”நீங்கள் போராளி அல்ல.. போலி!”

ஜெயச்சந்திரன் ஹாஸ்மி

கௌசல்யா சக்தி திருமணத்தை எந்தளவுக்கு மகிழ்ந்து கொண்டாடினேனோ அதேயளவு வெறுப்புடன் வருத்தத்துடன் இதை எழுதுகிறேன்.

திருமணம் நடந்த நாள் முதலாக சக்தியின் மீது தொடர்ந்து எழுந்துவந்த குற்றச்சாட்டுக்களுக்காக விசாரனை நடத்தப்பட்டு தீர்ப்புகளும் (!) கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் சாராம்சம் மட்டும் கீழே.

  1. அந்த பெண்ணுக்கு மோசமான அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு சக்தி பொறுப்பேற்க வேண்டும்.

  2. சக்தி கௌசல்யா இருவரும் பொது அரங்கில் மன்னிப்பு கேட்க வேண்டும். (இத அங்கயே கேட்டாச்சாம்)

  3. தன் திறமையை பார்த்து வியந்து வரும் பெண்களை பயன்படுத்திக்கொள்ளும் போக்கு சக்தியிடம் இருந்துள்ளது.

  4. சக்தி நிமிர்வு அமைப்பிலிருந்து வெளியேற வேண்டும். 6 மாதத்திற்கு பறையடிக்கக் கூடாது.

  5. கருவுற்று, ஏமாற்றப்பட்ட அந்த பெண்ணிற்கு சக்தி 6 மாதத்தில் 3 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கவேண்டும்.

  6. இதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் 3 மாதத்திற்கு பிறகு முறையீடு செய்யலாம். எங்கே? இவங்கட்டயே தான் !!

‘பையன் தப்பு பண்ணிட்டான். பெருசு பண்ணிராதீங்க. என்ன பண்ணனுமா பண்ணிக்கலாம்’ என்று பணக்கார பையன்களின் அப்பாக்கள் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தாரிடம் பேசும் காட்சிகளை 80 களின் படங்களில் பார்த்திருக்கலாம். அதன் வெர்ஷன் 2.0 ஆகத்தான் இதை பார்க்க முடிகிறது.

நெருக்கமாக வட்டங்களில் இருந்து கேள்விப்பட்ட தகவல்கள் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த பெண் கருவுற்றிருக்கும் செய்தியும் சக்தி குறித்த மற்ற புகார்களும் கௌசல்யாவிற்கு நன்றாக தெரிந்தே இருக்கின்றன (அவர் பதிவும் இதை உறுதிப்படுத்துகிறது). ஆனாலும் இப்படி ஒரு பெண்ணை நம்பவைத்து ஏமாற்றியது குறித்த எந்தவொரு சலனமும் அவர்கள் பக்கத்தில் இருந்து வரவில்லை. தொடர்ந்து கேட்டதற்கு அந்த பெண்ணின் சாதியை (ஆதிக்க) சொல்லியும் பேசியிருக்கிறார்கள்.

சாதி ஆதிக்க உணர்வு இல்லாத ஒருவரை, அந்த சாதியில் பிறந்ததற்காக (!) மட்டும் சாதி பெயரைச் சொல்லி அடையாளப்படுத்துவது, அதிலும் இப்படியொரு பொறுக்கித்தனத்திற்கு அந்த பெண் சாதியை சொல்லி நியாயப்படுத்துவதைப் போன்ற கேடுகெட்டத்தனம் எதுவுமில்லை.

சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பெரியார் என்று பேசும் மனிதர்களிடமிருந்தே இது அத்தனையும் நடந்திருக்கிறது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு விஷயம். அதிலும் சக்தி நடத்திவந்த அமைப்பின் கொள்கை முழக்கம் ‘பெண் விடுதலையே மண் விடுதலை’ யாம். வெங்காயம்.

பெண்ணடிமைத்தனம், சாதி எல்லாம் ஒன்றிற்கொன்று தொடர்புடையதுதான். ஒன்றை அழிக்காமல் இன்னொன்று முழு சாத்தியம் கிடையாது.

ஒரு பெண் வஞ்சிக்கப்பட்டிருப்பது தெரிந்தும், அதுகுறித்த எந்தவொரு சிறு சலனமும் இல்லாமல், அந்த பெண்ணின் சாதியை சொல்லி அதை நியாயப்படுத்திவிட்டு, அவள் கண்ணீருக்கு இடையே உங்கள் திருமணத்தை நடத்திவிட்டு, அதில் பெரியாரையும் உங்களால் முழங்க முடிகிறது என்றால் நீங்கள் போராளி அல்ல.. போலி !! Being a victim is not an excuse.

இதற்கு நேரடியாக பெரியாரையும் திராவிடக் கொள்கைகளையும் நோக்கி தான் சிலர் சேறு எரிவார்கள் எனத் தெரியும். அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றாலும், தற்கால சூழலில் பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் கொள்கைகளை பேசுவோர் தங்கள் செயல்பாடுகளில் மிகுந்த பொறுப்புடனும் கவனத்துடன் இருப்பது அவசியம். இத்தகைய போக்கு மொத்த கொள்கைக்கே எத்தனை அவப்பெயரை வாங்கித் தரும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சாட்சி. இதற்கு வரும் அத்தனை இழிமொழிகளையும் நாம் வாங்கித்தான் ஆகவேண்டும்.

இந்த திருமணத்தை கொண்டாடியதற்கு நான் வெட்கப்படவில்லை. கௌசல்யா மறுவாழ்வைத் தேடவேண்டுமென்றே விரும்பினேன். அதனாலேயே இதை கொண்டாடினேன். அதில் இத்தனை பொய்கள், ஏமாற்றுகள் இருப்பது கொண்டாடிய நம் குறையல்ல. நாம் கொண்டாடுவதற்கு அவர்கள் தகுதியற்றவர்கள் அவ்வளவே. மீண்டும் இதுபோன்ற ஒரு திருமணம் எங்காவது நடக்குமாயின், தயக்கமின்றி அதையும் கொண்டாடுவேன். Exceptions are not Examples !!

ஜெயச்சந்திரன் ஹாஸ்மி, திரைக்கலைஞர்; சமூக -அரசியல் விமர்சகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.