தலித் பெண் குழந்தைகளை பள்ளியில் அனுமதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஐயன்காளி போராட்டத்தை தொடங்கினார்: பி.எஸ். கிருஷ்ணன்

பீட்டர் துரைராஜ்

‘A Crusade for Social Justice ‘ என்ற நூலின் கதாப்பாத்திரமான பி.எஸ்.கிருஷ்ணன் 21.1.2019 அன்று இலயோலா கல்லூரியில் பேசினார். ஓய்வுப் பெற்ற ஆட்சிப் பணி அதிகாரியான இவர் மத்திய அரசு உருவாக்கிய பல சமூக நீதிச் சட்டங்களுக்கு அச்சாணியாக விளங்கியவர். ‘A Roadmap for Social Justice’ என்ற தலைப்பில் நில உரிமை, Dalit Manifesto, நகல் மசோதா, தலித்துக்களுக்கு தனி கல்வி நிலையங்கள் என பல செய்திகள் குறித்து சமூக செயற்பாட்டாளர்களிடையே பேசினார். பத்திரிகையாளர் த.நீதிராஜன் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

“1905-ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில்தான் விவசாயத் தொழிலாளிகள் ஓர் ஆண்டு காலம் வேலைநிறுத்தம் செய்தனர். கூலி உயர்வுக்காக இந்தப் போராட்டம் நடக்கவில்லை. மாறாக தலித் பெண் குழந்தைகளை பள்ளியில் அனுமதிக்க வேண்டும் என்பதற்கான போராட்டம் இது. ஐயங்காளிதான் இதனை முன்னின்று நடத்தியவர்.இவரது பெயர் ஐயன். இவரது அப்பா பெயர் காளி. நாராயண குருதான் அவரது அப்பா பெயரையும் சேர்த்து ஐயங்காளி என்று கம்பீரமாக அழைக்கச் செய்தவர்.

தலித்துக்களுக்கான அதிகாரம் இட ஒதுக்கீட்டில் மட்டும் இல்லை. நில உரிமை,உயர் கல்வி விகிதம், சிசு மரண விகிதம், குழந்தைகளின் எடை போன்ற பல குறியீடுகளை அடிப்படையில் அவர்களின் சமூக நிலையை கணக்கிட முடியும்.உதாரணமாக பஞ்சாப் மாநிலத்தில் பொருளாதாரம் நன்றாக உள்ளது. ஆனால் கேரளா மனித வளத்தில் சிறப்பாக உள்ளது. தமிழ்நாடு, கேரளாவில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகளே உள்ளனர்.

தாழ்த்தப்பட்ட,மலைவாழ் மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலங்களை மற்றவர்கள் வைத்து இருப்பதே சட்டவிரோதம் என்று கருதப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு உள்ள நிர்வாக, பொருளாதார வரம்பிற்குள்ளாகவே பல நல்ல முற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். உதாரணமாக கேரளாவில் குத்தகைக்காலம் முடிவடைந்த ஐந்து இலட்சம் ஏக்கர் தோட்ட நிலங்களை முதலாளிகளிடருந்து எடுத்து ,அங்குள்ள நிலமற்ற எல்லா ஏழை மக்களுக்கும் விநியோகம் செய்யலாம். இதற்கு மனவுறுதிதான் தேவை.

நிலம் அதிகம் இல்லாத கேரளாவிலேயே இதற்கு வாய்ப்பு உள்ளது என்றால், நிலம் அதிகம் உள்ள மற்ற மாநிலங்களிலும் இது சாத்தியமே. இப்படி கொடுப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் எல்லா மாநிலங்களிலும் இருப்பதாக அலெக்சாண்டர் குழு (தமிழக ஆளுநராக இருந்தவர்தான்) கூறுகிறது. இந்த நிலங்களை நீண்டகால குத்தகைக்கு கொடுங்கள். அதேபோல கோவில் நிலங்ளை சந்தை மதிப்புக்கு கொடுப்பதாகச் சொல்லி வசதிபடைத்தவர்களே அனுபவிப்பதற்குப் பதிலாக, ஏலம் விடுவதற்கு பதிலாக அந்தந்த பகுதிகளில் உள்ள நிலமற்றவர்களை இனங்கண்டு கொடுக்கலாம். ஆட்டோக்களை நகர்ப்புறங்களில் உள்ள தனிநபர்கள்தான் பதிவு செய்ய முடியும் என்ற விதியை கொண்டு வரலாம்.

ஐயன்காளி

பாசனத்திற்கு கொண்டுவரப்படாத ஏராளமான நிலங்கள் உள்ளன. அவைகளை தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தியும், நூறு நாள் வேலைத்திட்டம் மூலமும் பயன்பாட்டிற்கு கொண்டுவரவியலும். அப்படி கொடுக்கப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு இவ்வளவு என பணம் கொடுக்கலாம். வங்கிக் கடனை தள்ளுபடி செய்வதைவிட இது நல்லது (ஒரிசாவில் ஏக்கருக்கு 4000 ரூபாய் பாசனத்திற்கு முன்பு கொடுத்ததால், மறு தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைத்தது)

1996 ஆம் ஆண்டு (7.3.96)கொண்டுவரப்பட்ட தலீத் அறிக்கையை ( Dalit Manifesto ) தங்கள் திட்டமாக அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தலீத் அமைப்புகளிடமிருந்து அழுத்தம் வர வேண்டும். அரசியல் கட்சிகள் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ளன எனவே நாம் அரசியல் கட்சிகளை அவநம்பிக்க யாக பார்க்க வேண்டியதில்லை. இதற்காக நகல் மசோதா( Draft Bill ) தயாராக உள்ளது. 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு மனித கழிவுகளை மனிதன் அகற்றுவதை தடுக்கச் சட்டம் கொண்டு வந்தது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு,மலைவாழ் மக்களுக்கு தனியான கல்வி நிறுவனங்கள் அமைப்பது தவறல்ல. பெரும்பான்மை இடங்களை குறிப்பிட்ட வகுப்பினருக்கும், ஏனைய இடங்களை பொதுப் பிரிவினருக்கும் வழங்கலாம்.இது போன்று கறுப்பின மக்களுக்கான பல்கலைக்கழகம் ( Black University ) அமெரிக்காவில் உள்ளது. அது தவறாகப் பார்க்கப்படவில்லை.

தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு 10 சத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டம் 2005 ல் வந்தது. இது இன்னமும் கறாறாக அமலாகவில்லை; இது பல்கலைக்கழகங்களுக்கு விரிவாக்கப்படவில்லை. இது சாத்தியமானால் தனியார் நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு கிடைக்கும்”

இவ்வாறு பி.எஸ்.கிருஷ்ணன் பேசினார். குமார் அடிகளார் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.