“காலா…எங்களுக்கு அது கலகக்குரல்!”

ப. ஜெயசீலன்

உன்னதமான கேட்போர் உருகும் அதி அற்புத இசையின் சொந்தக்காரர் இசை மேதை இளையராஜாவே தனது தலித் அடையாளத்தை தனது ஆர்மோனியத்துக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு பட்டையும் கொட்டையும் போட்டுகொண்டு சுற்றிக்கொண்டுள்ள நமது சமூகத்தில் ஒரு வெகுஜன சினிமா இயக்குனர் தனது தலித் அடையாளத்தை கம்பீரமாக வெளிப்படுத்தி ஒடுக்கப்பட்டோரின் சார்பாக நின்று அரசியல் பேசுவது, அதோடு தனது செய்நேர்த்தியாலும், கலை ஆளுமையாலும் தனது படத்தை வெற்றியும் பெறவைப்பது இதற்குமுன் நிகழ்ந்திராதது. ரஞ்சித் மற்றும் ரஜினியின் காலா என்பது அவர்கள் இருவரும் விளையாடும் cat and mouse கேம். ரஞ்சித்தை நிச்சயமாக பயன்படுத்திக்கொள்ளும் எண்ணம் ரஜினிக்கிருக்கும். தனது கபாலி படம் முதல்முறையாக கலை அரசியல் சித்தாந்த தளத்தில் ஏற்படுத்திய விவாதம் அவருக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தியிருக்கும். அதனை ஒரு முதலீடாக தேர்தல் அரசியலில் மாற்ற முடியும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் ரஞ்சித்துக்கும் ரஜினியை வைத்து சில கணக்குகளிருக்கும். தனது கருத்துக்களை விவாதமாக்க ரஜினியை விட ஒரு சிறந்த கருவி தனக்கு கிடைக்காது என்று அவர் கபாலி வெற்றிக்கு பிறகு அவர் உணர்ந்திருப்பார். இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் பயன்படுத்திக்கொள்ள நிகழ்த்தும் போட்டியாகவே காலா இருக்கும். எப்படி ஒரு ஆதிக்க சாதி தயாரிப்பளாரை வைத்து, ஆதிக்க சாதி நடிகரை வைத்து வலிமையான தலித் அரசியலை மெட்ராஸ் படத்தில் பேசும் லாவகம் ரஞ்சித்துக்கு தெரிந்ததோ அதே போல காலாவிலும் பேச அவருக்கு தெரியும்.

