழ்கிறது. பெரியாரைப் புகழ்வதில் எந்தப்பலனும், ஓட்டும் சங்கப்பரிவாருக்கு இல்லை. மேலும் பெரியார் வீதியில் வைத்து பார்ப்பானை அசிங்கப்படுத்தி, அச்சுறுத்தியவர். தனது சிலைகளுக்குக் கீழ் ‘கடவுள் மறுப்பு’ வாசகம் எழுதிப்போட்டவர்; அது பார்ப்பானை பக்கத்தில் கூட செல்லவிடவில்லை. இதற்குப் பெயர், பெரியார் அவர்கள் புறந்தள்ளுகிறார்கள் என்று பொருள் இல்லை, பெரியாரை அவர்களின் பிழைப்பில் மண்ணள்ளிப்போட்டவர், எனவே வெறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள். அம்பேதகர் இப்படி பார்ப்பனர்களை இப்படி அச்சுறுத்தவில்லை.

    Like

  2. இதெல்லாம் ஒரு மறுப்பா அதுவும் புத்தகத்தை படிக்காமலேயே?RSS அம்பேத்கரை உள்வாங்குவது அவரின் அறிவைக்கொண்டல்ல,வீழ்த்தமுடியாததால் அல்ல கண்மூடித்தனமாக அவரைக் கடவுளாகக் கருதும் கூமுட்டைகளை மூலை சலவை செய்யவே சூனா பானா போய் யோசிச்சிட்டு வா

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.