மானுட விடுதலை நோக்கி நீண்ட பயணம்: திபங்கர்

திபங்கர்

‘சித்தாந்தவாதிகள் இதுவரை உலகத்தை பல்வேறு விதங்களிலும் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள்; பிரச்சனை, அதை எப்படி மாற்றுவது என்பதுதான்’

  • காரல் மார்க்ஸ் (05.05.1818 – 14.03.1883)

மிக விரைவாகவே, தனது இருபதுகளின் பிற்பகுதியிலேயே இந்த முடிவுக்கு வந்திருந்தார். தனது இறுதி மூச்சு வரை இந்த முடிவு நோக்கி விடாப்பிடியாக பணியாற்றினார்; நாம் வாழும் உலகை புரிந்துகொண்டு மாற்றியமைப்பது நோக்கிய மானுட முயற்சிகளின் மிகவும் செழுமையான, மிகவும் உத்வேகமூட்டும் மரபை உருவாக்கினார்.

1848ல், தனது முப்பதாவது வயதில், அவரது வாழ்நாள் நண்பரான பிரடெரிக் எங்கல்சுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தந்தது முதல், அவரது மறைவுக்குப் பிறகே முழுமையாக வெளியிடப்பட்ட, அவரது மகத்தான படைப்பான மூலதனம் வரை,

‘நிலவுகிற அனைத்து அம்சங்கள் பற்றியும் இரக்கமற்ற விமர்சனம் – அதனால் ஏற்படக்கூடும் விளைவுகள் பற்றி அஞ்சாமலும்… அதிகாரத்தில் இருப்பவர்களுடன் மோதல் ஏற்படக் கூடும் என்றாலும் இரக்கமற்ற விமர்சனம்’ என்ற அவரது உணர்வில் மார்க்ஸ் உறுதியாக இருந்தார்.

‘நிலவுகிற அனைத்து அம்சங்கள் பற்றியும் இரக்கமற்ற விமர்சனம்’ என்ற இந்த உணர்வும் உலகத்தை மாற்றியமைக்கும் வெல்லற்கரிய உறுதியும் மார்க்சை அவரது காலத்தில் இருந்த பெரும்பாலான அரசாங்கங்களுக்கு எதிராகவே நிறுத்தியது. அய்ரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் நாடு கடத்தப்பட்ட அவர், அதைத் தொடர்ந்து லண்டனை தனது வசிப்பிடமாக மாற்றிக் கொண்டார். அந்த நாட்களில், லண்டன், உலகின் மிகவும் முன்னேறிய முதலாளித்துவ நாட்டின், ஆகப்பெரிய காலனிய சக்தியின் தலைநகராகவும் இருந்தது. லண்டனில் வசித்துக் கொண்டு, படிப்பு, ஆய்வு, எழுத்து ஆகியவற்றில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் புரட்சிகர தொழிலாளர் வர்க்க இயக்கங்களை முன்னகர்த்துவதிலும் அந்த இயக்கங்கள் மத்தியில் சர்வதேச ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதிலும் மார்க்ஸ், தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். தொழிலாளர் வர்க்கத்தின் முதல் சர்வதேச அமைப்பை உருவாக்குவதில் (சர்வதேச தொழிலாளர் அமைப்பு), அந்த உருவாக்க கால கட்டத்தில் சர்வதேச தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் செயல்பட்ட பல்வேறு கருத்தியல் நீரோட்டங்களின் ஓர் ஒன்றுபட்ட மேடையாக அதை வளர்த்தெடுப்பதில், அவர் மய்யமான பாத்திரம் வகித்தார்.

இந்தியாவில் 1857ல் நடந்த காலனி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து 1871 பாரீஸ் கம்யூன் வரை, உலகத்தின் எல்லா இடங்களிலும் சுதந்திரத்துக்கான, சோசலிசத்துக்கான போராட்டங்களை உன்னிப்பாக கவனித்தார்; அவை பற்றிய பகுப்பாய்வு மேற்கொண்டார்; அவற்றை ஊக்கப்படுத்தினார்.

சமூகம் பற்றிய தனது ஆய்வில், மார்க்ஸ், வர்க்கங்களை மய்யமான பாத்திரம் கொண்டவையாகவும், அவற்றின் போராட்டங்களை சமூக வளர்ச்சிக்கான கருவான உந்துதலாகவும் கொண்டார். ஒரு சமூகத்தின் ஆளும் வர்க்கங்கள் செல்வாதாரங்கள் மீதும் பொருளுற்பத்தி மீதும் அவற்றுக்கு இருக்கிற கட்டுப்பாடு மூலம் மட்டும் ஆட்சி செய்யவில்லை, அரசு, அதன் சட்டங்கள், ஒடுக்குமுறை எந்திரம் ஆகியவற்றின் மீதும், மனரீதியான உற்பத்தி என்ற தளத்திலும் அதாவது கருத்துகளை உற்பத்தி செய்வது மற்றும் அவற்றை முறைப்படுத்துவது என்ற தளத்திலும் ஆட்சி செய்கிறது.