இந்நிலையில் மனுஷ்யபுத்திரன், மதிமாறன் போன்றவர்கள் அய்யயோ அய்யய்யயோ அப்பாவி தலித் மக்கள் காலாவை பார்த்து ரஜினி பின்னால் போய்விடுவார்கள் என்று கூவுவது கோமாளித்தனமாகவும் தடித்தனமாகவும் உள்ளது. தலித்துகள் எல்லோரும் நடிகர்கள் பின்னால் அலைவதை போலவும் சாதி ஹிந்துக்கள் எல்லோரும் 8ஆம் வகுப்பிலேயே iim, iit நுழைவுத்தேர்வுக்கு தயாராகி ஒரு லட்சிய வெறியோடு செயல்பட்டு கொண்டிருப்பதை போலவும் ஒரு கற்பிதம் நமது சமூகத்தில் உலவுகிறது. காலம் சென்ற காடுவெட்டி குருவே சொன்னதை போல கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகுந்த முனைப்போடு ஒரு சமூகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால் அது நிச்சயம் தலித் சமுகமாகத்தான் இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்து சாதிகளில் குழந்தைகளின் கல்வியில் அதிகம் முதலீடு செய்த சமூகமும் தலித் சமூகமாகத்தான் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. இந்நிலையில் ரஜினி தலித் கதாபாத்திரத்தில் நடித்தால் தலித்துகள் ரஜினி பின்னால் போய்விடுவார்கள் என்னும் பொருள்பட பேசுபவர்க்ளுக்கு சூத்து கொழுப்பு என்பதை தவிர வேறேதுமில்லை. கார்த்தி மெட்ராஸில் தலித் கதாபாத்திரம் செய்தார் என்று தலித் இளைஞர்கள் கார்த்தி ரசிகராக மாறவில்லை, கவுண்டர் இளைஞர்கள் கார்த்தியை கைகழுவவுமில்லை. கபாலி வந்த பிறகு வன்னிய தெருக்களில் ராமதாஸை கடுப்பாக்கிய ரஜினி ரசிகர் மன்றங்கள் களைந்து தலித்துகளின் தெருக்களில் புதிதாக முளைக்கவில்லை. இந்நிலையில் தலித்துகள் மட்டுமே விரல் சூப்பி கொண்டு தெருவில் நிற்பதை போன்றும் சாதி ஹிந்துக்கள் வந்து செல்லக்குட்டி பூச்சாண்டி புடிச்சுக்குவான் காலனிக்குள்ள ஓடி ஒளிஞ்சுக்கோ என்னும் ரீதியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் கருத்தை, விவாதத்தை ரஞ்சித் காலாவில் பேசியிருப்பார் என்று அவரின் அரசியல் கருத்துக்களோடு ஒத்தவர்கள் நம்புகிறார்கள். அவர்களுக்கு அந்த படத்தின் வெற்றி என்பது அந்த படம் பெறக்கூடிய வணிக வெற்றி சார்ந்தது அல்ல. அந்த திரைப்படம் உருவாக்கும் சமூக விவாதங்களை பொறுத்தது. சமூகத்தில் அது நிகழ்த்தும் சலனத்தை பொறுத்தது. ரஞ்சித்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்புபவர்கள், இறுக்கமான சாதிய சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலை வலிமையாக ஒலிக்க முனையும் ரஞ்சித்தின் படைப்பின் மீதும், முனைப்பின் மீதும் மரியாதை கொண்டு அவருக்கு துணை நிற்க விரும்புபவர்கள் காலா வெற்றியடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். காலாவின் வெற்றியோ தோல்வியோ தனது திரைவாழ்வின் அந்திம காலத்திலிருக்கும் ரஜினிக்கு மயிருக்கு சமம். கபாலிக்கு பின்னான பேட்டியில் ரஞ்சித் சொன்னதை போல அவர் தோற்கவேண்டும் என்று பலரும் தீரா ஆசையோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ரஞ்சித் ஒரு கலகத்தின் குரல். அந்த குரல் ஓயவேண்டும் என்று துடிக்கிறார்கள். அவர்களுக்கு காலாவின் தோல்வி என்பது ரஞ்சித்தின் கலக குரலை மட்டுப்படுத்தும் ஒரு வாய்ப்பு. ரஞ்சித்தின் தொடர் வெற்றிகள் அவருக்கு ஒரு வலிமையான, தவிர்க்க முடியாத மேடையை அளித்திருக்கிறது. அதனை பயன்படுத்திதான் அவரால் கலை இலக்கிய [பண்பாட்டு தளத்தில் “casteless collective”, ladies and gentlewoman”, பரியேறும் பெருமாள் போன்ற முக்கியமான முயற்சிகளை முன்னெடுக்க வைக்க வாய்ப்பளிக்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் குரலை சமூகத்தால் உதாசீனப்படுத்த முடியும். திருமாவளவனை போன்ற சிறந்த தலைவர்களையே சாதி ஹிந்துக்கள் அவன் கெடக்கறான் பற பயல் என்று ஒதுக்க முடிகிறது. ஆனால் அவர்களால் அதை கலை இலக்கிய பண்பாட்டு தளத்தில் செய்ய முடியாது. ரஞ்சித் பிடிக்காது என்பதற்காக “நான் நீ நாம் வாழவே” பாடலை வெறுக்க முடியாது. இதுதான் கலையின் வலிமை. அமெரிக்க கருப்பினத்தவர்களின் எழுச்சியில் அவர்களின் கலை பண்பாட்டு முன்னெடுப்புகள் பெரும் பங்காற்றியுள்ளன. இன்றைக்கு “blues” இசை என்பது உலகில் எங்கும் வியாபித்திருக்கும் தவிர்க்க முடியாத இசையாக நிறுவப்பட்டிருப்பதே அதற்கான சாட்சி.

