பாலேசுவரம் காப்பக பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சி மீது உண்மை அறியும் குழு அதிருப்தி

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

பாலேசுவரம் கிராமத்தில் ஏழாண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வரும் புனித ஜோசப் மரணத் தருவாய் பராமரிப்பு நிலையம் ( St.Joseph’s Hospice ) எனும் சேவை நிலையத்தில் முறைகேடுகள் உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு அதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது; இதனை எதிர்த்து இந்த காப்பக பொறுப்பாளர் தாமஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உள்ளது. இந்த காப்பகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களை மீண்டும் அங்கு சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து பேரா.அ.மார்க்ஸ் முன் முயற்சியில் ஒரு உண்மையறியும் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் எம்.எச்.ஜவாகிருல்லா, தியாகு, பிரபா.கல்விமணி, வி.சீனிவாசன் (சுற்றுச்சூழல் ஆர்வலர்),  குடந்தை அரசன், ரைட்ஸ் பாபு,மு.களஞ்சியம்(திரைக் கலைஞர்),  ஆசீர் ( மக்கள் கண்காணிப்பகம்), வன்னி அரசு (விசிக).  உள்ளிட்ட 14 பேர் கலந்து கொண்டனர். அக்குழு தன் அறிக்கையை கடந்த இருபதாம் தேதி வெளியிட்டது.

மாவட்ட நிர்வாகம் அவசர கதியில் எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்தக் குழு கடுமையாக விமர்சித்து உள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி மீது அதிருப்தி

பாலேசுவரம் காப்பகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை விட்டிருந்தார். அக் கட்சியைச் சார்ந்த உ.வாசுகி தலைமையில் ஒரு குழு பாலேசுவரம் காப்பகம் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தது.இதனை ஜவாகிருல்லா தலைமையிலான குழு விமர்சித்து உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் அதிருப்தி தெரிவித்து உள்ளது.

” பிரச்சினைகளை முழுமையாக ஆராயாமல் அவசரக் கோலத்தில் சில அரசியல் கட்சித் தலைவர்களும் ,மனித உரிமைகளைப் பேசுகிறவர்களும் அறிக்கைகள் வெளியிடுவது தவறான கருத்துக்கள் பரவ வழி வகுத்து விடுகிறது. பின்னணியில் இருந்து இயங்கும் சில சமூக விரோத சக்திகளுக்கே அது பயன்படுகிறது.சமூக நலனில் அக்கறையுள்ளவர்கள் பொறுப்புடன் இத்தகைய பிரச்சினைகளை அணுக வேண்டும் என இக்குழு கேட்டுக் கொள்கிறது. ”

இந்து நாளிதழின் ” மௌனம் “

பாலேசுவரம் குறித்த உ.வாசுகி குழுவின் விசாரணைக்கு ஒரு முழுப்பக்கம் ஒதுக்கிய ஆங்கில இந்து நாளிதழ், ஒரு பரந்துபட்ட குழுவின் இரண்டு மாத கள ஆய்வுக்கு பின்பு வெளியான இந்த குழு குறித்து ஒரு வாக்கியத்தில் செய்திபோட்டு தன் ‘பத்திரிகா தர்மத்தை’ காப்பாற்றி விட்டது.

இதர பரிந்துரைகள்

” தெருக்களில் யாருமற்று இறக்கும் பரிதாபத்திற்குரிய மக்களுக்கு சாகும் நேரத்தில் ஒரு ஆறுதலையும் ஓரளவு சுகமான மரணத்தையும. அளிக்கும் பணி உன்னதமானது” எனவே இந்தக் காப்பகம் செயல்பட உரிய ஆதரவை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்; இப்படிப்பட்ட hospice குறித்து உரிய சட்ட விதிகள் இயற்றப்பட வேண்டும்; இந்த இல்லத்தில் இறப்பவர்களை புதைப்பதற்கு உரிய இடம்,வசதிகள் செய்து தர வேண்டும் ; இப்படிப்பட்ட இல்லங்களின் அனுமதியை நீடிப்பதற்கு ஆன்லைனில் வசதி வேண்டும் (இதனால் ஊழல் குறையும்); வயோதிகர் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பீட்டர் துரைராஜ், அகில இந்திய சிறுபான்மையினர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.