‘எல்லா கால கட்டங்களிலும் ஆளும் வர்க்கக் கருத்துகள் ஆள்கிற கருத்துகள், அதாவது, சமூகத்தின் பொருளாயத சக்தியை ஆளும் வர்க்கம், அதே நேரத்தில் அதன் அறிவுரீதியான சக்தியையும் ஆள்கிறது’ என, பெரிதும் கொண்டாடப்பட்ட அவரது ‘ஜெர்மானிய கருத்தியல்’ நூலில் 1845ல் மார்க்ஸ் சொல்கிறார். ஆக, வர்க்கப் போராட்டம் பற்றிய மார்க்சிய வரையறை, பொருளாதாரம், அரசியல், சமூகம், கலாச்சாரம் மற்றும் அறிவுசார் தளம் என எல்லா கோணங் களிலும் ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கத்தை எதிர்க்கிறது.

முதலாளித்துவ யுகத்தில் ஆளுகிற கருத்து, மூலதனம் முடிவற்றது, இயல்பானது, மந்திரத்தன்மை கொண்டது, வெற்றி கொள்ள இயலாதது என மூலதனம் பற்றிய மயக்கத்தைத் தரும், முதலாளித்துவத்தார் அல்லது முதலாளித்துவ வர்க்கமே மிகவும் நாகரிக வளர்ச்சியடைந்த வர்க்கம் என, முதலாளித்துவ ஆட்சியே அதிஉன்னத ஆட்சி, ஜனநாயகபூர்வமான ஆட்சி என போற்றிப் புகழும் கருத்தாகும். தனது எழுத்துகளில் மார்க்ஸ் இந்த முகத்திரையை கிழித்தெறிந்தார்; முதலாளித்துவ ஆட்சி இயல்பானது, நிரந்தரமானது, அதிஉன்னதமானது என்ற இந்த கருத்துக்கு சவால்விடுகிற ஒவ்வொரு முரண்பாட்டையும் பகுப்பாய்வு செய்தார்; தவிர்க்க முடியாமல் அவ்வப்போது நெருக்கடியில் சிக்கும் மூலதனத்தின் இயக்க விதிகளை, இது வரையில் அறியப்படாத அந்த விதிகளை தெளிவாக முன்வைத்தார்; அடிமைத்தனத்தை சுதந்திரம் என்றும் போரை அமைதி என்றும் கொள்ளையை வளம் என்றும் அழிவை வளர்ச்சி என்றும் காட்ட முனையும் எல்லா போலித்தனத்தையும் அம்பலப்படுத்தினார். அருவமான கோட்பாடுகள் அடிப்படையிலோ, கற்பனாவாத கனவுகள் அடிப்படையிலோ அல்லாமல், நிலவுகிற சமூக சக்திகளின் இந்த உண்மையான இயக்கத்தின் மூலம்தான், கருத்துகளின் இந்த விடாப்பிடியான போராட்டங்கள் மூலம்தான், சோசலிசம் மற்றும் கம்யூனிசம் நோக்கிய, முழுவதுமான மானுட விடுதலை நோக்கிய மானுடத்தின் முன்னோக்கிய அணிவகுப்பை மார்க்ஸ் கண்டார்.

அவரது வாழ்நாளிலும் அவரது மறைவுக்குப் பிறகும் #மார்க்ஸ்பொருத்தப்பாடுஇழந்துவிட்டார் என்றும் காலாவதியாகிவிட்டார் என்றும் மீண்டும் மீண்டும் அறிவிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் திரும்பி வருகிறார்; அடுத்தடுத்த தலைமுறைகள் அவரது எழுத்துகளில் ஏதோ ஒரு புதிய ஒளியை கண்டறிந்து கொள்கின்றன; அன்றாட பிரச்சனைகளை புரிந்துகொண்டு தீர்வு காண அவர்களுக்கு உதவுகிறார். சோவியத் யூனியன் வீழ்ச்சியுடன் சேர்த்து மார்க்சின் கருத்துகளையும் ஒரு வழியாக புதைத்தாகிவிட்டது என்று நம்பிய முதலாளித்துவ வெற்றிவாத கருத்தியலாளர்களுக்கு வரலாறு குரூரமான ஆசிரியராக இருந்தது. வரலாறு முடிந்துவிட்டது என்று அவர்கள் பிரகடனப்படுத்திய குறுகிய காலத்துக்குள்ளாகவே சர்வதேச முதலாளித்துவம் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை எதிர்கொண்டது.

