சமூக ஊடகங்களில் சர்ச்சையான பிரதமர் மோடி-தமிழக ஊடகவியலாளர்கள் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் தமிழகத்தின் பிரபல செய்தி தொலைக்காட்சி நெறியாளர்கள், வார-நாளிதழ் அதிபர்கள், செய்தியாளர்கள் கலந்துகொண்டு பேசியதன் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி வருகின்றனர்.  தமிழக பாஜகவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பில் தி இந்து குழுமத்தைச் சேர்ந்த என். ராம், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், விகடன் குழும தலைவர் ஸ்ரீனிவாசன், குமுதம் குழும தலைவர் வரதராஜன், நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியின் குணசேகரன், புதிய தலைமுறையின் கார்த்திகை செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இது குறித்து ஊடகவியலாளர்கள் எவரும் விளக்கம் தரவில்லை.

நாச்சியாள் சுகந்தி:

இந்தியாவில் உள்ள அனைத்து பத்திரிகைகாரர்களையும் அழைக்காமல் தமிழக பத்திரிகையாளர்களை மட்டும் சந்தித்துள்ளார் மோடி.தென் இந்தியாவில் தமிழகத்தில் நுழைவதுதான் இன்றுவரை பிஜேபிக்கு இருக்கும் சவால். 2019-ல்பாரளுமன்ற தேர்தல்.

பி.கு. மூன்றையும் பொருத்தி பார்த்தி பதில் கண்டடைவது சாமர்த்தியம்

இளங்கோவன் கீதா முகநூலில்..

மிஸ் வோர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற அழகிகள் பிரதமரைச் சந்தித்தால் அவர்கள் சந்தித்த போட்டோவை பிரசுரிப்பதிலும் பொதுமக்கள் அதைப் பார்த்து மகிழ்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.

அந்த அழகுப் பெண்களுக்கு பிரதமரிடம் பேச பெரிதாய் விசயங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஒரிரு சிறு விசயங்கள் ஒருவேளை இருந்தாலும் அது குறித்து பொதுமக்கள் அறிய வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால் பத்திரிக்கையாளர்களின் பிரதமர் சந்திப்பு என்பது அந்த வகையிலானது அல்ல.

இவர்களை அழகுப் பதுமைகளாக பொதுமக்கள் புகைப்படங்களில் பார்த்து ரசிப்பதற்கான தேவை எதுவும் இல்லை.

மாறாக பிரதமரிடம் மக்கள் பிரச்சனை குறித்த ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்பதற்கு இருக்கின்றன.

மிகக் குறைந்த பட்சம் இந்திய ஜன நாயக வரலாற்றிலேயே ஒருமுறை கூட பத்திரிக்கையாளர்களை மதித்து பிரஸ்மீட் கொடுத்திராத பிரதமரிடம், “அது ஏன் அப்படி எங்களைக் கேவலமாக நடத்துகிறீர்கள்?” – என்ற கேள்வியை மட்டுமாவது கேட்டிருக்கலாம்.

அதற்கான பதிலை பிரதமரிடமிருந்து வாங்கி
மக்கள் அறியத் தெரியப்படுத்தியிருக்கலாம்.

செய்யவில்லை.

தனது சுயமரியாதை, உரிமை குறித்துக் கூட அலட்டிக் கொள்ளாத இந்தப் பத்திரிக்கையாளர்களுக்கு பொது மக்கள் உரிமை குறித்தோ, பிரச்சனை குறித்தோ புரிதல் என்ன இருக்கும்?

ஊடகங்கள் பிழைப்பது மக்கள் ஆதரவினால்தான். ஆனால் அவர்களைப் புறந்தள்ளி கார்ப்பரேட்டுகள் அரசியல்வாதிகளை ரகசியமாக சந்திப்பது போல் சந்திப்பார்களேயானால் – அதன்படி செயல்படுவார்களேயானால் அந்த மீடியாக்கள் அனைத்தும் மக்கள் ஆதரவை இழக்கப் போவது நிச்சயம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.