“மக்களவை தேர்தலுக்குபின் நடக்கவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒத்திகை கர்நாடகத்தில் நடக்கிறது” என பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த சின்ஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கர்நாடக அரசியல் நிலை குறித்து பதிவிட்டுள்ள அவர்,
“கர்நாடகத்தில் ஜனநாயகத்தை புதைக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் கட்சியிலிருந்து விலகியதில் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் இதுதான் அப்போது நடக்கும். என்னுடைய எச்சரிக்கையை குறித்துக்கொள்ளுங்கள்” என்கிறார்.
மற்றொரு பதிவி, கர்நாடகத்தில் நடந்துகொண்டிருப்பது, டெல்லியில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒத்திகை எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாஜகவிலிருந்து யஷ்வந்த் சின்ஹா விலகினார்.
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..