கலை இலக்கிய பண்பாட்டுத்தளத்தில் ரஞ்சித் எழுப்பும் சலனத்தை, கலக குரலை விரும்பாதவர்கள் காலா தோற்க விரும்புகிறார்கள். தலித்துகளுக்கு தாங்கள் பார்த்து எதாவது செய்தால் தான் உண்டு, தலித்துகளால் அவர்களுக்கான போராட்டத்தை தாங்களாகவே முன்னெடுத்துக்கொள்ளும் தகுதியோ, திறனோ இல்லை/இருக்கக்கூடாது என்று சூத்திர புத்தியில் உழலும் போலி பெரியாரியவாதிகள் காலா தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், ரஞ்சித் என்னா பெருசா வாசிச்சுடாப்புல நான் எழுதாத கவிதையா (மனுஷ்யபுத்திரன்), நான் பேசாதா பேச்சா (மதிமாறன்), நான் எடுக்காதா படமா (சீமான்), எங்களுக்கு தெரியாதா கருத்தா (ரவிக்குமார்) வகையறாக்களும் ரஞ்சித்துக்கு கிடைக்கும் மேடையும், கவன குவிவையும் ஏற்றுக்கொள்ளமுடியாதவர்கள் காலா தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், ரஜினி காபாலிக்கு முந்தய கோமாளித்தனமான நாயக வசனங்களை நம்பி நிஜ வாழ்வில் தலைவனாக ஏற்றுக்கொண்ட கோமாளிகளை போல ரஜினி நிஜ வாழ்வில் பேசிய கோமாளித்தனமான கருத்துக்காக திரையில் அவர் பேசும் முற்போக்கு அரசியலை வீழ்த்துவோம் என்று சொல்லும் கோமாளிகள் காலா தோற்கவேண்டும் என்று விரும்புகிறார்கள், தங்களை ஆண்ட சாதிகளாக கருதிகொள்ளும் சூத்திர சாதி கோமாளிகள் திரையுலகின் உச்சநட்சத்திரத்தை தலித் கதாபாத்திரமாக சூத்திரசாதிகளை ஓடவிட்டு அடிக்கும் கெடும்காட்சியை திரையில் பார்த்து trauma வுக்கு உள்ளானவர்கள் காலா தோற்கவேண்டும் என்று விரும்புகிறார்கள், பெரியாரிய இயக்கங்கள் தலித்துகளின் பிரச்சனையில், போராட்டங்களில் இன்னமும் தீவிரம் காட்டியிருக்க முடியும், வேண்டும் என்றும், தலித்துகளுக்கு பெரியாரை தெரியும், பெரியரியவாதிகளாய் சொல்லிக்கொள்ளும் எல்லோருக்கும் ரெட்டைமலை சீனிவாசனை தெரியுமா என்று மென் விமர்சனத்தை நட்போடு சொல்லும் ரஞ்சித்தின் மீது ஆவேசம்கொண்டிருக்கும் போலி பெரியாரியவாதிகள் காலா தோற்கவேண்டும் என்று விரும்புகிறார்கள், தலித்துகளும் பெரும் நம்பிக்கையோடு பங்கேற்ற திராவிட அரசியலின் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய திராவிட இயக்க சூத்திர சாதிகளுக்கு தலித்துகளிடும் அம்பேத்கரிய அரசியல் பேசும் ரஞ்சித்தின் காலா தோற்கவேண்டும் என்று விரும்புகிறார்கள், ok ஜி நாம் தமிழர் வாங்க அப்படியே தமிழராய் ஒன்றிணைந்து ஜாலியா இருப்போம் என்று சொல்லும் தமிழ் தேசியவாதிகளின் செவுனியில் அறைந்து இங்கு சாதி இருக்கிறது, அந்த மயிரை முதலில் புடுங்கிய பிறகு தமிழ் தேசிய மயிரை பிடுங்கலாம் என்று ரஞ்சித் சொல்வதில் காண்டாகியுள்ள சீமான் வகையறாக்கள் காலா தோற்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

