12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை?

கவிதா சொர்ணவல்லி:

குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டோம் என்றாலே, அக்குழந்தை தன்னளவில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தருணம் வரையில் அதற்கான உணவு, அனுசரணை & குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கண்டிப்பாக பெற்றோர்களாகிய நம்முடைய கடமை மட்டுமே.

என் வீட்டிலிருப்பது ஆண் குழந்தை. அவன். பள்ளிக்கு வேனில் செல்கிறான். வேனில் செல்கிறான் என்ற ஒரு காரணத்தினாலேயே, அவனுக்கு unneccesary touch-கள் பற்றி மூன்று வயதிலேயே சொல்லிக்கொடுத்திருக்கிறேன். அதையும் மீறி யாராவது தொட முயன்றால், கையில் அழுத்தமாக கடித்து வைக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறேன்.

யாராவது அவனிடம் தேவையில்லாமல் நடந்துகொள்கிறார்களா ? என்பதை தினமும், பிரண்ட்லியாகவாது கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். இதெல்லாம், அவனுக்கான பாதுகாப்பை அவனே உறுதி செய்யும்வரை, நான் / நாங்கள் அவனுக்கு செய்து கொடுக்க வேண்டிய ஆதாரமான கடமைகள் என்றே உறுதியாக நம்புகிறேன்.

ஆண் குழந்தைக்கே இத்தனை கரிசனம் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது என்றால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் , அதைப் பெற்றெடுத்த கண்றாவிக்காவது, கூடுதல் அக்கறையுடன் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு / கடமை & கட்டாயம். வேறு வழியே இல்லை.

சமூகம், செக்சுவல் பெர்வர்ட்நெஸ், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இதையெல்லாம் பேசுவது அவசியம் என்றாலும், அது இரண்டாம்பட்சமே.

இன்றைய இளம் பெற்றோர்கள் (பெண் & ஆண் இருவருமேதான்), குழந்தை வளர்ப்பை எப்படி பாரமாக கருதுகிறார்கள் என்பதையும், குழந்தை வளர்ப்பிலிருந்து எப்படி தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள் என்பதையும் பற்றி நாம் முதன்மையாக பேச வேண்டி இருக்கிறது. இப்படி ஒரு மனநிலை இருந்தால், குழந்தை பெற்று தெருவில் விடாதீர்கள் என்று கன்சர்னாக சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது.

& எத்தனை இசங்கள் பேசினாலும், பெண் குழந்தைகளை இங்கு சற்று அதிகப்படியான கவனத்துடன் (அட்லீஸ்ட் அவர்களுக்கான பாதுகாப்பை அவர்களே உறுதி செய்யும் வரை) பார்த்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளவாது செய்யுங்கள். அதைப் பேசுங்கள்.

(அயனாவரத்தில் 12 வயது குழந்தை 17(20?!) பேரால் ஏழு மாதமாக பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதை பற்றிய இன்றைய நிகழ்ச்சியில், தொலைபேசிய, அந்த குறிப்பிட்ட அபார்ட்மென்ட்டில் உள்ள ஒருவர், அந்த குழந்தையின் அம்மா எப்படி – இந்த சமூகத்தின் கேவலமான Exhibhition Culture-க்கு ஆளாகி இருந்தார், வேனில் இருந்து இறங்குகிற குழந்தையை அழைத்து செல்வதற்கு கூட யாரும் வர மாட்டார்கள் என்று கூறியதை, என்னால் நிராகரிக்க முடியவில்லை)

பிகு: இதில் எல்லாம் “குழந்தை வளர்ப்பது அம்மாவின் பொறுப்பு மட்டும்தானா ? அப்பாவின் பொறுப்பு இல்லையா” என்று வெட்டி நியாயம் பேசாதீர்கள். பெண் குழந்தையின் பீகேவியரல் சேஞ்ஜஸ்யை ஒரு அப்பாவை விட, அம்மாவால்தான் சட்டென்று புரிந்து கொள்ள முடியும். அவ்வளவுதான்.

தமிழ்நதி:

சென்னை புரசைவாக்கத்தில் தொடர்மாடிக் குடியிருப்பொன்றில் வசித்துவந்த காது கேளாத பன்னிரண்டு வயதுச் சிறுமியை, அத்தொடர்மாடிக் குடியிருப்பின் பணியாளர்கள் (lift operator, security guards, plumber இன்ன பிறர்) 22 பேர், 7 மாதங்களாக போதை ஊசி போட்டும், மாத்திரைகளைக் கொடுத்தும் பாலியல் சித்திரவதை செய்து வந்திருக்கிறார்கள்.

உயிர் போகாமல் ஆணுறுப்பைச் சிதைக்கும் தண்டனையை இத்தகையோருக்குக் கொடுக்கவேண்டும். அந்தச் சிறுமி இந்த உலகத்தையும் மனிதர்களையும் இனி எந்தக் கண்கொண்டு பார்ப்பாள்?

இத்தகைய செய்திகளைப் படித்தபிறகு பெண்குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் “ஐயோ! உனக்கு என்ன கொடுமை நேரக் காத்திருக்கிறதோ!” என்று மனமிடிந்து போகிறது.