1930களின் மாபெரும் நெருக்கடியில் இருந்து, மிகவும் நீண்ட, கடுமையான நெருக்கடிகள் விரட்டுவதால், பெருங்குழப்பமும் கடைசலும் நிகழும் இன்றைய நிலைமையை புரிந்துகொள்ள, முதலாளித்துவ சிந்தனையாளர்கள் கூட இன்று மீண்டும் மார்க்சுக்கு திரும்புகிறார்கள்.

பல்வேறு கருத்தியல் நீரோட்டங்களையும் சேர்ந்த, இந்திய முற்போக்காளர்களின் சிந்தனையாளர்களின் பெரும்பிரிவினர், மார்க்சை அறிந்திருக்கின்றனர்; மதிக்கின்றனர்; படிக்கின்றனர். மறுபுறம், மார்க்ஸ் தவறாக புரிந்து கொள்ளப்படுவதும் தவறாக வியாக்கியானப் படுத்தப்படுவதும் கூட பரவலாக நடக்கிறது.

காலனியாக்கத்தின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும், ‘தேங்கிக் கிடந்த பின்தங்கிய இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் நுழைந்தது வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட ஒரு முற்போக்கு தலையீடு’ என்று மார்க்ஸ் சொன்னதாக வாதிடுகிறார்கள். இந்தியா பற்றிய மார்க்சின் பார்வையை இதை விட தவறாக புரிந்துகொள்ள முடியாது; வியாக்கியானப்படுத்த முடியாது.

முதலாளித்துவ நாடுகளின் சட்டத்தால் முறைப்படுத்தப்பட்டதுபோல் தெரிகிற சூழலில் மட்டும் மூலதனம் இயங்குவதில்லை என்பதில் மார்க்ஸ் மிகவும் தெளிவாக இருந்தார். காலனிய கொள்ளை, உலகம் முழுவதும் வன்முறை நடவடிக்கைகள் மூலம் மூலதனக் குவிப்பு என்ற யதார்த்தத்தை, இவைதான் உண்மையில் மூலதனம் எழுவதற்கான நிபந்தனைகளை உருவாக்கின என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

‘ஒரு கன்னத்தில் பிறப்பில் ஏற்பட்ட ரத்தக் கறையுடன் பணம் உலகத்துக்கு வந்ததென்றால், மூலதனம் தலை முதல் கால் வரை அதன் மயிர்க்கால் ஒவ்வொன்றிலும் ரத்தமும் சகதியும் சொட்டச் சொட்டப் பிறந்தது’ என்று அவர் ஆழமாக அறிந்திருந்தார். (மூலதனம், தொகுப்பு 1, அத்தியாயம் 31: தொழில் முதலாளித்துவத்தின் மூலத் தோற்றம்).

இந்தியாவின் குறிப்பான பின்னணியில், பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் மிருகத்தனத்தை, அதன் கொள்ளையை, சித்திரவதையை, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கினார்; 1853 ஜூன் மாதம் நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன் பத்திரிகைக்கு ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி’ என்ற தலைப்பில் மார்க்ஸ் எழுதிய கட்டுரையில்,

‘இந்துஸ்தானுக்கு பிரிட்டிஷ் உருவாக்கியிருக்கிற துன்பம், இதற்கு முன்பு இந்துஸ்தான் சந்தித்திராத, சாரத்தில் வேறுபட்ட, எல்லையற்ற தீவிரமான தன்மை கொண்டது…. முதலாளித்துவ நாகரிகத்தின் ஆழமான போலித்தன்மையையும் உள்ளார்ந்த மிருகத்தனத்தையும் நாம் இப்போது கண் முன் பார்க்கிறோம்; தனது சொந்த நாட்டில் அது மதிப்பிற்குரிய வடிவங்களை கொண்டுள்ளது; காலனிகளில் அது ஆடையின்றி நிற்கிறது’ என்கிறார்.

அதே நேரம் மார்க்சைப் பொறுத்த வரை, இந்தியாவில் உள்ள கிராம சமூகங்கள் அமைதி மற்றும் வளம் நிறைந்த பேரானந்தத் தீவுகள் அல்ல; அவை ‘சாதி மற்றும் அடிமைத் தனம் என்ற வேறுபாடுகளால் மாசுபட்டிருந்தன; இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் அதிகாரத்துக்கும் சாதிகள் தீர்மானகரமான தடைகள்’ என்றார்.

