’பாசிச ஆட்சி’ என முழக்கமிட்ட மாணவி கைது; அப்பட்டமான மனித உரிமை மீறல்

’பா.ஜ.க.வின் பாசிச ஆட்சி ஒழிக’ என்று சொல்லும் ஒரு மாணவியிடம் தங்கள் ஆட்சி ஜனநாயக ஆட்சி என விளக்கம் சொல்லத் துப்பில்லாமல், போலீசிடம் புகார் கொடுத்து மாணவியைக் கைது செய்து சிறைப் படுத்தியுள்ள இந்த ஆட்சி, பாசிச ஆட்சியின்றி வேறு என்ன?.

இதைச் சொல்லக் கூட குடிமக்களுக்கு உரிமை இல்லையா? இதற்குப் பெயரா ஜனநாயகம்?  ஆயிரம் முறை சொல்வோம் இது பாசிச ஆட்சி என்று. ஜனநாயகத்தின் எந்தக் கூறுகளும் இங்கு இல்லை.

பாசிச ஆட்சி என்று கோஷம் போடுவது கலவரத்தைத் தூண்டுவது என இந்திய தண்டனைச் சட்டம் 505 ன் கீழ் வழக்குப் பதிவு செய்து மாணவியைச் சிறைப்படுத்த காவல்துறை கொண்டு செல்கிறது

நீதிபதி அதை ஏற்று எப்படி அந்த மாணவியைச் சிறைக்கு அனுப்பியுள்ளார்?

காவல்துறை போடும் வழக்கில் எல்லாம் இயந்திர கதியில் ரிமாண்ட் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் அந்தக் குறிப்பிட்ட நீதிபதி மீது உயர் நீதிமன்றம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அர்நேஷ் குமார் எதிர் பீகார் மாநிலம் என்ற வழக்கில் 2.6.2014 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் நீதிமன்றம் இவ்வாறு அந்த மாணவியைச் சிறைப்படுத்தியுள்ளது மிகுந்த அவநம்பிக்கை தரும் செயலாக உள்ளது..

இதே போல முழக்கமிட்டதாகக் கைது செய்யப்பட்ட பல வழக்குகளில், முழக்கம் போடுவது கருத்துரிமை என நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது

கேரளாவில் “தேர்தல் சமயம் வாக்குச் சாவடியின் முன் தேர்தல் பாதை திருடர் பாதை என்றும் ஆயுதப் போராட்டம் மூலம் ஆட்சியைப் பிடிப்போம்” என்றும் முழக்கமிட்ட வழக்கில் (அரவிந்தன் எதிர் கேரளா மாநிலம் 1983) அம் மாநில உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திர சேகர மேனன் இவ்வாறுசொன்னார்:

’ஆயுதப் போராட்டம் மூலம் ஆட்சியைப் பிடிப்போம் எனச் சொல்வது ஆட்சியைக் கவிழ்ப்பதாக பொருளல்ல, அது ஒரு வகை அரசியல் கல்வி. அதே போன்று ’காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டவர்களைக் கைது செய்து தேசத் துரோகம் என குற்றம் சாட்டியபோது..

உச்ச நீதிமன்றம் “பல்வந்த் சிங் மற்றும் சிலர் / எதிர் ./ பஞ்சாப் மாநில அரசு என்ற வழக்கில் 1.3.1995 நீதிபதி டாக்டர். ஆனந்த் மற்றும் பைசன் உத்தின் அமர்வு

இது போல சில முறை தனி நபர் கோஷம் போடுவதால் இந்திய இறையாண்மைக்கு எந்தப் பாதிப்புமில்லை எனக் கூறி தள்ளுபடி செய்தனர். (Raising of some lonesome slogan, a couple of times by two individuals , without anything more, did not constitute any threat to government of india as by law established not could the same give rise to feelings of enmity or hatred among different communities or religion or other groups.)

பொய் வழக்குப் போட்டுக் காவல்துறை ஆட்சியாளர் களைத் திருப்திப்படுத்த முயலும் சமயம், பொது மக்களின் கருத்துரிமையையும், தனி மனித சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நீதிமன்றத்தின் முன் உள்ளது.

அது இயந்திர கதியில் அரசாங்கம் செய்யும் கைதுகள் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையின் வெளிப்பாடு.

கருத்தைக் கருத்தால் சொல்லத் திராணியற்றவரான தமிழிசை செளந்தரராஜன் பாசிசத்தின் மறு வடிவமே
பா.ஜ.க.

இந்தக் கைது அப்பட்டமான மனித உரிமை மீறல். அந்த மாணவி சோஃபியா விடுவிக்கப்படவேண்டும்.. கருத்துரிமைக்கு வந்துள்ள ஆபத்தை அனைவரும் உணர வேண்டும்..

– ச.பாலமுருகன் .பி.யு.சி.எல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.