கவிதைக்காரன் இளங்கோ
தூத்துக்குடி மாவட்டம்
A. குமரெட்டியாபுரம் கிராமம்
49 வது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டத்தில்…
அந்த ஊரைச் சேர்ந்த இச்சிறுவனின் கோஷமும் முழக்கமும் அசாதாரணமான ஒன்று…
ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தின் உணர்வையும் நொடியில் உசுப்பிவிடும் குரல்.
காயும் உச்சிவெய்யிலில் திசையெங்கும் எரிகிறது அந்தப் பிஞ்சுக் குரலின் வெப்பமேறிய அனல்…
காரணமிருக்கிறது..
தூத்துக்குடியில் வந்து தங்கள் போராட்டத்தைத் தொடங்கிய இம்மக்கள் போலீஸால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். விளைவாக, தங்கள் போராட்டத்தை ஸ்டெர்லைட் பாதிப்பை நேரிடையாக அனுபவித்துக்கொண்டிருக்கும் தங்கள் வீட்டு வாசலிலேயே அந்த வேப்ப மரத்தடியில் தொடர்கிறார்கள்.
அப்படியான போலீஸ் தாக்குதலில் மார்பில் எட்டி உதைக்கப்பட்டவன் தான் அச்சிறுவன். ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்பட்டும், சரியான சிகிச்சையளிக்கப்படாமல் ஊர் திரும்பியவன்.
அவன் பெயர் அருண்.
வயது 13. படிப்பது 7 ஆம் வகுப்பு.
தொண்டை நரம்புத் தெறிக்க முழங்கும் அவன் முழக்கம் அந்தப் பிராந்தியத்தையே அதிரச் செய்கிறது…!
கவிதைக்காரன் இளங்கோ, எழுத்தாளர். சமீபத்தில் வெளிவந்த அவருடைய சிறுகதை தொகுப்பு ‘பனிகுல்லா’.
முகப்புப் படம்: செல்வம் ராமசாமி.