இந்தியாவில் ரயில்வேயை துவங்கியது ஒரு புரட்சிகர நடவடிக்கை என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெருமை பேசியபோது, ‘ஆங்கிலேய முதலாளித்துவத்தார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்தப்படுத்தப்பட்டாலும், அவற்றில் எதுவும் வெகுமக்களை விடுதலை செய்யாது; அவர்களது சமூக நிலைமைகளை பொருளாயதரீதியாக மாற்றி அமைக்காது’ என்று 1853 ஜூலையில் மார்க்ஸ் எழுதினார். அதே கட்டுரையுடன் ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்’ என்ற தலைப்பில் எழுதியபோது, ‘இப்போது ஆளும் வர்க்கமாக இருக்கிற பிரிட்டனுக்குப் பதில் தொழில்துறை பாட்டாளி வர்க்கம் வரும் வரையிலோ அல்லது ஆங்கிலேய நுகத்தடியை தாங்களாகவே முழுவதுமாக தூக்கியெறியும் அளவுக்கு வலுவாக இந்தியர்கள் வளரும் வரையிலோ, அவர்கள் மத்தியில் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தார் விட்டுச் சென்றுள்ள சிதைந்து கிடக்கிற சமூகத்தின் புதிய கூறுகளின் கனிகளை இந்தியர்கள் அறுவடை செய்ய மாட்டார்கள்’ என்று எழுதினார்.

ஆக ஜூலை 1853லேயே, இந்தியாவின் முதல் சுதந்திரப் போரை நடத்த இந்தியர்கள் எழுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே முழுமையான இந்திய விடுதலை என்ற பிரச்சனையை மார்க்ஸ் முன்வைக்கிறார்.

‘மதம் மக்களின் அபினி’ என்று மார்க்ஸ் மதத்தை இழிவுபடுத்திப் பேசினார், எல்லா மதங்களையும் தடை செய்ய வேண்டும் என்று சொன்னார் என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. இது மதம் தொடர்பான மார்க்சின் கருத்துகள் பற்றிய, கெடுநோக்கம் கொண்ட தவறான வியாக்கியானம் இல்லை என்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட எளிமைப்படுத்துதல் ஆகும். மக்களுக்கு அபினி என்ற சொற்றொடர் அந்தப் பத்தியின் இறுதியில் வருகிறது.

‘மதரீதியான துன்பங்கள், ஒரே சமயத்தில், உண்மையான துன்பத்தை வெளிப்படுத்துவதும் உண்மையான துன்பத்துக்கு எதிர்ப்பும் ஆகும். மதம் ஒடுக்கப்பட்ட உயிரினங்களின் நெடுமூச்சு. இதயம் இல்லாத உலகின் இதயம். ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மா. அது மக்களின் அபினி’. ஆக, மார்க்சியம் எப்போதும் ‘இதயமற்ற உலகை’, ‘ஆன்மா இல்லாத நிலைமைகளை’ மாற்றியமைப்பதில் கவனம் குவிக்கிறது; மதம் தனிநபர் விசயமாக கருதப்பட வேண்டும், அரசிடம் இருந்தும், அரசு நிர்வகிக்கிற பொது விவகாரங்களில் இருந்தும் அது கறாராக பிரித்து நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மார்க்சின் 200ஆவது பிறந்த நாளை நாம் அனுசரிக்கும்போது, இந்தியாவில், வெறுப்பு, பொய்கள், வன்முறை ஆகியவற்றின் மூலம் கருத்தியல் விவாதங்களை எதிர்கொள்ள முனையும் மிகவும் மோசமான மதவெறி, இருண்மைவாத ஆட்சியாளர்கள் குழு ஒன்றின் ஆட்சியின் கீழ் நாம் இருக்கிறோம். திரிபுராவில் அவர்கள் பெற்ற வியப்புக்குரிய வெற்றியின் இறுமாப்பு தலைக்கேறியபோது, லெனின் சிலையை இடித்துத் தள்ளினார்கள். அவர் இந்தியாவுக்கு தொடர்பற்ற அந்நிய நாட்டுக்காரர் என்றார்கள். மார்க்ஸ் பற்றியும் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். இவர்கள்தான், அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து இந்திய வளங்களை கொள்ளையடிக்க அழைப்பு விடுப்பார்கள். ட்ரம்ப்தான் உலகின் அதிஉயர்ந்த தலைவர் என்று சொல்லி அவர் முன் மண்டியிடுவார்கள். வரலாற்றில் சற்று பின் சென்று பார்த்தால், அவர்களது கருத்தியல் முன்னோர்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்து இருந்ததை நாம் பார்க்க முடியும்.

