சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் அசாராம் பாபுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார் குஜராத்தின் முன்னாள் காவல் அதிகாரியான வன்ஸாரா. குஜராத்தில் இஸ்ரத் ஜஹான் மற்றும் சொராபுதீன் ஷேக் ஆகியோர் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர் பன்ஸாரா. இவர் புதன்கிழமை அசாராம் பாபுக்கு சிறுமி வன்கொடுமை வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனை குறித்து கருத்து சொல்லியிருக்கிறார். அதில்,
“சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்படவில்லை. அவரை தவறான முறையில் தொட்டார் என்பதற்காகத்தான் வழக்கு பதியப்பட்டது. நாங்கள் ஜோத்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டார் என்பது தவறானது. மருத்துவ பரிசோதனையின் போது சிறுமி கன்னித்தன்மையை இழக்கவில்லை என உறுதியாகியுள்ளது. இது ஒருபோதும் பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகாது.
77 வயதாகும் அசாராம் இந்து சனாதன தர்மத்தின் காவலராக உள்ளதால் அவரை ஒழிக்கும் எண்ணத்தோடு இந்த வழக்கு புனையப்பட்டிருக்கலாம்.” என்று நீண்ட விளக்கம் கொடுத்துள்ள வன்ஸாரா. இந்த வழக்கு மேல் முறையீடு செய்து ‘நீதி’ பெறுவோம் என தெரிவித்துள்ளார். சிறுமியை தவறான முறையில் தொட்டது தவறுதான் என்றாலும் அதை அசாராம் செய்தாரா என்பது தனக்கு தெரியவில்லை என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார் முன்னாள் காவல் அதிகாரி வன்ஸாரா.