ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் வன்முறை வெடித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அதிமுக அரசும் இதே கருத்தை கூறிவரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ ரஜினியை பாராட்டி கட்டுரை எழுதியுள்ளது.
காலிகள் ஒழிப்பும், கபாலியின் வாழ்த்தும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையில், “தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசியிருக்கிறார். போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என முதல்வரின் கருத்தையே ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது.
தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது. ரஜினி மறைமுகமாக சுட்டிக்காட்டிய விஷக்கிருமிகளும், சமூகவிரோதிகளும் திமுகவினர்தான். பிரச்சினைக்கு ராஜினாமா முடிவல்ல என ரஜினி கூறியது பதவி ஆசை உள்ள தலைவர்களுக்கு சரியான பாடம். வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.