மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன் இயக்கிய ‘எஸ். துர்கா’ படத்தை சென்னையில் திரையிடுகிறது தமிழ் ஸ்டுடியோ. ‘செக்ஸி துர்கா’ என பெயரிடப்பட்டு சர்ச்சை காரணமாக ‘எஸ். துர்கா’ என பெயர் மாற்றப்பட்டு வெளியான இந்தப் படம் திரையிடப்படும் திரையரங்கை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் திரை செயல்பாட்டாளருமான மோ.அருண். இதுகுறித்து தனது முகநூலில் எழுதியுள்ள அவர்,
“வெடிகுண்டு மிரட்டல்.
தமிழ்நாட்டு ஊடக நண்பர்கள் இப்போதாவது, இதையாவது எழுதி காவிகளின் இத்தகைய சுதந்திரத்தை கேள்வி கேளுங்கள். அலைப்பேசியில் அழைத்து மிரட்டிய நபரின் எண் தமிழ் ஸ்டுடியோவில் இருக்கிறது.
செக்சி துர்கா சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களில் திரையரங்கில் வெளியானது. இந்திய அரசின் திரைப்பட தணிக்கைத்துறை சான்றளித்த திரைப்படம். உலகம் முழுக்க பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளும் பெற்றுள்ளது. மே 6 தமிழ் ஸ்டுடியோ சென்னையில் இந்த திரைப்படத்தை திரையிடுகிறது. இவ்வளவு நாள் இதை கண்டுக்கொள்ளாத காவிகள் இப்போது, தமிழ் ஸ்டுடியோவிற்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். திரையரங்கை குண்டு வைத்து தகர்ப்போம் என்று அலைப்பேசியில் அழைத்து மிரட்டல் விடும் அளவிற்கு நாட்டில் காவிகளுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. என்ன செய்யலாம், நண்பர்களே திரையிடலுக்கு திரண்டு வாருங்கள். வேறு எப்படி இவர்களை எதிர்ப்பது. காவல்துறை, வழக்கறிஞர் நண்பர்கள் இது தொடர்பாக என்ன செய்யலாம் என்று உங்கள் கருத்துக்களை கூறுங்கள்” என தெரிவித்துள்ளார்.
‘எஸ். துர்கா’ வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கோடம்பாக்கம் எம். எம். திரையரங்கரத்தில் திரையிடப்படுகிறது. திரையிடல் குறித்த முழுவிவரம் வருமாறு…
“சாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)
06-05-2018, ஞாயிறு, மாலை 5 மணிக்கு.
MM திரையரங்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்.
சினிமா ரசனை வகுப்பெடுப்பவர் & கலந்துரையாடல்: சணல் குமார் சசிதரன்
திரையிடப்படும் படம்: செக்சி துர்கா – இயக்கம்: சணல் குமார் சசிதரன் (மலையாளம்)
நுழைவுக்கட்டணம்: ரூபாய் 150/- (தமிழ் ஸ்டுடியோ
உறுப்பினர்களுக்கு ரூபாய் 50/-)
நண்பர்களே சாமிக்கண்னு திரைப்படச் சங்கம் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு சங்க உறுப்பினர்களுக்கான படங்கள் திரையிட்டு திரைப்பட ரசனை குறித்து வகுப்பு மற்றும் கலந்துரையாடலையும் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மே மாதம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மிக முக்கிய படமான செக்சி துர்கா திரையிடப்பட்டு படத்தின் இயக்குனர் சணல் குமார் சசிதரன் அவர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற இருக்கிறது. அண்மையில் தணிக்கைத்துறை மற்றும் அரசு தலையீட்டால் மிக அதிக சிக்கலுக்கு உள்ளான படம் இது. சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தெரிவு செய்யப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களுக்காக திரையிடுவதற்கு தவிர்த்து மிக பெரிய சர்ச்சையை உருவாக்கியது தணிக்கை துறையும் அரசும். இது கலைஞனுக்கு இழைக்கப்பட்ட துரோகம். அந்த துரோகத்தில் இருந்து மீண்டு நீதிமன்ற துணையுடன் இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. எஸ். துர்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகே தணிக்கை துறை அனுமதி அளித்திருந்தாலும், தமிழ் ஸ்டுடியோ இந்த படத்தை செக்சி துர்கா என்கிற பெயரிலேயே அழைக்கும். திரையிடும். இது ஒரு இயக்கத்திற்கும், கலைஞனுக்குமான அடிப்படை உரிமை. இந்த நிகழ்வில் பங்கேற்று இயக்குனருடன் கலந்துரையாடுவது மிக முக்கிய சமூக செயல்பாடு. எனவே நண்பர்கள் பெரும் திரளாக பங்கேற்று ஆதரவு தாருங்கள்.
முன்பதிவு செய்ய: முன்பதிவு செய்ய: 9840644916, 044 42164630”