எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல் என்ற நிகழ்வை இன்று மாலை ஒருங்கிணைத்திருக்கிறது பிரக்ஞை பதிப்பகம். சென்னை டிஸ்கவர் புக் பேலஸில் நிகழும் இந்நிகழ்வுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமை ஏற்று நடத்துகிறார். நிகழ்வில் எழுத்தாளர் தமயந்தியின் ‘இந்த நதி நனைவதற்கல்ல’ (பிரக்ஞை வெளியீடு) கட்டுரை நூல், ’ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும்’(கருப்பு பிரதிகள் வெளியீடு) சிறுகதை தொகுப்பு, ’அதனினும் சிறப்பான உயிர்தெழுதல்’(பனிக்குடம்/ஆகுதி வெளியீடு) சில்வியா ப்ளாத்தின் கவிதைகள் மொழிபெயர்ப்பு நூல் குறித்து எழுத்தாளர்கள் பேச விருக்கிறார்கள்.