‘பாலியல் வரட்சி’ அது இதென்று இந்த வக்கிரத்தையும் நியாயப்படுத்தக் கிளம்பியிருக்குமே போலி ஜனநாயகக் கூட்டமொன்று!

நாச்சியாள் சுகந்தி:

வீட்டை காவல் காக்கும் என்று நம்பிய அரக்கர்கள் தான் 12 வயது குழந்தையை வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளனர். இந்த 17 கொடிய மிருகங்களில் ஒருவருக்குக் கூட அடிப்படை மனிதபிமானம் அந்த குழந்தையை தொடும்போதும் கொடுமைப்படுத்தும்போதும் உருவாகவில்லை என்பதுதான் கொடுமையின் உச்சக்கட்டம்.
வாழ்க்கையை வாழ்ந்து முடித்த 70 வயது கிழவர்களுக்கு கூட மனசாட்சி உறுத்தவில்லை என்றால் இந்த கிழவன்களை சமூகம் என்னவாக வளர்த்திருக்கிறது… இவன்கள் இந்த உலகில் என்னவாக வாழ்ந்து இருக்கிறான்கள்?

பல மாதங்களாக பாலியல் கொடுமைக்கு உள்ளாகிய அந்தக் குழந்தை அதனை தன் பெற்றோரிடமோ பள்ளியில் டீச்சரிடமோ சொல்ல முடியாமல் தடுத்து நிறுத்தியது எது? அம்மா, அப்பா, டீச்சர் என்கிற பயம் தானே?

பெற்றோருக்கு இத்தனை நாட்களில் ஒருநாளில் கூடவா தன் மகளிடம் உடல்/மனரீதியாக மாற்றம் ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை?  பெற்றோர் பிள்ளைகளின் பாதுகாப்பில் கொடுக்கும் அக்கறை என்ன?

இந்த கொடூரத்தை செய்தவன்களை உடனடியாக தூக்கில் ஏற்றுவதுதான் தர்மம். இல்லாவிட்டால் இவனுகளுக்கும் ஹாசினி என்கிற பிச்சுக்குழந்தையை வல்லுறுவுக்கு உள்ளாக்கி கொலை செய்த தஷ்வந்துக்கு ஜாமின் வாங்க அலைந்த அப்பாவைப் போல் யாரவது வரலாம்.

சட்டம் உடனடியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான், அது பலருக்கு அச்சத்தைத் தரும். சமூகரீதியில் இவர்களை திருத்த முடியாது என்னும்போது சட்டப்படி உ்டனடி தண்டனைதான் தீர்வு.  மத்திய அரசு கொண்டு வந்த 12 வயது குழந்தைகளை பாலியல் துன்பத்துக்குள்ளாக்கினால் மரண தண்டனைஎன்பதை இந்த 17 மிருகங்களிடம் இருந்து செயல்படுத்த வேண்டும்.

அரசன் சுயநலமாக, சொத்து சேர்ர்ப்பதே முக்கிய கடமையக இருக்கும் நாட்டில் இப்படித்தான் நடக்கும்.

அபார்ட்மெண்டில் இருக்கும் உறவுகளே…அக்கம்பக்கம் இருக்கும் பெண் குழந்தைகளை அவ்வப்போது உற்றுப் பாருங்கள்: அந்த அயனவரத்தில் யாராவது ஒருவர் அந்த பெண் குழந்தையை உற்றுநோக்கியிருந்தால் இது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த மிருகங்கள் இப்படி நடகக் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த நம் சுய நலத்தின் மீது நாம் செருப்பால் அடித்துக்கொல்ல வேண்டும்.

பா. ஜீவ சுந்தரி:

54, 60, 66, 40, 50, 60, 58, 40, 55, 42, 36, 32, 32, 23, 23, 23, 26

12 வயது மாற்றுத் திறனாளிப் பெண் குழந்தையைக் கடந்த 7 மாதங்களாகத் தங்கள் பாலியல் வக்கிரத்துக்கு ஆளாக்கிய தடியன்களின் வயது மேலே உள்ள பட்டியல். மனம், உடல் இரண்டும் கூசவே இல்லை இந்தச் சனியன்களுக்கு.
#சென்னைஅயனாவரம்கொடூரம்

ஜா. தீபா:

அந்தக் குழந்தையின் அம்மா அப்பா ஏன் அந்தக் குழந்தையிடம் தினமும் உரையாடவில்லை அல்லது அவர்களின் உரையாடல்கள் குழந்தைக்கு போதுமானதாயில்லை என்பதை ஏன் உணரவில்லை?

தாங்கிக் கொள்ள முடியவில்லை…

Radhika Sudhakar:

ok. now criminalize the entire “tribe” of security guards, lift operators, odd job men, right? who created this “tribe” in the first place. what is the name that the fair skinned settler flat owners give to these people? don’t you think it is hep in these flats and elsewhere to say “see how dirty they are?” in english to your children, pointing at these people? who asked you to create flats in the first place and bring in people to secure it too? who created these unequal structures? Where are these security guards from and why are they here and who are they? what are the options the so called educated have given them in life, other than to open gates while ignoring and insulting them or patronizing them? go get a life guys. in your frenzy to copy – since you do not have a mind of your own, you created the criminals. so now, live with crimes.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.