கேன்ஸ் 2018: குர்து இன பெண் போராளிகளின் கதையை சொல்லும் Les Filles du soleil!

ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய குர்திஸ் இன பெண் போராளிகளின் கதையை சொல்லும் Les Filles du soleil (சூரிய பெண்கள்) என்னும் ஃபிரஞ்சு படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் கலந்துகொள்ள தேர்வாகியிருக்கிறது. இந்தப் படத்தை இயக்கியவர் இவா ஹசோன். 2015-ஆம் ஆண்டு பேங்க் பேங்க் என்ற பதின்பருவ காதலை மையப்படுத்திய, அதுகுறித்து கட்டமைப்பை உடைக்கும் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர். இது இவாவின் இரண்டாவது படம்.  கோல்ஷிஃப்டெ ஃபர்ஹானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவா ஹசோன்

Les Filles du soleil (சூரிய பெண்கள்) திரைப்படம் குர்திஸ் இன வழக்கறிஞரான பஹர் என்ற பெண்ணைப் பற்றியது. பஹர் கருப்பு உடையணிந்த ஆண்களால் கடத்தப்படுகிறார். அவர்களிடமிருந்து தப்பிக்கும் பஹர், பெண்களை மட்டும் கொண்டு காமாண்டோ படை ஒன்றை அமைத்து, குர்திஸ்தானில் உள்ள தனது நகரத்தை கைப்பற்ற போராடுகிறார். .

அறிவுப்பரப்பலுக்கு தடையாக உள்ள காரணிகளை  எதிர்க்கும் பெண்களின் போராட்டத்தை முன்னிலைப்படுத்துகிறது இந்தப் படம்.  நேரடியாக கேட்டறிந்த செய்திகளின் அடிப்படையில் படத்துக்கான கதையை உருவாக்கியிருக்கிறார் இவா ஹசோன்.  ஈரானிலும் சிரியாவிலும் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளுக்கு எதிராக குர்திஸ் இன வீராங்கனைகளின் அனுபவங்களை எதிரொலிக்கிறது இந்தப் படம். கலாஸ்நிக்கோவ் (ஏ.கே. 47 ரக துப்பாக்கி) ஐ கைகளில் ஏந்தியபடி 2015 ஆம் ஆண்டு மேற்கில் போராட்டத்தை அவர்கள் எதிர்கொண்டார்கள்..

கோல்ஷிஃப்டெ ஃபர்ஹானி

இவா ஹசோனின் படத்தில் போர் மையப்படுத்தவில்லை. தங்களை நசுக்க உருவாக்கப்பட்ட அமைப்புக்கு எதிராக உள்ள பெண்களின் வீரத்தை போரின் பின்னணியில் சொல்ல பயன்படுத்தியிருக்கிறார். Les Filles du soleil படத்தின் மூலம் முழுக்க பெண்மையையும் பெண்ணியத்தையும் மையப்படுத்திய போர் படத்தை நமக்கு அளித்திருக்கிறார். இந்தப் படத்தை நேற்றைய, இன்றைய அனைத்து பெண்ணியவாதிகளுக்கும் அவர் சமர்பித்திருக்கிறார்.  கோல்ஷிஃப்டெ ஃபர்ஹானி(ஈரானில் பிறந்த ஃபிரான்ஸில் குடியேற நடிகர்) முதன்மை கதாபாத்திரத்திலும் 2015-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது பெற்ற எம்மானுவேல் பர்காட் பத்திரிகையாளராகவும் நடித்துள்ளனர்.

எம்மானுவேல் பர்காட் பத்திரிகையாளராக…

குர்திஸ் வீராங்கனைகளாக நடிக்க வைக்க ஜெர்மனி, ஜார்ஜியா, துருக்கி, ஸ்வீடன் போன்ற நாடுகளைச் சேர்ந்த குர்து மொழி பேசும் நடிகர்களை தேர்ந்தெடுக்க பெரும் பணியைச் செய்திருக்கிறார் இயக்குநர் இவா. அதிகபட்ச யதார்த்தத்துடன் பெண் போராளிகளின் தைரியத்தை வெளிப்படுத்த இது மிகவும் முக்கியம்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.