பேரா. அ. ராமசாமி
அதிகாரத்தின் இயக்கம் வெகுமக்களைப் பராமரிப்பதில் வெளிப்படுவதில்லை. திரள்மக்களை எதிர்கொள்வதில் பளிச்சென்று வெளிப்படும்.
வெகுமக்கள் ஆயிரக்கணக்கில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நகரக்கூடும். அதிகாரத்தின் கண்ணிகளே அவற்றை விழாவாக-கொண்டாட்டமாக மாற்றும். முடியாவிட்டால் போராட்டம் என அனுமதித்து நகர்ந்துவிடும்.திரள்மக்கள் நூற்றுக்கும் குறைவாக இருக்கலாம். 40 பேராகக்கூட இருக்கலாம். நான்காகக்கூட இருக்கலாம். அவர்கள் திரண்டவர்கள். திரட்டும் வல்லமை கொண்டவர்கள்.
கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் திரட்டும் வல்லமையாளர்கள் என்பது பேரரசியலுக்குப் புரியாமல் இருக்கலாம். நுண்ணரசியலாளர்களுக்குத் தெரியும். உடனடியாக எதிர்வினை ஆற்றுவார்கள். திரட்டும் வல்லமையை இல்லாமல் ஆக்கப்பார்ப்பார்கள். திரட்டும் வல்லமையை வைத்திருப்பவர்களே வெகுமக்களின் மனசாட்சி. அதனைக்கொலை செய்ய அனுமதித்து விடக் கூடாது. தங்கள் மனசாட்சிகளுக்கு ஆதரவாக வெகுமக்கள் திரள வேண்டும். அதற்கு முன் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பயமுறுத்தும் நுண்ணரசியலைக் கண்டிக்கவேண்டும்.
நான் கண்டிக்கிறேன். #SaveTamilJournalists