வைத்தீஸ்வரியை வன்புணர்வு செய்தது எப்படி? பொதுமக்கள் முன்னிலையில் நடிக்க வைத்த போலீஸார்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரதூர் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தீஸ்வரி(16), புவனகிரியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல் வேலைக்கு சென்ற வைத்தீஸ்வரி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பரதூர் வயல்வெளிப்பகுதியில் வைத்தீஸ்வரி உடல் அழுகிய நிலையில் கிடந்தது. உடலில் காயங்கள் இருந்த நிலையில் அவர் அணிந்திருந்த சுடிதார் கிழிந்திருந்தது. இதனால் வைத்தீஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாரின்முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தினகரன் வெளியிட்டிருக்கும் செய்தி இது.

சமூக செயல்பாட்டாளரான மு. பேரறிவாளன் தனது சமூக வலைத்தள பதிவில், வைத்தீஸ்வரியின் பிறப்புறுப்புகளில் உடைந்த கண்ணாடி பாட்டில்கள் சொருகப்பட்டிருந்தன என்றும் அவர் பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பொதுமக்களும் இணைந்து குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருசிலர் இது அந்தப் பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினர் இப்படி செய்திருக்கலாம் என்றனர். இந்த யூகங்களையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு, உண்மையான குற்றவாளியை கண்டுபிடியுங்கள் என்றனர் சிலர்.

வைத்தீஸ்வரியின் சடலம் கைப்பற்ற ஒரு நாளில், வைத்தீஸ்வரியை பாலியன் வன்கொடுமை செய்து கொன்றதாக 25 வயதான மணிகண்டன் என்பரை கைது செய்திருக்கிறது காவல்துறை. இதே பகுதியைச் சேர்ந்த இவர், மருந்துகடை ஒன்றில் பணியாற்றுவதாகவும் வைத்தீஸ்வரியுடன்  பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரை ‘ஒருதலையாக’ காதலித்ததாகவும் போலீஸ் செய்து கூறுகிறது.

16 வயதில் உழைத்து தன் குடும்பத்துக்கு உதவியாய் இருந்த இளம்தளிர் வைத்தீஸ்வரி மதிப்பில்லா உயிரை திரும்பப் பெற முடியாது எனினும் குற்றவாளியை கண்டுபிடித்ததில் ஆறுதல் கொள்ளலாம். ஆனால், இன்ஸ்டண்ட் மரத்தடி நாட்டாமைகளாக மாறியிருக்கும் போலீஸின் செயல் அருவருக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது.

இரண்டு சாதிகளுக்கிடையே மோதல் வந்துவிடக்கூடாது என்கிற ‘நல்ல’ நோக்கத்தில் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டிருப்பதாக ஒரு தரப்பினர் சொல்லிக்கொள்கின்றனர். இதேபோன்று, அனைத்து தரப்பினர் பாதிக்கப்படும்போது, எதிர் தரப்பு மீது குற்றச்சாட்டு விழுந்துவிடக்கூடாது, நல்லிணக்கம் நிலவ வேண்டும் என போலீஸார் வீடியோ வெளியிடுவார்களா? நிச்சயம் மாட்டார்கள். ஆதிக்க சாதியினர் எந்த வகையில் சிக்கிவிடக்கூடாது என்கிற பதட்டத்தைத்தான் நாம் இதில் பார்க்கிறோம். நாம் அறிந்த வரையில் பெரும்பாலான தலித்துகள் வைத்தீஸ்வரியின் வன்கொடுமை கொலைக்கு ஒரு குறிப்பிட்ட சாதிதான் காரணம் என சொல்லவில்லை. சாதியைக் கடந்து கயவர்கள் இருப்பார்கள் என்பதை புரிந்தவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் போலீஸ் சமூக நல்லிணக்கத்தை பேணுகிறேன் என்ற போர்வையில் வைத்தீஸ்வரியை அவமானப்படுத்தியிருக்கிறது. குற்றவியல் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவே கருத முடிகிறது.

இந்த வீடியோவின் முடிவில், ஒரு காவலர் (உயர் அதிகாரியாக இருக்கக்கூடும்) “நீதான் இந்த தப்பை செஞ்சேன்னு முன்னாடியே சொல்லியிருக்கலாம் இல்ல.. அவங்களும் மன்னிச்சிருப்பாங்க. இப்ப கேளு..மன்னிப்பு கேளு..” என்கிறார். அதாவது ஒரு வார்த்தை ‘மன்னிச்சுடுங்க’ எனக் கேட்டவுடன், ஒரு அப்பாவி சிறுமியின் மரணத்துக்கு நீதி வழங்கிவிடுகிறார் அந்தக் காவலர்.  வழக்கு முடிந்தது! நீதிமன்றம், வழக்கறிஞர்கள், சிறைச்சாலை, சட்டங்கள் எதுவும் தேவையில்லை.

‘மன்னிச்சிடுங்க’ என்று சொன்னதும் ஊரார் அந்த குற்றம்சாட்டப்பட்டவரை அடிக்க பாய்ந்தார்கள். பாலியல் வன்கொடுமை காட்சியை ஊரார் முன் சித்தரிக்க வைத்த, மன்னிப்புக்கேட்க வைத்து நீதி வழங்கி காவலர்கள் மீது அந்த ஆத்திரம் பாய்ந்திருக்க வேண்டும்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.