ஒரு கருத்தோ அல்லது ஓர் அறிவாளியோ இந்தியாவைச் சேர்ந்தவரா, அந்நிய நாட்டவரா என்று பார்க்கும் அற்பமான வேறுபடுத்துதல் நம்மை தவறாக அழைத்துச் சென்றுவிடாமல் இருக்க, ஆர்எஸ்எஸ் எப்போதும் அந்நிய நாட்டு திருவுருக்களை வழிபட்டதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எதேச்சையாக, அடால்ஃப் ஹிட்லர் என்ற இன்னொரு ஜெர் மானிய திருவுருவை அவர்கள் வழிபட்டனர். மார்க்சையும் லெனினையும் எதிர்க்கும் இவர்கள், அம்பேத்கரையும் பெரியாரையும் எதிர்க்கிறார்கள். ஆக, கருத்து எங்கிருந்து உருவானது என்பதல்ல பிரச்சனை. அந்த கருத்தேதான் பிரச்சனை. சமத்துவம் மற்றும் நீதி, சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றுக்காக நிற்கும், போராடும் அனைவருக்கும் மார்க்ஸ் உத்வேகம் அளிப்பவராக இருப்பார். சமத்து வத்தின் எதிரிகளுக்கு அந்த பிரம்மாண்டமான புரட்சிகர பேராளுமை எப்போதும் மரண பயத்தையே தரும். மார்க்சின் கருத்துகளும் மரபும் மேலும் சக்தி பெறட்டும்!மானுட விடுதலை நோக்கி நீண்ட பயணம் !

திபங்கர், சிபிஐ(எம்எல்) கட்சியின் பொதுச்செயலாளர்.

இந்தியாவில் 1857ல் நடந்த காலனி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து 1871 பாரீஸ் கம்யூன் வரை, உலகத்தின் எல்லா இடங்களிலும் சுதந்திரத்துக்கான, சோசலிசத்துக்கான போராட்டங்களை உன்னிப்பாக கவனித்தார்; அவை பற்றிய பகுப்பாய்வு மேற்கொண்டார்; அவற்றை ஊக்கப்படுத்தினார்.

சமூகம் பற்றிய தனது ஆய்வில், மார்க்ஸ், வர்க்கங்களை மய்யமான பாத்திரம் கொண்டவையாகவும், அவற்றின் போராட்டங்களை சமூக வளர்ச்சிக்கான கருவான உந்துதலாகவும் கொண்டார். ஒரு சமூகத்தின் ஆளும் வர்க்கங்கள் செல்வாதாரங்கள் மீதும் பொருளுற்பத்தி மீதும் அவற்றுக்கு இருக்கிற கட்டுப்பாடு மூலம் மட்டும் ஆட்சி செய்யவில்லை, அரசு, அதன் சட்டங்கள், ஒடுக்குமுறை எந்திரம் ஆகியவற்றின் மீதும், மனரீதியான உற்பத்தி என்ற தளத்திலும் அதாவது கருத்துகளை உற்பத்தி செய்வது மற்றும் அவற்றை முறைப்படுத்துவது என்ற தளத்திலும் ஆட்சி செய்கிறது.

‘எல்லா கால கட்டங்களிலும் ஆளும் வர்க்கக் கருத்துகள் ஆள்கிற கருத்துகள், அதாவது, சமூகத்தின் பொருளாயத சக்தியை ஆளும் வர்க்கம், அதே நேரத்தில் அதன் அறிவுரீதியான சக்தியையும் ஆள்கிறது’ என, பெரிதும் கொண்டாடப்பட்ட அவரது ‘ஜெர்மானிய கருத்தியல்’ நூலில் 1845ல் மார்க்ஸ் சொல்கிறார். ஆக, வர்க்கப் போராட்டம் பற்றிய மார்க்சிய வரையறை, பொருளாதாரம், அரசியல், சமூகம், கலாச்சாரம் மற்றும் அறிவுசார் தளம் என எல்லா கோணங் களிலும் ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கத்தை எதிர்க்கிறது.

