#நிகழ்வுகள்: 6வது சென்னை பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா 2018

மறுபக்கம் அமைப்பு மற்றும் மார்க் முல்லர் பவன் இணைந்து நடத்தும் 6வது பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா 2018 சென்னையில் நாளை தொடங்குகிறது.

ஏப்ரல் 15 முதல் 19 வரை நடக்கவிருக்கும் விழாவில் 50 படங்கள் திரையிடப்பட உள்ளன. சிறப்புரை, கலந்துரையாடலும் நிகழவிருக்கிறது.

கீழ்க்கண்ட பிரிவுகளில் படங்கள் திரையிடப்படவுள்ளன:

1) ரெட்ரோ (திரும்பிப்பார்த்தல்) : மூத்த இயக்குநர் சஞ்சய் மகரிஷி (புது தில்லி) இயக்கிய படங்கள்; அவருடன் கலந்துரையாடல்

2) மூத்த திரைப்பட விமர்சகர் அம்ரித் காங்கர் (மும்பை) அளிக்கும் சிறப்புரை மற்றும் தொகுத்தளிப்பு /படத்திரையிடல்

தலைப்பு : “மாறாத அடிப்படை” ராபர்ட் ப்ரெச்சான் – மணி கெளல் – அமித் தத்தா

3) நினைவு கூர்தல் : இந்திய ஆவணப்பட உலகின் மூத்த நட்சத்திரங்களில் ஒருவரான சுக்தேவ் இயக்கிய படங்கள்; பிலிம்ஸ் டிவிசன் தயாரித்தவை

கருத்துப்பகிர்வு: சதானந்த் மேனன், விமர்சகர்

4) கவனத்துக்குரிய இயக்குனர்: சாஜியா கான் (காஷ்மீர்) இயக்கிய ஆவணப்படங்கள். இந்திய இஸ்லாமியர்கள் பற்றிய பண்பாட்டுப்புரிதலைக் கொடுக்கும் படங்கள்.

5) கவனத்துக்குரிய இயக்குனர்: பெர்ன் லூட்ஸ்லர் (ஜெர்மனி) இயக்கிய 35மிமீ வடிவப் பரிசோதனைப் படங்கள்

6) ஓவியர்கள் இயக்கிய படங்கள்: மூத்த விமர்சகர் சி.எஸ்.வெங்கிடேஸ்வரன் (கேரளா) சிறப்புரை மற்றும் தொகுத்தளிப்பு/திரையிடல்

7) சமீபத்திய தமிழ்நாட்டு ஆவணப்படங்கள் & குறுப்படங்கள்
தேர்வு: அருண்மொழி, ஜோஸ்பின் டேவிட் & ஹரி

சமீபத்திய இந்திய ஆவணப்படங்கள்
தொகுத்தளிப்பு : அமுதன் ஆர்.பி.

9) சமீபத்திய பன்னாட்டு ஆவணப்படங்கள்
தொகுத்தளிப்பு: அமுதன் ஆர்.பி.

இடம்: மார்க்ஸ் முல்லர் பவன், சென்னை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.