தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது போலீஸாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை நேரில் சந்தித்தார். சிகிச்சை பெற்றவர்களை ஒவ்வொருவராக நலம் விசாரித்தார் ரஜினி. அப்போது, பண்டாரம்பட்டியைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான சந்தோஷ் என்ற இளைஞர், ‘யார் நீங்க?’ என ரஜினியைப் பார்த்து கேட்டார். ‘ நான்தான்பா ரஜினிகாந்த்’ என பதிலளித்தார் அவர். நூறு நாட்களாக நடந்த போராட்டத்தின் போது வராத ரஜினி, இப்போது எதற்காக வருகிறார் என சமூக ஊடகங்களில் மக்கள் கொந்தளித்ததுடன், #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ் டேக்கில் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
https://twitter.com/DesiPoliticks/status/1001872520482639872
அனைத்து கல்லூரி மாணவர்களையும் திரட்டி போராட்டத்தில் பங்கெடுக்க வைத்த சந்தோஷ், அமைச்சர் செல்லூர் ராஜு மருத்துவமனைக்கு வந்திருந்தபோதும் இதேபோல் கேட்டது ஊடகங்களில் வெளியானது. அதனால், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சிகிச்சை பெற்றவர்களை நலம் விசாரிக்கச் சென்றபோது ஊடகங்களுக்கு மருத்துவமனைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.