முதலாளித்துவ யுகத்தில் ஆளுகிற கருத்து, மூலதனம் முடிவற்றது, இயல்பானது, மந்திரத்தன்மை கொண்டது, வெற்றி கொள்ள இயலாதது என மூலதனம் பற்றிய மயக்கத்தைத் தரும், முதலாளித்துவத்தார் அல்லது முதலாளித்துவ வர்க்கமே மிகவும் நாகரிக வளர்ச்சியடைந்த வர்க்கம் என, முதலாளித்துவ ஆட்சியே அதிஉன்னத ஆட்சி, ஜனநாயகபூர்வமான ஆட்சி என போற்றிப் புகழும் கருத்தாகும். தனது எழுத்துகளில் மார்க்ஸ் இந்த முகத்திரையை கிழித்தெறிந்தார்; முதலாளித்துவ ஆட்சி இயல்பானது, நிரந்தரமானது, அதிஉன்னதமானது என்ற இந்த கருத்துக்கு சவால்விடுகிற ஒவ்வொரு முரண்பாட்டையும் பகுப்பாய்வு செய்தார்; தவிர்க்க முடியாமல் அவ்வப்போது நெருக்கடியில் சிக்கும் மூலதனத்தின் இயக்க விதிகளை, இது வரையில் அறியப்படாத அந்த விதிகளை தெளிவாக முன்வைத்தார்; அடிமைத்தனத்தை சுதந்திரம் என்றும் போரை அமைதி என்றும் கொள்ளையை வளம் என்றும் அழிவை வளர்ச்சி என்றும் காட்ட முனையும் எல்லா போலித்தனத்தையும் அம்பலப்படுத்தினார். அருவமான கோட்பாடுகள் அடிப்படையிலோ, கற்பனாவாத கனவுகள் அடிப்படையிலோ அல்லாமல், நிலவுகிற சமூக சக்திகளின் இந்த உண்மையான இயக்கத்தின் மூலம்தான், கருத்துகளின் இந்த விடாப்பிடியான போராட்டங்கள் மூலம்தான், சோசலிசம் மற்றும் கம்யூனிசம் நோக்கிய, முழுவதுமான மானுட விடுதலை நோக்கிய மானுடத்தின் முன்னோக்கிய அணிவகுப்பை மார்க்ஸ் கண்டார்.

அவரது வாழ்நாளிலும் அவரது மறைவுக்குப் பிறகும் #மார்க்ஸ்பொருத்தப்பாடுஇழந்துவிட்டார் என்றும் காலாவதியாகிவிட்டார் என்றும் மீண்டும் மீண்டும் அறிவிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் திரும்பி வருகிறார்; அடுத்தடுத்த தலைமுறைகள் அவரது எழுத்துகளில் ஏதோ ஒரு புதிய ஒளியை கண்டறிந்து கொள்கின்றன; அன்றாட பிரச்சனைகளை புரிந்துகொண்டு தீர்வு காண அவர்களுக்கு உதவுகிறார். சோவியத் யூனியன் வீழ்ச்சியுடன் சேர்த்து மார்க்சின் கருத்துகளையும் ஒரு வழியாக புதைத்தாகிவிட்டது என்று நம்பிய முதலாளித்துவ வெற்றிவாத கருத்தியலாளர்களுக்கு வரலாறு குரூரமான ஆசிரியராக இருந்தது. வரலாறு முடிந்துவிட்டது என்று அவர்கள் பிரகடனப்படுத்திய குறுகிய காலத்துக்குள்ளாகவே சர்வதேச முதலாளித்துவம் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை எதிர்கொண்டது.

1930களின் மாபெரும் நெருக்கடியில் இருந்து, மிகவும் நீண்ட, கடுமையான நெருக்கடிகள் விரட்டுவதால், பெருங்குழப்பமும் கடைசலும் நிகழும் இன்றைய நிலைமையை புரிந்துகொள்ள, முதலாளித்துவ சிந்தனையாளர்கள் கூட இன்று மீண்டும் மார்க்சுக்கு திரும்புகிறார்கள்.

பல்வேறு கருத்தியல் நீரோட்டங்களையும் சேர்ந்த, இந்திய முற்போக்காளர்களின் சிந்தனையாளர்களின் பெரும்பிரிவினர், மார்க்சை அறிந்திருக்கின்றனர்; மதிக்கின்றனர்; படிக்கின்றனர். மறுபுறம், மார்க்ஸ் தவறாக புரிந்து கொள்ளப்படுவதும் தவறாக வியாக்கியானப்படுத்தப்படுவதும் கூட பரவலாக நடக்கிறது.

காலனியாக்கத்தின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும், ‘தேங்கிக் கிடந்த பின்தங்கிய இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் நுழைந்தது வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட ஒரு முற்போக்கு தலையீடு’ என்று மார்க்ஸ் சொன்னதாக வாதிடுகிறார்கள். இந்தியா பற்றிய மார்க்சின் பார்வையை இதை விட தவறாக புரிந்துகொள்ள முடியாது; வியாக்கியானப்படுத்த முடியாது.

