கர்நாடக பாணியில் கோவா, மணிப்பூர், பீகார், மேகாலயா மாநிலங்களில் ஆட்சியமைக்க உரிமை கோர கட்சிகள் முடிவு!

கர்நாடகத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் ஆட்சியமைக்க போதிய இடங்களைப் பெறாத நிலையில் அதிக இடங்களைப் பிடித்த பாஜகவை ஆளுநர் பதவியில் அமர்த்தியிருக்கிறார். கோவா, பீகார், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் அதிக இடங்களைப் பிடித்த கட்சிகளை ஆட்சியமைக்க அழைக்காமல், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்த கட்சிகளை, குறிப்பாக குறைவான இடங்களைப் பெற்ற பாஜகவினரை ஆட்சியமைக்க அந்தந்த மாநில ஆளுநர் அழைத்தனர். இந்த விஷயம் அப்போதே சர்ச்சையான நிலையில், கர்நாடக அரசியல் நிலவரத்துக்கு எதிர்வினையாக மீண்டும் இது பேசுபொருளாகியுள்ளது.

கோவாவில் கடந்த ஆண்டு நடந்த முடிந்த தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் 17 இடங்களைப் பிடித்தது. ஆட்சியமைக்க 21 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் 13 இடங்களைப் பெற்ற பாஜக, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க அதிகாரம் கேட்டது. அதன்படி ஆளுநரால் அழைக்கப்பட்டு, பாஜக ஆட்சியமைத்துள்ளது.

அதுபோல, பீகாரில் தேர்தலுக்கு முன்பு ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து பெரும்பான்மை பெற்றன. ஆனால், சில மாதங்களில் இந்தக் கூட்டணி உடைந்தது. 71 இடங்களைப் பிடித்த ஐக்கிய ஜனதா தளம்,  53 இடங்களைப் பிடித்த பாஜகவின் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர்கிறது. கூட்டணி உடைந்த நிலையில் 80 இடங்களைப் பெற்ற ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை. கர்நாடக ஆளுநரின் நடவடிக்கை சரி என்கிற பட்சத்தில் தங்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்த உள்ளதாகவும் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். ஆளுநர் தங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

“ஆளுநர்  எடியூரப்பாவுக்கு தனது பலத்தை நிரூபிக்க 15 நாட்கள் கொடுத்திருக்கிறார். ஆனால், நாங்கள் ஒரே ஒரு வாரம் நேரம் கேட்போம். நாளை 1 மணிக்கு ஆளுநரை நாங்கள் சந்தித்து, ஆதரவு கடிதத்தை கொடுக்க இருக்கிறோம். காங்கிரஸ் எங்களை ஆதரிக்கும்” என தேஜஸ்வி தெரிவிக்கிறார்.

மணிப்பூரின் முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங், தாங்களும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க கோர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேகாலயாவிலும் காங்கிரஸ், இந்த நிலைப்பாட்டை எடுக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறது. 60 இடங்களைக் கொண்ட மேகாலயா சட்டமன்றத்தில் 21 இடங்களைப் பிடித்தது காங்கிரஸ். இரண்டு இடங்களைப் பிடித்த பாஜக, மற்ற கட்சிகளை இணைத்துக்கொண்டு ஆட்சியமைத்துள்ளது.

“கர்நாடகாவில் எங்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அதிக இடங்களை பெற்ற கட்சிக்கு வாய்ப்பளித்திருக்கிறார். இப்போது, நாங்களும் அதே பாணியில் ஆட்சியமைக்க ஏன் உரிமை கோரக் கூடாது?” என காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் ஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.