எந்த ஹிந்துத்துவத்திற்காக பிஜேபி rss செயல்படுகிறதோ, அந்த மதத்தின் கோட்பாட்டு கட்டுமானமாக இருக்கும் சாதியை வீழ்த்த முனையாமல், அழித்தொழிக்க விளையாமல் சும்மா பிஜேபி குரலானா ரஜினியை எதிர்க்கிறோம் என்று சில கோமாளிகள் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். ரஜினிகூட தனது சொந்த வாழ்வில் கலப்பு திருமணம் செய்தவர். தனது மகளுக்கு தமிழ்மண்ணின் பூர்வ குடியான பறையர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்ய எந்த தடையும் சொல்லாதவர். இப்பொழுது எங்க பொண்ண தொட்ட வெட்டுவோம் என்று சொல்லும் சூத்திர சாதி ஆட்களையும், கட்சிகளையும், தலைவர்களையும் rss குரலாய் பார்க்கவேண்டுமா அல்லது ரஜினியை பார்க்க வேண்டுமா? இங்கு சில கோமாளிகளுக்கு ரஜினி மட்டுமே தெரிகிறார். நன்று. சூத்திர சாதி புத்தி சிறுபுத்தி. அப்படிதான் வேலை செய்யும். அதோடு நின்றால் பரவாயில்லை. ரஜினி rss குரலாய் பேசுகிறார். அதனால் அவர் rss’க்கு எதிராக பேசும் படமாக இருந்தாலும் காலாவை நாம் புறக்கணிக்கவேண்டும் என்பது எவ்வளவு கோமாளித்தனம்??? இதற்கிடையில் ஒரு தொழில் முறை கலைஞனாக தனது திரைப்படத்தில் தான் பேசும் கருத்துக்கள் நிறைய மக்களை சென்றடைய வேண்டும் என்று விரும்புவதும், அது வெற்றிப்படமாக விரும்புவதும், அதற்கான கருவிகளை, கலைஞர்களை பயன்படுத்துவதும் எந்த வகையில் தவறாகும்? ஒவ்வொரு இயக்குனரும் தனது திரைப்படத்தில் தனது அரசியல் கருத்தோடு ஒத்தவர்களுடன்தான் பங்கேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடத்தனம் என்பதை தவிர வேறென்ன சொல்ல.

ரஞ்சித் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவர்மீது விமர்சனங்கள் செய்வது எந்த தவறும் இல்லை. ஆனால் அவரது நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதும், உள்நோக்கம் கற்பிப்பதும், ஏதோ தலித் அரசியலை பேசி காசாக்க வந்தவர் என்னும் ரீதியில் உதாசீனப்படுத்துவதும் சில்லறைத்தனம் அன்றி வேறொன்றும் இல்லை. அவர் ஒவ்வொரு மேடையிலும் சொல்வதை போல “மானுட மான்பை மீட்டெடுக்கும் போராட்டத்தை” முன்னெடுப்பதே தனது நோக்கம், செயல்பாடு என்று அவர் சொன்னதை தனது வயதிற்கு, அனுபவத்திற்கு, அரசியல் புரிதலுக்கு, பொருளாதார வலிமைக்கு உட்பட்டு தனது வலிமைக்கும் மீறி தான் அவர் இதுவரை செயல்பட்டுள்ளார், முன்னெடுத்துள்ளார்.

இவர்கள் எல்லோரையும் தாண்டியும், இவைகள் எல்லாவற்றையும் தாண்டியும் “காலா“வையோ, ரஞ்சித்தையோ இவர்களால் வீழ்த்த முடியாது. ஏனென்றால் அவர் அம்பேத்கரிய கோட்பாட்டு வழிநடத்துதலில், கோட்பாட்டு பின்புலத்தில் இயங்குகிறார். காபாலிக்கு பின்பான நியூஸ் 18 பேட்டியில் ரஞ்சித் சொன்னது இதுதான்” என்னிடம் இழப்பதற்கு என்று ஒன்றுமே இல்லை. என்னுடைய ஒரே ஆயுதம் எனது இந்த உடல்தான். இது இருக்கும் வரை என்னுடைய கருத்துக்களை மக்களிடம் பேசி கொண்டேயிருப்பேன். என்னை அவர்கள் தடுக்க, நிறுத்த நினைத்தால் எனது உடலை எதாவது செய்தால் தான் உண்டு”. பேசிவிட்டு நிற்கவில்லை. இங்கு கோமாளிகள் ரஞ்சித்தை பார்த்து அவர் என்னா ஆம்பேத்கரா என்று கேட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் அவர் கச்சாநத்தம் பிரச்னையில் மக்களோடு நின்றுகொண்டிருந்தார்.

காலா உனக்கு படம்
எங்களுக்கு அது கலகக்குரல்”

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.