முதலாளித்துவ நாடுகளின் சட்டத்தால் முறைப்படுத்தப்பட்டதுபோல் தெரிகிற சூழலில் மட்டும் மூலதனம் இயங்குவதில்லை என்பதில் மார்க்ஸ் மிகவும் தெளிவாக இருந்தார். காலனிய கொள்ளை, உலகம் முழுவதும் வன்முறை நடவடிக்கைகள் மூலம் மூலதனக் குவிப்பு என்ற யதார்த்தத்தை, இவைதான் உண்மையில் மூலதனம் எழுவதற்கான நிபந்தனைகளை உருவாக்கின என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

‘ஒரு கன்னத்தில் பிறப்பில் ஏற்பட்ட ரத்தக் கறையுடன் பணம் உலகத்துக்கு வந்ததென்றால், மூலதனம் தலை முதல் கால் வரை அதன் மயிர்க்கால் ஒவ்வொன்றிலும் ரத்தமும் சகதியும் சொட்டச் சொட்டப் பிறந்தது’ என்று அவர் ஆழமாக அறிந்திருந்தார். (மூலதனம், தொகுப்பு 1, அத்தியாயம் 31: தொழில் முதலாளித்துவத்தின் மூலத் தோற்றம்).

இந்தியாவின் குறிப்பான பின்னணியில், பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் மிருகத்தனத்தை, அதன் கொள்ளையை, சித்திரவதையை, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கினார்; 1853 ஜூன் மாதம் நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன் பத்திரிகைக்கு ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி’ என்ற தலைப்பில் மார்க்ஸ் எழுதிய கட்டுரையில்,

‘இந்துஸ்தானுக்கு பிரிட்டிஷ் உருவாக்கியிருக்கிற துன்பம், இதற்கு முன்பு இந்துஸ்தான் சந்தித்திராத, சாரத்தில் வேறுபட்ட, எல்லையற்ற தீவிரமான தன்மை கொண்டது…. முதலாளித்துவ நாகரிகத்தின் ஆழமான போலித்தன்மையையும் உள்ளார்ந்த மிருகத்தனத்தையும் நாம் இப்போது கண் முன் பார்க்கிறோம்; தனது சொந்த நாட்டில் அது மதிப்பிற்குரிய வடிவங்களை கொண்டுள்ளது; காலனிகளில் அது ஆடையின்றி நிற்கிறது’ என்கிறார்.

அதே நேரம் மார்க்சைப் பொறுத்த வரை, இந்தியாவில் உள்ள கிராம சமூகங்கள் அமைதி மற்றும் வளம் நிறைந்த பேரானந்தத் தீவுகள் அல்ல; அவை ‘சாதி மற்றும் அடிமைத் தனம் என்ற வேறுபாடுகளால் மாசுபட்டிருந்தன; இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் அதிகாரத்துக்கும் சாதிகள் தீர்மானகரமான தடைகள்’ என்றார்.

இந்தியாவில் ரயில்வேயை துவங்கியது ஒரு புரட்சிகர நடவடிக்கை என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெருமை பேசியபோது, ‘ஆங்கிலேய முதலாளித்துவத்தார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்தப்படுத்தப்பட்டாலும், அவற்றில் எதுவும் வெகுமக்களை விடுதலை செய்யாது; அவர்களது சமூக நிலைமைகளை பொருளாயதரீதியாக மாற்றி அமைக்காது’ என்று 1853 ஜூலையில் மார்க்ஸ் எழுதினார். அதே கட்டுரையுடன் ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்’ என்ற தலைப்பில் எழுதியபோது, ‘இப்போது ஆளும் வர்க்கமாக இருக்கிற பிரிட்டனுக்குப் பதில் தொழில்துறை பாட்டாளி வர்க்கம் வரும் வரையிலோ அல்லது ஆங்கிலேய நுகத்தடியை தாங்களாகவே முழுவதுமாக தூக்கியெறியும் அளவுக்கு வலுவாக இந்தியர்கள் வளரும் வரையிலோ, அவர்கள் மத்தியில் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தார் விட்டுச் சென்றுள்ள சிதைந்து கிடக்கிற சமூகத்தின் புதிய கூறுகளின் கனிகளை இந்தியர்கள் அறுவடை செய்ய மாட்டார்கள்’ என்று எழுதினார்.

