தமிழக பாஜக ஏற்பாடு செய்துள்ள வாஜ்பாயி புகழஞ்சலி கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கும் திமுக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளின் தலைவர்கள் இந்த புகழஞ்சலி கூட்டத்தில் பேசுகின்றனர்.
இந்த புகழஞ்சலி கூட்டத்தின் அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. பல்வேறு தரப்பினர் சொன்ன கருத்துக்களின் தொகுப்பு இங்கே!
அரசியல் விமர்சகர் வில்லவன்:
இந்தியாவின் பெரிய அச்சுறுத்தல் இந்துத்துவா.
அடுத்ததாக வரப்போவது இந்த அரசியல் நாகரீகம்தான் போல..
விசி மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் இயக்கங்களும் வாஜ்பாயை என்ன சொல்லி புகழப்போகின்றன?
செத்தவர்கள் எல்லோருமே புகழத்தக்கவர்கள் என்றால் அடுத்து இந்து மகாசபா போன்ற இயக்கங்கள் கோட்ஸேவுக்கு புகழஞ்சலி செலுத்த கூப்பிடும். போவீர்களா?
பாஜகவை மகிமைப்படுத்துவதான் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை மோடி டெமோ காட்டிவிட்டார். டெட்பாடிக்கு பாவ புண்ணியம் பார்க்க வேண்டாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்சுக்கு டெட்பாடிகள்தான் மூலதனம்
எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்
எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கு ஜனநாயகச் சாந்து அடிக்குறாங்க. பாசிசம் பத்தி இனிமே வகுப்பு எடுக்காம இருங்க..
பத்திரிகையாளர் கவின்மலர்
வாஜ்பாய் நல்ல கவிஞர். அமைதியே உருவானவர். அதனால்தான் குஜராத்தின் புகழ்பெற்ற கவிஞரான வலிகுஜராத்தியின் கல்லறையை மோடி இடித்தபோது வாஜ்பாய் அமைதியாய் இருந்தார். மெல்லிய மனம் படைத்த வாஜ்பாயால் மோடியின் இந்த செயலுக்கு எப்படி எதிர்ப்பு தெரிவிக்கமுடியும்? அதனால்தான் குஜராத் வன்முறைகளின்போதும் அமைதிகாத்தார். தன் ஆசீர்வாதம் கிடைக்கவில்லை என்றால் மோடி வருத்தப்படுவார் என்பதை உணர்ந்து குஜராத் வன்முறைகளை நிறைவாகச் செய்யும்படி ஆசீர்வதித்த உத்தமர் அவர். பாபர் மசூதியை இடிக்கப் புறப்பட்டு வந்த கரசேவகர்களின் மனம் கோணாமல் அவர்களுக்கு ஆதரவளித்த மஹான் வாஜ்பாயி. எவர் மனதையும் நோகடிக்காத மென்மையான கவிமனம் அவருக்கு…
- இப்படித்தான் உரையாற்றப் போகிறீர்களா தோழர்களே?
அரசியல் செயல்பாட்டாளர் நிவேதா:
அடுத்ததாக
சாத்வீக தீவிரவாதி வாஜ்பாய் ஜி அவர்களுக்கு தோழர் புகழஞ்சலி செலுத்துவார்…
அரசியல் விமர்சகர் திரு யோ:
“அரசியல் நாகரீகம்” கருதி அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்தால் தேர்தல் செலவு மிஞ்சும். அப்போ இனிமேல் சாவர்க்கர் நினைவு தினம், கோட்சே தியாகநாள், கோல்வால்கர் நினைவுநளெல்லாம் தோழர்கள் கொண்டுவார்களா என்கிறார் ஆர்வமிகுதி கொண்ட ஒருவர்.
அவருக்கு என்ன பதிலைத் தருவது தோழர்களே? (இந்த கேள்வி சிவப்பிற்கும், நீலத்திற்கும்)
எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா:
என்ன சொல்லிப் புகழப்போகிறீர்கள் தோழர்களே..?
நரகலை மிதித்துவிட்டதைப் போல அருவெறுப்பாய் இருக்கிறது. அரசியல் நாகரிகம், மண்ணாங்கட்டி என்று பிழைப்பு வாதிகளைப்போல பசப்பப்போகிறோமா..? அவநம்பிக்கையாய் உணர்கிறேன். இனம் புரியாத பதட்டமும் கடும் எரிச்சலும் கலந்த மனநிலையில் எதாவது மரியாதைக் குறைவாக எழுதிவிடுவேனோ என்ற அஞ்சுகிறேன்.
கம்யூனிஸ்டுகளுக்கென்று ஒரு பாரம்பரியமுண்டு.. பாசிஸ்ட்டுகளைப் புகழ்ந்து பேச கம்யூனிஸ்டுகளின் நா எழுமா..?
#கொடுமை..
ஊடகவியலாளர் கீற்று நந்தன்:
இவங்க எல்லாம் வருசா வருசம் பசும்பொன் முத்துராமலிங்கத்துக்கு திதி கொடுக்கிறதை நினைச்சிப் பார்த்தால், இதுக்கு ஷாக் ஆக மாட்டீங்க…
செயல்பாட்டாளர் முருகன் கண்ணா:
வாஜ்பாயை நாமும் கொஞ்சம் புகழுவோமா ?
சுதந்திர போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்ததாக பிரிட்டிஷ் அரசிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மிக சிறந்த போராளி.
சர்வதேச முதலாளிகள் மிக எளிதாக தங்களின் சரக்குகளை நகர்த்தி செல்ல தங்க நாற்கர சாலை திட்டத்தை செயல்படுத்திய ஒரு சிறந்த கார்ப்ரேட் எடுப்பு.
குஜராத் படுகொலை உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அரங்கேற்ற துணையாக இருந்த சிறந்த மனிதநேய பண்பாளர்.
ராமர் கட்டிய பாலத்தை கண்டு பிடித்து இடிக்கவிடாமல் தடுத்து தேச வளர்ச்சிக்கு உதவிடும் சேதுசமுத்திர திட்டத்தை நிறுத்திய மிக சிறந்த பொறியியல் வல்லுனர்.
ராணுவ வீரர்களுக்கு சவபெட்டி வாங்கும் போது எப்படி ஊழல் செய்யனும் என்று கற்றுக் கொடுத்த முன்மாதிரி அரசின் மிக சிறந்த பிரதமர்.
மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ்ன் ஒரு சிறந்த சங்கி
போதுமா இன்னும் புகழனுமா ?