ஆக ஜூலை 1853லேயே, இந்தியாவின் முதல் சுதந்திரப் போரை நடத்த இந்தியர்கள் எழுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே முழுமையான இந்திய விடுதலை என்ற பிரச்சனையை மார்க்ஸ் முன்வைக்கிறார்.

‘மதம் மக்களின் அபினி’ என்று மார்க்ஸ் மதத்தை இழிவுபடுத்திப் பேசினார், எல்லா மதங்களையும் தடை செய்ய வேண்டும் என்று சொன்னார் என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. இது மதம் தொடர்பான மார்க்சின் கருத்துகள் பற்றிய, கெடுநோக்கம் கொண்ட தவறான வியாக்கியானம் இல்லை என்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட எளிமைப்படுத்துதல் ஆகும். மக்களுக்கு அபினி என்ற சொற்றொடர் அந்தப் பத்தியின் இறுதியில் வருகிறது.

‘மதரீதியான துன்பங்கள், ஒரே சமயத்தில், உண்மையான துன்பத்தை வெளிப்படுத்துவதும் உண்மையான துன்பத்துக்கு எதிர்ப்பும் ஆகும். மதம் ஒடுக்கப்பட்ட உயிரினங்களின் நெடுமூச்சு. இதயம் இல்லாத உலகின் இதயம். ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மா. அது மக்களின் அபினி’. ஆக, மார்க்சியம் எப்போதும் ‘இதயமற்ற உலகை’, ‘ஆன்மா இல்லாத நிலைமைகளை’ மாற்றியமைப்பதில் கவனம் குவிக்கிறது; மதம் தனிநபர் விசயமாக கருதப்பட வேண்டும், அரசிடம் இருந்தும், அரசு நிர்வகிக்கிற பொது விவகாரங்களில் இருந்தும் அது கறாராக பிரித்து நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மார்க்சின் 200ஆவது பிறந்த நாளை நாம் அனுசரிக்கும்போது, இந்தியாவில், வெறுப்பு, பொய்கள், வன்முறை ஆகியவற்றின் மூலம் கருத்தியல் விவாதங்களை எதிர்கொள்ள முனையும் மிகவும் மோசமான மதவெறி, இருண்மைவாத ஆட்சியாளர்கள் குழு ஒன்றின் ஆட்சியின் கீழ் நாம் இருக்கிறோம். திரிபுராவில் அவர்கள் பெற்ற வியப்புக்குரிய வெற்றியின் இறுமாப்பு தலைக்கேறியபோது, லெனின் சிலையை இடித்துத் தள்ளினார்கள். அவர் இந்தியாவுக்கு தொடர்பற்ற அந்நிய நாட்டுக்காரர் என்றார்கள். மார்க்ஸ் பற்றியும் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். இவர்கள்தான், அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து இந்திய வளங்களை கொள்ளையடிக்க அழைப்பு விடுப்பார்கள். ட்ரம்ப்தான் உலகின் அதிஉயர்ந்த தலைவர் என்று சொல்லி அவர் முன் மண்டியிடுவார்கள். வரலாற்றில் சற்று பின் சென்று பார்த்தால், அவர்களது கருத்தியல் முன்னோர்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்து இருந்ததை நாம் பார்க்க முடியும்.

ஒரு கருத்தோ அல்லது ஓர் அறிவாளியோ இந்தியாவைச் சேர்ந்தவரா, அந்நிய நாட்டவரா என்று பார்க்கும் அற்பமான வேறுபடுத்துதல் நம்மை தவறாக அழைத்துச் சென்றுவிடாமல் இருக்க, ஆர்எஸ்எஸ் எப்போதும் அந்நிய நாட்டு திருவுருக்களை வழிபட்டதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எதேச்சையாக, அடால்ஃப் ஹிட்லர் என்ற இன்னொரு ஜெர் மானிய திருவுருவை அவர்கள் வழிபட்டனர். மார்க்சையும் லெனினையும் எதிர்க்கும் இவர்கள், அம்பேத்கரையும் பெரியாரையும் எதிர்க்கிறார்கள். ஆக, கருத்து எங்கிருந்து உருவானது என்பதல்ல பிரச்சனை. அந்த கருத்தேதான் பிரச்சனை. சமத்துவம் மற்றும் நீதி, சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றுக்காக நிற்கும், போராடும் அனைவருக்கும் மார்க்ஸ் உத்வேகம் அளிப்பவராக இருப்பார். சமத்து வத்தின் எதிரிகளுக்கு அந்த பிரம்மாண்டமான புரட்சிகர பேராளுமை எப்போதும் மரண பயத்தையே தரும். மார்க்சின் கருத்துகளும் மரபும் மேலும் சக்தி பெறட்டும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.